இவை டிசம்பர் 1 - 15, 2014, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.
திருவாதிரைக் களி:-
திருவாதிரைக் களி:-
தேவையானவை :-
பச்சரிசி – 1 கப் கழுவி காயவைத்து ரவையாகப் பொடிக்கவும்.
பாசிப்பருப்பு – ¼ கப் சிவக்க வறுத்து ரவையாகப் பொடிக்கவும்.
கடலைப் பருப்பு - ¼ கப் சிவக்க வறுத்து ரவையாகப் பொடிக்கவும்
வெல்லம் – 200 கி
தேங்காய் – 1 மூடி துருவவும்
நெய் – 30 கி
முந்திரி – 5 இரண்டாக ஒடிக்கவும்.
கிஸ்மிஸ் – 10
உப்பு – 1 சிட்டிகை
ஏலக்காய்த் தூள் – 1 சிட்டிகை.
செய்முறை:-
3 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து வெல்லத்தைத் தட்டிப் போட்டுக் கரைந்ததும்
வடிகட்டி ஊற்றிக் கொதிக்க விடவும். அதில் அரிசி பருப்பு ரவைகளைத் தூவிக்கொண்டே
கிளறவும். உப்பும்,10 கிராம் நெய்யும் ஊற்றவும். கட்டி படாமல் கிளறி ப்ரஷர் பானில்
போட்டு ஒரு விசில் வரும்வரை வைத்து இறக்கவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸ்
பொரித்துப் போட்டுக் களியில் கொட்டி ஏலப்பொடி தூவி மிச்ச நெய்யையும் ஊற்றிக் கிளறி
நைவேத்தியம் செய்யவும்.
2. திருவரங்கத்து நெய் அப்பம் :-
தேவையானவை :-
கோதுமை மாவு – 2 கப்
தூள் வெல்லம் – 3/4 கப்
நெய் – பொரிக்கத் தேவையான அளவு.