பாசிப்பயறு கிச்சடி
தேவையானவை:-பச்சரிசி – 1 கப், உடைத்த பாசிப்பயறு ( மூங்க்தால் ) – ½ கப், தக்காளி – 1, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்., ஆம்சூர் – ½ டீஸ்பூன் ( மாங்காய் பொடி – தேவைப்பட்டால் ), உருளைக்கிழங்கு சின்னம் – 1 சிறுதுண்டுகளாக நறுக்கவும்., உப்பு – 1 டீஸ்பூன், தாளிக்க :- நெய் – 2 டீஸ்பூன், ஜீரகம் – 1 டீஸ்பூன்
செய்முறை:-பச்சரிசியைக் களைந்து உடைத்த பாசிப்பயறைச் சேர்த்து தக்காளி, மஞ்சள்தூள், சாம்பார் பொடி, 3 கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் குக்கரில் வைத்து எடுக்கவும். ஆறியதும் உப்பும் ஆம்சூர் பொடியும் சேர்த்து லேசாக மசித்து நெய்யில் ஜீரகம் தாளித்துப் போடவும்.