கோஸ் முளைகட்டிய பயறு துவட்டல்
தேவையானவை:- முளைவிட்ட பச்சைப்பயறு - 200 கிராம், முட்டைக்கோஸ் - 200 கிராம், பெரிய வெங்காயம் – 1, எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன்,உளுந்து - 1 டீஸ்பூன், வரமிளகாய் – 1, கருவேப்பிலை_ 1 இணுக்கு
செய்முறை :- முளை விட்ட பச்சைப் பயறை அரை வேக்காடு வேகவைத்துக் கொள்ளவும். முட்டைக்கோஸை கழுவி நறுக்கவும். வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும்., இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய்., கருவேப்பிலை போடவும். வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி முட்டைக்கோஸை சேர்த்து சிறிது வதக்கவும். வேகவைத்த பயறையும் உப்பையும் சேர்த்து சிறிது
தண்ணீர் தெளித்து மூடி போட்டு சிம்மில் 5 நிமிடம் வேகவிடவும். சூடாக சுண்டலாகவோ., சாம்பார்., குழம்பு சாதத்துக்கு தொட்டுக் கொள்ளவோ பரிமாறவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!