தேவையானவை:- காரட் - 1, பீன்ஸ் - 4, பச்சைப் பட்டாணி -அரை கப், அவித்த உருளைக்கிழங்கு - 2 , பெரிய வெங்காயம் - 1 , இஞ்சி - சிறு துண்டு, கொத்துமல்லித்தழை - ஒரு கைப்பிடி, மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், சோம்புத்தூள் - ஒரு சிட்டிகை, கரம் மசாலா - 1 சிட்டிகை, வெண்ணெய் - 2 டீஸ்பூன், பச்சைமிளகாய் -2, உப்பு - அரை டீஸ்பூன், நெய் + எண்ணெய் - 50 கிராம். மைதாமாவு - கால் கப், ரஸ்க் தூள் - அரை கப்.
செய்முறை:- காரட் பீன்ஸைக் கழுவிப் பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாய், பெரிய வெங்காயத்தைப் பொடியாக அரியவும். ஒரு பானில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், காரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, இஞ்சி போட்டு நன்கு வதக்கவும். இதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய், சோம்புத்தூள், போட்டு அவித்த உருளைக்கிழங்கு, வெண்ணெயைக் கலந்து நன்கு பிசையவும். நீள்சதுர வடிவில் கட்லெட்டுகளாகத் தட்டி வைக்கவும். மைதாவில் சிறிது உப்பு மிளகாய்த்தூள் தண்ணீர் சேர்த்துக் கட்லெட்டுகளை மாவில் தோய்த்து ரஸ்கில் புரட்டி, தட்டையான பேனில் மூன்று நான்காகப் போட்டு இருபுறமும் நன்கு வேகவைத்து மயோனிஸோடு பரிமாறவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!