ராஜ்மா மசால்
தேவையானவை:- ராஜ்மா - 1 கப், பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது, தக்காளி - 1 நறுக்கியது, பூண்டு - 4 (விரும்பினால்), மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன், மல்லிப் பொடி - 1 டீஸ்பூன், கரம் மசாலா பொடி - 1/4 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, உப்பு - 1/2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், சோம்பு - 1/4 டீஸ்பூன், பட்டை - 1 இன்ச் துண்டு, இலை - 1 துண்டு, கல்பாசிப்பூ - 1 துண்டு, எண்ணெய் - 5 மிலி
செய்முறை :- ராஜ்மாவைக் கழுவி 8 மணி நேரம் ஊறவைக்கவும். ப்ரஷர் குக்கரில் 4., 5 விசில் வரும் வரை வேகவைக்கவும். ஒரு பானில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து., சோம்பு போட்டு சிவந்ததும்., பட்டை., கல்பாசிப்பூ., இலை போடவும். பெரிய வெங்காயம்., தக்காளி., பூண்டு போட்டு., நன்கு வதக்கவும். மிளகாய்த்தூள்., மல்லித்தூள்., மஞ்சள்தூள்., கரம் மசாலா போட்டு உப்பு சேர்க்கவும். கடைசியாக வெந்த ராஜ்மாவைப் போட்டு நன்கு கிளறவும். 5 நிமிடம் மசாலா நன்கு சேரும் வரை வைக்கவும். சப்பாத்தியுடன் பரிமாறவும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக