எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 ஜூன், 2022

கருவேப்பிலைக் காய்ச்சல்

கருவேப்பிலைக் காய்ச்சல்

 


தேவையானவை :- கருவேப்பிலை – 1 கட்டு, புளி - 1 தக்காளி அளவு உருண்டைஉப்பு - 2 டீஸ்பூன்வரமிளகாய் – 5, கடுகு - 1 டீஸ்பூன்உளுந்து - 2 டீஸ்பூன்கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன் பெருங்காயம் - 1 இன்ச் துண்டுவெந்தயம் - 1/2 டீஸ்பூன்வறுத்த வேர்க்கடலை சுத்தம் செய்தது - 1 டேபிள் ஸ்பூன்தூள் வெல்லம் - 1 டீஸ்பூன்நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.


 

செய்முறை :-கருவேப்பிலையை சுத்தம் செய்து சிறிது நீர் விட்டு நன்கு அரைக்கவும். புளி., உப்பை இரண்டு கப் தண்ணீரில் ஊறப் போட்டுப் புளிச்சாறு எடுத்துக் கொள்ளவும்.. மிளகாய்களை இரண்டாகக் கிள்ளி விதை நீக்கவும்ஒரு பானில் எண்ணெயைக் காய வைத்து கடுகுஉளுந்து., கடலைப் பருப்பு., பெருங்காயம்., வெந்தயம்வரமிளகாய் போடவும்அவை சிவந்ததும் கருவேப்பிலை விழுதைப்போட்டுச் சிறிது வதக்கிப் புளிச்சாறை மஞ்சள்தூளுடன் கலந்து ஊற்றவும்நன்கு கொதிக்க வைத்து கெட்டியாகும் போது வெல்லத்தூள் சேர்க்கவும்அவ்வப்போது கிண்டி விடவும்ஓரங்களில் எண்ணெய் பிரியும் போது வேர்க்கடலையை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

 

ஞாயிறு, 26 ஜூன், 2022

புதினா புலவ்

புதினா புலவ்

 


தேவையானவை :- பாசுமதி அரிசி - 1 கப்பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது., தக்காளி - 1 பொடியாக அரிந்ததுஅரைக்க:- புதினா - 1 கட்டுகொத்துமல்லி - 1 கைப்பிடிபச்சை மிளகாய் - 1 அல்லது 2, தேங்காய் - 3 இன்ச் துண்டுஇஞ்சி - 1 இன்ச் துண்டுபூண்டு - 4 பல்சோம்பு - 1 டீஸ்பூன்சீரகம் - 1/2 டீஸ்பூன்மிளகு – 10, தாளிக்க :- எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்பட்டை - 1 இன்ச் துண்டுகிராம்பு – 2, ஏலக்காய் – 1, இலை - 1 இன்ச் துண்டுஅன்னாசிப் பூ - 1



 

செய்முறை :- புதினா., கொத்துமல்லியை கழுவி ., சுத்தம் செய்து மற்ற பொருட்களுடன் போட்டு நன்கு அரைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்அரிசியை நன்கு களையவும்ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து பட்டை ., கிராம்பு., ஏலக்காய்., இலை., அன்னாசிப்பூ எல்லாம் தாளிக்கவும்அதில் வெங்காயம்., தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்அரிசியை சேர்க்கவும்உப்பு சேர்த்து அரைத்த தண்ணீரை சேர்க்கவும்நன்கு கிளறி ஒன்று அல்லது இரண்டு விசில் வைத்து குக்கரை இறக்கவும்பத்து நிமிடம் கழித்து குக்கரைத் திறந்து சூடாக புதினா புலவை வெள்ளரி காரட் சாலட்., பைன் ஆப்பிள் ரெய்த்தா., அவித்த முட்டை., உருளைக்கிழங்கு சிப்ஸுடன் பரிமாறவும்..

வியாழன், 23 ஜூன், 2022

கொத்துமல்லி கட்லெட்

கொத்துமல்லி கட்லெட்


 

தேவையானவை :- முந்திரி – 8, கொத்துமல்லி – அரைக் கட்டு, கடலை மாவு – 2 டீஸ்பூன், அவித்த உருளைக்கிழங்கு – 1, ப்ரெட் – 3 ஸ்லைஸ், பெரிய வெங்காயம் – பாதி, கரம் மசாலா – 1 சிட்டிகை, மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், இஞ்சி – அரை இன்ச் துருவியது, பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது, வெண்ணெய் – 1 டீஸ்பூன், மைதா – அரை கப், மிளகாய்த் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், ப்ரெட் க்ரம்ப்ஸ் – கால் கப், , எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.


 

செய்முறை:- கொத்துமல்லியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் இஞ்சி பச்சை மிளகாய் வெங்காயத்தை வதக்கி கடலைமாவைப் போடவும். லேசாக வறுபட்டதும் கொத்துமல்லியைப் போட்டு கரம்மசாலா, மிளகாய்த்தூள் வெண்ணெயைப் போட்டு அரை டீஸ்பூன் உப்புப் போட்டு நன்கு புரட்டவும். வெந்து உருண்டதும் இறக்கி முந்திரியை உள்ளே வைத்து ஓவல் சைஸில் சின்னச் சின்னக் கட்லெட்டுகளாகச் செய்யவும். அவித்த உருளைக்கிழங்கில் ப்ரெட்டைப் போட்டு உப்பு மிளகாய்ப் பொடி போட்டு லேசாக நீர் தெளித்துப் பிசைந்து கப் போல செய்து கொத்துமல்லி கட்லெட்டுகளை இதனுள் வைத்து நன்கு உருட்டவும். மைதாவில் உப்பு மிளகாய்த்தூள் போட்டுக் கரைத்து கட்லெட்டுகளை நனைத்து ப்ரெட் க்ரம்ஸில் புரட்டி எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்

 

ஞாயிறு, 19 ஜூன், 2022

புதினா கொத்துமல்லி கருவேப்பிலை சூப்

புதினா கொத்துமல்லி கருவேப்பிலை சூப்


 

தேவையானவை:- (ஒரு கட்டு கருவேப்பிலை, ஒரு கட்டு புதினா, ஒரு கட்டு கொத்துமல்லியில்) ஆய்ந்த தளிர் இலைகள் மட்டும். – தலா ஒரு பெரிய கைப்பிடி அளவு எடுத்து அலசி வைக்கவும், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, பச்சைமிளகாய் – 1 , வேகவைத்த துவரம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், பட்டை – 1, இலை – 1, கல்பாசிப்பூ -1, சோம்பு -1/2 டீஸ்பூன், சீரகம் – ½ டீஸ்பூன், மிளகு – ½ டீஸ்பூன், மஞ்சள் பொடி – 1 சிட்டிகை, உப்பு – ½ டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன், பால் – 1 டேபிள் ஸ்பூன், மிளகுத்தூள் – ½ டீஸ்பூன்

 

செய்முறை:- பெரிய வெங்காயம், தக்காளியை நீளமாக நறுக்கிக்கொள்ளவும்.  பச்சைமிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து சோம்பு சீரகம் மிளகு, பட்டை, இலை, கல்பாசிப்பூ தாளித்து வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் ஆய்ந்து கழுவிய தளிர் இலைகள் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். மஞ்சள்தூள் உப்பு வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைக்கவும்.ஆறியதும் திறந்து பச்சை மிளகாயை எடுத்துப் போட்டு விட்டு  நன்கு மசித்து அந்தச் சாறை வடிகட்டவும். இரு முறை ஒரு கப் நீரூற்றிப் பிசைந்து வடிகட்டி எடுக்கவும்.இதில் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும். இறக்கி பாலும் மிளகுத்தூளும் கலந்து குடிக்கக் கொடுக்கவும்.

 

வியாழன், 16 ஜூன், 2022

வல்லாரை வத்தக்குழம்பு

வல்லாரை வத்தக்குழம்பு


 

தேவையானவை:- வல்லாரை - 2 கைப்பிடி, சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் பொடி - 1 சிட்டிகை, உப்பு - 2 டீஸ்பூன், புளி - ஒரு எலுமிச்சை அளவு. தாளிக்க:- எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி, கடுகு - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், வெந்தயம் -  டீஸ்பூன், பெருங்காயம் - 1/4 இன்ச் துண்டு, துவரம் பருப்பு -  1 டீஸ்பூன்

 

செய்முறை:- உப்புப் புளியைக் கரைத்து ஒரு டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி போட்டு வைத்துக் கொள்ளவும். கடாயில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம் துவரம்பருப்பு தாளித்துப் புளிக்கரைசலை ஊற்றவும். குழம்பு கொதிக்கும்போது பொடியாக அரிந்த வல்லாரையைப்  போடவும். குழம்பு வத்தி எண்ணெய் பிரிந்ததும் இறக்கி பரிமாறவும்.

 

ஞாயிறு, 12 ஜூன், 2022

தூதுவளை ரசம்

தூதுவளை ரசம்


 

தேவையானவை :- தூதுவளைக் கீரை - 1 சிறு கட்டுதுவரம் பருப்பு வேகவைத்த தண்ணீர் - 1 கப்தக்காளி – 1, வரமிளகாய் – 2, புளி - 1 நெல்லிக்காய் அளவுஉப்பு - 1 டீஸ்பூன்மிளகு ஜீரகப் பொடி - 1 டீஸ்பூன்மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்மல்லிப் பொடி - 1/4 டீஸ்பூன்வெள்ளைப் பூண்டு - 2 பல் ( விரும்பினால்), எண்ணெய் - 1 டீஸ்பூன்கடுகு - 1 டீஸ்பூன்ஜீரகம் - 1/2 டீஸ்பூன்வெந்தயம் - 1/4 டீஸ்பூன்பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு

 

 

செய்முறை :-தூதுவளையை சுத்தம் செய்து கழுவி துண்டுகளாய் வெட்டவும்லேசாக கல்லில் போட்டு நைத்து வைக்கவும்புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து உப்பு சேர்க்கவும்பருப்புத்தண்ணீரையும் சேர்க்கவும்தக்காளியைக் கரைத்து ., பூண்டை நசுக்கிப் போடவும்அதில் மிளகு ஜீரகப் பொடி., மஞ்சள் பொடி., தனியா பொடி போடவும்பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்தவுடன் ., ஜீரகம்., வெந்தயம்., பெருங்காயம் போடவும்இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய்., தூதுவளைக் கீரையைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி கரைத்த புளித்தண்ணீரை ஊற்றவும்நன்கு நுரை கூடி வரும் போது இறக்கி சூடாக சூப் போல அருந்தக் கொடுக்கவும் அல்லது குழைவான சாத்தோடு பரிமாறவும்இது உடல் வலி மற்றும் சளியை குணப்படுத்தும்.

 

புதன், 8 ஜூன், 2022

முருங்கைக்கீரை அடை

முருங்கைக்கீரை அடை

 


தேவையானவை:- பச்சரிசி – ½ கப்புழுங்கல் அரிசி- ½ கப்துவரம் பருப்புஉளுந்தம்பருப்புபாசிப்பருப்புகடலைப்பருப்பு – தலா ஒரு கைப்பிடி., முருங்கைக் கீரை – 1 கப் உதிர்த்தது, பெரிய வெங்காயம் – 1 பொடியாக அரியவும்தேங்காய் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்மஞ்சள் தூள் – 1 சிட்டிகை., வரமிளகாய் – 4, சோம்பு – ½ டீஸ்பூன் (அல்லது ) பெருங்காயம் – 1 துண்டுஉப்பு – ½ டீஸ்பூன்எண்ணெய் – 20 மிலி.

 

செய்முறை:-

பச்சரிசி புழுங்கல் அரிசியை உளுந்தம் பருப்பைக் கழுவி ஒன்றாக ஊறவைக்கவும்துவரம்பருப்புபாசிப்பருப்புகடலைப்பருப்பைக் கழுவி ஒன்றாக ஊறவைக்கவும். இரண்டு மணி நேரம் ஊறியபின் மிக்ஸியில் முதலில் மிளகாய் சோம்பு உப்புப் போட்டு அரைத்து அதில் அரிசி உளுந்தைப் போட்டுக் கொரகொரப்பாக அரைக்கவும்அடுத்து பருப்பு வகைகளையும் பெருபெருவென்று அரைத்து எடுக்கவும்முருங்கைக்கீரை, உப்பு, மஞ்சள் பொடிதேங்காய் துருவல்பொடியாக அரிந்த வெங்காயம் போட்டு நன்கு கலக்கி ஐந்து நிமிடம் வைக்கவும்அதன் பின் தோசைக்கல்லில் அடைகளாக ஊற்றி தக்காளிச் சட்னியுடன் பரிமாறவும்.

 

ஞாயிறு, 5 ஜூன், 2022

முள்ளுமுருங்கை தோசை

முள்ளுமுருங்கை தோசை



 

தேவையானவை :- முள்ளு முருங்கை இலை – 15, இட்லி அரிசி – 1 கப்சீரகம் – ¼ டீஸ்பூன்சின்ன வெங்காயம் – 6 பொடியாக அரியவும்., உப்பு – ¼ டீஸ்பூன்எண்ணெய் – 10 மிலி

 

செய்முறை:- முள்ளு முருங்கை இலையைக் கழுவி வைக்கவும்இட்லி அரிசியைக் களைந்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்மிக்ஸியில் அரிசி சீரகம்முள்ளு முருங்கை இலை உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்சின்ன வெங்காயத்தைக் கலந்து சிறிது நேரம் வைத்திருந்து கல்லில் எண்ணெய் தடவி தோசைகளாக வார்க்கவும்வெங்காயச் சட்னியுடன் பரிமாறவும்.

 

 

வியாழன், 2 ஜூன், 2022

அரைக்கீரை துக்கடா

அரைக்கீரை துக்கடா

 


தேவையானவை:- அரைக்கீரை – 1 கட்டுகடலை மாவு – 1டேபிள் ஸ்பூன்மைதாமாவு – ரெண்டு டீஸ்பூன்சோளமாவு – 2 டீஸ்பூன்கோதுமை மாவு – 2 டீஸ்பூன்பச்சரிசி மாவு – 2 டீஸ்பூன்மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கவும்உப்பு – கால் டீஸ்பூன்வெண்ணெய் – 1 டீஸ்பூன்எண்ணெய் பொரிக்கத்தேவையான அளவு.

 

செய்முறை:- அரைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்ஒரு பேசினில் கடலைமாவுமைதாமாவுசோளமாவுகோதுமைமாவுபச்சரிசி மாவு போட்டு மிளகாய்த்தூள்உப்பு வெண்ணெய் சேர்த்து நன்கு பிசறிவிடவும்அதில் கீரையையும் வெங்காயத்தையும் போட்டுப் பிசறி விடவும்காய்ந்த எண்ணெயில் சிறிது ஊற்றி தண்ணீர் தெளித்துப் பிசையவும்எண்ணெயைக் காயவைத்து மிகச் சிறியதாக உதிர்த்து வேகவைத்து பொன்னிறமானதும் எடுக்கவும்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...