கருவேப்பிலைக் காய்ச்சல்
தேவையானவை :- கருவேப்பிலை – 1 கட்டு, புளி - 1 தக்காளி அளவு உருண்டை, உப்பு - 2 டீஸ்பூன், வரமிளகாய் – 5, கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 2 டீஸ்பூன், கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன் பெருங்காயம் - 1 இன்ச் துண்டு, வெந்தயம் - 1/2 டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை சுத்தம் செய்தது - 1 டேபிள் ஸ்பூன், தூள் வெல்லம் - 1 டீஸ்பூன், நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை :-கருவேப்பிலையை சுத்தம் செய்து சிறிது நீர் விட்டு நன்கு அரைக்கவும். புளி., உப்பை இரண்டு கப் தண்ணீரில் ஊறப் போட்டுப் புளிச்சாறு எடுத்துக் கொள்ளவும்.. மிளகாய்களை இரண்டாகக் கிள்ளி விதை நீக்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுந்து., கடலைப் பருப்பு., பெருங்காயம்., வெந்தயம், வரமிளகாய் போடவும். அவை சிவந்ததும் கருவேப்பிலை விழுதைப்போட்டுச் சிறிது வதக்கிப் புளிச்சாறை மஞ்சள்தூளுடன் கலந்து ஊற்றவும். நன்கு கொதிக்க வைத்து கெட்டியாகும் போது வெல்லத்தூள் சேர்க்கவும். அவ்வப்போது கிண்டி விடவும். ஓரங்களில் எண்ணெய் பிரியும் போது வேர்க்கடலையை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.