எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 22 நவம்பர், 2013

LEMON PICKLE, எலுமிச்சங்காய் ஊறுகாய்.

LEMON PICKLE, எலுமிச்சங்காய் ஊறுகாய்.

LEMON PICKLE.:-

NEEDED:-

LEMON - 20 NOS.
TIL OIL ( GINGELLY ) -  100 ML.
RED CHILLI POWDER - 100 GM
SALT - 100 GM
MUSTARD - 1 TSP
ASAFOETIDA - 1 PINCH

METHOD:-

WASH AND DRY THE LEMONS IN A CLOTH. CUT INTO 8 PIECES AND REMOVE THE SEEDS. PUT IT IN A JAR WITH SALT. COVER IT WITH CLOTH & KEEP ASIDE FOR 2 DAYS. THEN SHAKE WELL ONCE IN A DAY . AFTER 4 DAYS KEEP THE JAR IN SUNLIGHT FOR 2 HOURS.

HEAT OIL IN A PAN. ADD MUSTARD AND ASAFOETIDA. OFF THE STOVE AND KEEP THE OIL FOR COOLING. AFTER COOLING ADD THE RED CHILLI POWDER ALONG WITH MARINATED LEMON &  SALT.  STIRR WELL AND PLACE IT IN SMALL JARS . USE IT AFTER 2 DAYS. IT WILL BE SERVED WITH CURD RICE OR CHAPPATHIS.

எலுமிச்சங்காய் ஊறுகாய்:-

தேவையானவை:-

எலுமிச்சங்காய் - 20
நல்லெண்ணெய் ( எள் ) -  100 மிலி
சிவப்பு மிளகாய்த்தூள் - 100 கி
உப்பு - 100 கி
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை.

செய்முறை:-
எலுமிச்சங்காய்களைக் கழுவித் துடைக்கவும். எட்டுத் துண்டுகளாக வெட்டி விதை நீக்கவும். உப்பைச் சேர்த்து ஒரு ஜாடியில் போட்டு வேடு கட்டி 2 நாட்கள் வைக்கவும். அதன் பின் நான்கு நாட்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு தரம் குலுக்கி வைக்கவும். 4 நாட்கள் கழிந்தபின் அதை அப்படியே வெய்யிலில் 2 மணி நேரம் வைத்து எடுக்கவும்.

ஒரு பானில் நல்லெண்ணையை ஊற்றிக் காயவைத்துக் கடுகு, பெருங்காயப் பொடி  போடவும்.  அடுப்பை அணைத்து பானை இறக்கி வைக்கவும். ஆறியதும் மிளகாய்த்தூளுடன், ஊறிய எலுமிச்சை, உப்புக் கலவையைச் சேர்க்கவும்.. நன்கு கிளறி சின்ன ஜார்களில் மாற்றவும்.

இரண்டு நாட்கள் கழித்து உபயோகிக்கவும். இது தயிர்சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட ஏற்றது.

CHAYOTE MOONG DAL KOOTU, சௌ சௌ சிறுபருப்புக் கூட்டு.

CHAYOTE MOONG DAL KOOTU, சௌ சௌ சிறுபருப்புக் கூட்டு.

CHAYOTE MOONG DAL KOOTU:-

NEEDDED:-
CHAYOTE - 1 NO
MOONG DAL - 1/2 CUP
SMALL ONION - 6 NOS.
GREEN CHILLIE - 1 NO. SLIT OPEN
JEERA - 1/2 TSP
ORID DHAL - 1/2 TSP
GHEE - 1 TSP
CURRY LEAVES - 1 ARK
SALT - 1/3 TSP

METHOD:-

PEEL WASH , REMOVE THE SEED AND DICE THE CHAYOTE. PUT MOONG DAL, CHAYOTE, CHOPPED ONION, JEERA, GREEN CHILLIE  IN A PAN AND POUR  ENOUGH WATER TO IMMERSE IT. PRESSURE COOK FOR 1 OR 2 WHISTLE. REMOVE FROM FIRE AND AFTER COOLING OPEN THE LID AND ADD SALT AND CURRY LEAVES WITH GHEE.

ANOTHER METHOD, HEAT GHEE IN A LADLE .ADD ORID DHAL AND JEERA. WHEN IT SPLUTTERS ADD CURRY LEAVES. POUR THE SEASONING TO THE KOOTU AND STIRR WELL. SERVE HOT. WITH GHEE RICE OR VATHAK KULAMBU RICE. OR WITH CHAPPATHIS.


சௌ சௌ சிறுபருப்புக் கூட்டு:-
தேவையானவை:-
சௌ சௌ - 1
பாசிப்பருப்பு - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 6
பச்சை மிளகாய் - 1 இரண்டாக வகிரவும்.
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உளுந்து - 1/2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - 1/3 டீஸ்பூன்.

செய்முறை:-
சௌ சௌவைத் தோல் சீவிக் கழுவி விதை நீக்கி சதுரத் துண்டுகளாக்கவும். பாசிப்பருப்பு, சௌசௌ, பொடியாக அரிந்த சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம் இவற்றை ஒரு ப்ரஷர் பானில்போட்டு மூழ்கும் அளவு நீர் ஊற்றி ஒரு விசில் வரும் வரை வைக்கவும். இறக்கி உப்பு சேர்த்து நெய், கருவேப்பிலை போட்டு லேசாக மசிக்கவும்.

இன்னொரு முறையில் ஒரு இரும்புக் கரண்டியில் நெய்யைக் காயவைத்து உளுந்து சீரகம் வறுத்து கருவேப்பிலை சேர்த்துக் கூட்டுக் கறியில் கொட்டிக் கிளறி நெய் சாதம், வத்தக் குழம்பு சாதம், அல்லது சப்பாத்தியோடு பரிமாறவும்.

BEETROOT COCONUT FRY. பீட்ரூட் தேங்காய்ப் பொரியல்.

BEETROOT COCONUT FRY. பீட்ரூட் தேங்காய்ப் பொரியல்.

BEETROOT COCONUT FRY.

NEEDED:-
BEETROOT - 2 NOS.
GRATED COCONUT  - 1 TBLSPN
OIL - 1 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
RED CHILLIE - 1 NO
CURRY LEAVES - 1 ARK.
SALT - 1/3 TSP

METHOD:-
PEEL WASH AND DICE THE BEETROOT. PRESSURE COOK WITH 3 CUPS OF WATER AND DRAIN  THE STOCK FOR SOUP. HEAT OIL IN A PAN ADD MUSTARD.  WHEN IT SPLUTTERS ADD ORID DHAL, WHEN IT BECOMES BROWN ADD HALVED RED CHILLIE AND CURRY LEAVES.  SAUTE FOR A MINUTE AND ADD THE BOILED BEETROOT. STIRR WELL.ADD SALT AND GRATED COCONUT. STIRR AGAIN AND SERVE HOT WITH SAMBAR RICE OR VATHAK KULAMBU RICE.


பீட்ரூட் தேங்காய்ப் பொரியல்.

தேவையானவை:-
பீட்ரூட் - 2
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
கருவேப்பிலை - 1 இணுக்கு.
உப்பு - 1/3 டீஸ்பூன்

செய்முறை:-
பீட்ரூட்டைத் தோல் சீவி சதுரத் துண்டுகளாக நறுக்கவும். பிரஷர் குக்கரில் 3 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து அந்தத் தண்ணீரை சூப் செய்ய எடுத்துக் கொள்ளவும்.. பீட்ரூட்டை வடிகட்டி வைக்கவும்.

ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் , வரமிளகாயை இரண்டாக கிள்ளிப் போடவும், அதில் கருவேப்பிலையைப் போட்டுப் பொறிந்ததும் வடிகட்டிய பீட்ரூட்டைப் போடவும். நன்கு கிளறவும். உப்பையும், தேங்காய்த் துருவலையும் சேர்த்துக் கிளறி சாம்பார் சாதம் அல்லது வத்தக் குழம்பு சாதத்தோடு பரிமாறவும்.

PLANTAIN FLOWER VADAI. வாழைப்பூ வடை

PLANTAIN FLOWER VADAI. வாழைப்பூ வடை

PLANTAIN FLOWER VADAI :-

NEEDED:-

PLANTAIN FLOWER - 1/2

SOAKED THUVAR DHAL- 1 CUP

BIG ONION - 1 CHOPPED

RED CHILLIES- 5 NOS

SOMPH - 1 TSP

JEERA - 1/2 TSP

PEPPER CORN - 5

COCONUT - 2 INCH PIECE

OIL - FOR FRYING.

SALT - 1 TSP


METHOD :-

REMOVE THE VEINS FROM EACH FLORET. GRIND RED CHILLIES., SOMPH., JEERA., PEPPER., SALT., COCONUT. SEPERATELY GRIND THE THUVAR DHAL COARSLY. LASTY GRIND THE FLORETS.  ADD THE GROUND MASALA , DHAL, FLORETS AND ONION . MIX WELL. . 
 
HEAT OIL IN A PAN AND FRY THE VADAIS. SERVE HOT WTH SAMBAR RICE OR CURD RICE.

வாழைப்பூ வடை:-

தேவையானவை:-

வாழைப்பூ - 1/2

ஊறவைத்த துவரம் பருப்பு - 1 கப்

பெரிய வெங்காயம் - 1

சிவப்பு மிளகாய் - 5

சோம்பு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

மிளகு - 5

தேங்காய் - 2 இன்ச் துண்டு

எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.
 
உப்பு - 1 டீஸ்பூன்.


செய்முறை:-

வாழைப்பூக்களை நரம்பு எடுத்து சுத்தம் செய்யவும். மிளகாய்., சோம்பு., சீரகம்., மிளகு., உப்பு., தேங்காய் சேர்த்து அரைக்கவும். பருப்பை தனியாக கொரகொரப்பாக அரைக்கவும். வாழைப்பூக்களையும் தனியாக அரைக்கவும்.

பானில் எண்ணெயைக் காய வைக்கவும். பொடியாக அரிந்த வெங்காயம், அரைத்த மசாலா, துவரம் பருப்பு, வாழைப்பூ சேர்த்து நன்கு பிசைந்து வடைகளாகத் தட்டிப் பொரிக்கவும்.  சாம்பார் சாதம் அல்லது தயிர் சாதத்துடன் பரிமாறவும். இதன் துவர்ப்புச் சுவை ரத்தத்தை சுத்திகரிக்கும்
Related Posts Plugin for WordPress, Blogger...