எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 28 மே, 2020

சட்படா ஸ்நாக்ஸ்.

சட்படா ஸ்நாக்ஸ்.

தேவையானவை:- பொரி - 1கப், ஆலுபுஜியா - 1 டேபிள் ஸ்பூன், பொடியாக அரிந்த வெங்காயம் 1 டேபிள் ஸ்பூன் , தக்காளி பாதி டேபிள் ஸ்பூன், மிளகாய்ப்பொடி - 1 சிட்டிகை. மேகி ஹாட் & ஸ்வீட் டொமேட்டோ சில்லி சாஸ் - அரை டேபிள் ஸ்பூன், பொடியாக அரிந்த கொத்துமல்லி - ஒரு டீஸ்பூன்

செய்முறை :- எல்லாவற்றையும் கலந்து கரகரப்பாயிருக்கும் இந்த ஸ்நாக்ஸை மாலை நேரத்தில் ஏலக்காய் டீயோடு வெட்டுங்கள். பொரியில் உப்பு இருப்பதால் உப்பு சேர்க்க வேண்டாம்.
  

புதன், 27 மே, 2020

ஷெஷ்வான் பெப்பர் பனீர்.


ஷெஷ்வான் பெப்பர் பனீர் :-

தேவையானவை :- 100 கிராம் மில்கிமிஸ்ட் பனீர் -  ஒரு இன்ச் சதுரமாக வெட்டவும். குடைமிளகாய் - 1  ஒரு இன்ச் சதுரமாக வெட்டவும். பெரிய வெங்காயம் - 1 ஒரு இன்ச் சதுரமாக வெட்டவும். ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன், சீனி - 1 சிட்டிகை, ஷெஷ்வான் சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் ( இதிலேயே உப்பும் காரமும் இருக்கும். அதனால் மிளகாய், உப்பு தேவையில்லை ).

செய்முறை:- ஒரு பானில் ஆலிவ் எண்ணெயை சூடாக்கவும். அதில் சீனியோடு வெங்காயம், குடைமிளகாயை ஒரு நிமிடம் வதக்கி பனீரை சேர்த்து தீயை அதிகரிக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் ஷெஷ்வான் சாஸை ஊற்றி அடுப்பை அணைத்து நன்கு கலந்து பரிமாறவும். சுட சுட சூப்போடு பரிமாறினால் இதன் சுவையே அலாதிதான்.
 

வெள்ளி, 15 மே, 2020

அப்பம்.

அப்பம்

தேவையானவை :- பச்சரிசி - 1 கப் ( தலை தட்டி ),  உளுந்து -அதன் மேல் கோபுரமாக, வெந்தயம் -1 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 1 டேபிள் ஸ்பூன், வெல்லம் - 1 அச்சு, ஏலக்காய் - 2, எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை :- பச்சரிசி, உளுந்து, வெந்தயம், கடலைப்பருப்பைக் கலந்து, களைந்து இரண்டுமணி நேரம் ஊறவைக்கவும். கிரைண்டரில் நைஸாக அரைத்து வெல்லம், தேங்காய்த்துருவல் சேர்த்து அரைத்து வழித்தெடுக்கவும். ஏலக்காயை அரை டீஸ்பூன் ஜீனியோடு வைத்துப் பொடித்துத் தோலோடு மாவில் சேர்த்து நன்கு கரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து பெரிய கரண்டியில் மாவை ஊற்றித் திருப்பிப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.

செவ்வாய், 12 மே, 2020

வெங்காய பஜ்ஜி.

வெங்காய பஜ்ஜி.

தேவையானவை :- பெரிய வெங்காயம் -2, பஜ்ஜி மிக்ஸ் - 1 கப் ( அல்லது கடலை மாவு முக்கால் கப் +அரிசி மாவு கால் கப் + மிளகாய் சோம்புப் பொடி அரை டீஸ்பூன் + உப்பு அரை டீஸ்பூன் ), எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை :- பெரிய வெங்காயத்தைத் தோலுரித்து வட்டமாக அரிந்து வைக்கவும். பஜ்ஜி மிக்ஸில் கால் கப் தண்ணீர் விட்டுப் பதமாகக் கரைத்து வைக்கவும். அல்லது கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய் சோம்புப் பொடி, உப்பு சேர்த்துக் கரைத்து வைக்கவும். எண்ணெயைக் காயவைத்து வெங்காயத்தை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். பச்சைமிளகாய், இஞ்சி போட்ட தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...