1. பனீர் போளி.
2. சௌசௌ பாத்
3. அரைக்கீரை வடை
4. கோதுமைப் புட்டு.
5. கொள்ளு சாலட்
6. பச்சைமிளகாய்த் தொக்கு
7. ஸ்டஃப்ட் பாகற்காய்
8. ப்ராகோலி மிளகுக் கறி.
9. ஆரஞ்சு தோல் பச்சடி.
10. மாங்காய் தேங்காய்ப் பாயாசம்
1.பனீர் போளி.
தேவையானவை :- மைதா – 2 கப், பனீர் – 200 கிராம், போரா ( தூள்
சர்க்கரை ) – ஒரு கப், நெய் – 1 கப், எண்ணெய் – 1 கப். உப்பு – 1 சிட்டிகை
செய்முறை :- மைதாவில் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு திட்டமாகப்
பிசைந்து எண்ணெயில் நான்கு மணி நேரம் ஊறப்போடவும். பனீரைத் உதிர்த்து போரா சேர்த்து
நன்கு பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். மைதாவில் உள்ளங்கை அளவு
உருண்டை எடுத்து கிண்ணம் செய்து எலுமிச்சை அளவு பனீரை எடுத்து உள்ளே பூரணமாக வைத்து
போளியாகத் தட்டி நெய்யில் சுட்டு நிவேதிக்கவும்.