எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
MAASI MAGAM RECIPES லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
MAASI MAGAM RECIPES லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 மார்ச், 2016

மாசிமகம் ரெசிப்பீஸ். MAASI MAGAM RECIPES.

மாசிமகம் ரெசிப்பீஸ். :-

1.ஓட்ஸ் & நட்ஸ் பர்ஃபி
2.பூரணம் இட்லி
3.குருணை மிளகு உப்புமா
4.தானிய அடை.
5.முள்ளங்கிச் சட்னி
6.உருளை மைதா தோசை.
7.கத்திரி பீர்க்கை கடையல்
8.தக்காளி கட்லெட்
9.வெந்தயக்கீரை பக்கோடா
10.நெய்ப்பாயாசம்.

1.ஓட்ஸ் & நட்ஸ் பர்ஃபி

தேவையானவை :-
முழு ஓட்ஸ் – 2 கப், முந்திரி பாதாம் வேர்க்கடலை – தலா 6 ( வறுத்துத் தோல் நீக்கியது.) நெய் – 1 டீஸ்பூன், அரிசி மாவு – ஒரு டீஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை, ப்ரவுன் சுகர்/நாட்டுச் சர்க்கரை – 2 கப்.

செய்முறை:-
ஓட்ஸை வெறும் கடாயில் வறுத்து ஆறவிடவும். முந்திரி பாதாம் வேர்க்கடலையை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி ஓட்ஸையும் ஒரு சுற்று சுற்றி இறக்கவும். ப்ரவுன் சுகரில் சிறிது தண்ணீர் ஊற்றி முற்றிய பாகுவைத்து அதில் உப்பையும் நெய்யையும் சேர்த்துக் கலக்கி ஓட்ஸ் & நட்ஸ் கலவையைப் போட்டுக் கிளறவும். ஒரு தட்டில் அரிசி மாவைத் தூவி ஓட்ஸ் & நட்ஸ் கலவை ஒட்டாமல் வந்ததும் கொட்டி சமமாகத் தட்டி மீதி அரிசி மாவைத் தூவித் துண்டுகள் போடவும் . ஆறியதும் எடுத்து நிவேதிக்கவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...