புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

வெள்ளி, 26 மே, 2017

16. தக்காளிப்பழ ஊத்தப்பம் :- TOMATO OOTHAPPAM

16. தக்காளிப்பழ ஊத்தப்பம் :-

தேவையானவை:- தோசை மாவு – 2 கரண்டி, தக்காளிப்பழம் – 2, மிளகு சீரகத்தூள் – 1 டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:- தக்காளிப்பழத் துண்டுகளை வட்ட வட்டமாக நறுக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து ஒரு கரண்டி மாவை ஊத்தப்பமாக ஊற்றி தக்காளிப்பழத் துண்டுகளைப் பரப்பவும். இதில் உப்பு, மிளகு சீரகத்தூள் தூவி சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு வேகவிடவும். நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டுப் பொன்னிறமானதும் எடுத்து சட்னிகளுடன் பரிமாறவும்.

புதன், 24 மே, 2017

15. செவ்வாழைப்பழ புட்டிங் :- RED PLANTAIN PUDDING.

15. செவ்வாழைப்பழ புட்டிங் :-

தேவையானவை:- செவ்வாழைப்பழம் – 1. தேங்காய்த்துருவல் – கால் கப்,  தேன் – 2 ஸ்பூன், ஏலப்பொடி – கால் டீஸ்பூன்.

செய்முறை:- செவ்வாழைப்பழத்தைத் தோலுரித்து வட்டத் துண்டுகளாக்கவும். இதில் தேங்காய்த்துருவலை வைத்துத் தேன் ஊற்றி ஏலப்பொடி தூவிப் பரிமாறவும்.

செவ்வாய், 23 மே, 2017

14. சிவப்பரிசி அவல் ஃப்ரூட் சாலட் :- REDRICE FLAKES FRUIT SALAD

14. சிவப்பரிசி அவல் ஃப்ரூட் சாலட் :-


தேவையானவை:- சிவப்பரிசி அவல் – 1 கப், வால்பேரிக்காய் – பாதி, வாழைப்பழம் – சின்னம் ஒன்று, ஆப்பிள் – பாதி, பச்சை திராட்சை, கறுப்பு திராட்சை, செம்மாதுளை முத்துக்கள் – தலா ஒரு கைப்பிடி, தேன், 1 டேபிள் ஸ்பூன், நாட்டுச் சர்க்கரை – 2 டீஸ்பூன்.

செய்முறை:- சிவப்பரிசி அவலைக் களைந்து பத்துநிமிடம் ஊறவிடவும். வால்பேரிக்காய், வாழைப்பழம், ஆப்பிள் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கவும். இதை அவலில் சேர்த்து பச்சை திராட்சை, கறுப்புதிராட்சை, செம்மாதுளை முத்துக்களைப் போட்டு தேனும் நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து நன்கு கலந்து கொடுக்கவும்.

 

ஞாயிறு, 21 மே, 2017

13. ஓட்ஸ் கிஸ்மிஸ் ரொட்டி :- OATS KISMIS ROTI

13. ஓட்ஸ் கிஸ்மிஸ் ரொட்டி :-


தேவையானவை:- மசாலா ஓட்ஸ் -  1 கப், ஆட்டா – அரை கப், கிஸ்மிஸ் – 20, நெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- மசாலா ஓட்ஸில் உப்பு இருப்பதால் உப்பு சேர்க்க வேண்டாம். அதில் ஆட்டா, கிஸ்மிஸைப் போட்டு தண்ணீர் தெளித்து நன்கு பிசையவும். பத்து நிமிடம் ஊறியதும். தவாவில் நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

வெள்ளி, 19 மே, 2017

12. எலுமிச்சம்பழ பானகம் :- LEMON PANAGAM.

12. எலுமிச்சம்பழ பானகம் :-


தேவையானவை:- எலுமிச்சம்பழம் – 1, வெல்லம் – இரண்டு அச்சு. சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் – தலா கால் டீஸ்பூன்.

செய்முறை:- எலுமிச்சம்பழத்தை சாறு எடுத்து வைக்கவும். வெல்லத்தை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி ஆறவிடவும். இதில் சுக்குத்தூள், ஏலத்தூள் சேர்த்து ஆறியதும் எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கிப் பருகக் கொடுக்கவும். 
Related Posts Plugin for WordPress, Blogger...