எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 அக்டோபர், 2023

ஜாலர் அப்பம்

ஜாலர் அப்பம்


தேவையானவை:- கோதுமை மாவு – 2 கப், முட்டை – 1, தேங்காய் – பாதி, உப்பு - 1 சிட்டிகை, சீனி – கால் கப். எண்ணெய் – 30 மிலி, ஜாலர் கோன்.

செய்முறை:- தேங்காயைத் துருவி இரண்டு கப் பால் எடுக்கவும். இதில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி ஒரு சிட்டிகை உப்பு, கால் கல் சீனி சேர்த்து நன்கு கலக்கவும். கோதுமை மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் நன்கு கரைக்கவும். நான் ஸ்டிக் தவாவை சூடு பண்ணி எண்ணெய் தடவி ஜாலர் கோனில் மாவை ஊற்றி வட்ட வட்டமாக மாவு விழும்படி சுழற்றவும். முழுவதும் வலைப்பின்னல் போல வந்ததும் நிறுத்தவும். எண்ணெய் தடவி ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு எடுத்து தேன் தடவி சுருட்டிப் பரிமாறவும்.

சனி, 28 அக்டோபர், 2023

22.கொய்யாக்காய் குழம்பு

22.கொய்யாக்காய் குழம்பு

 

தேவையானவை:- முக்கால் பழுத்த கொய்யாக்காய் – 1, தக்காளி -1, எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை, மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், மல்லித்தூள் – 1 டீஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், ஆம்சூர்/மாங்காய்ப்பொடி – அரை டீஸ்பூன், சீனி – ஒரு சிட்டிகை, வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – சிறிது.

 

செய்முறை:- கொய்யாக்காயைத் துண்டுகள் செய்யவும். கொட்டை உள்ள சதைப்பகுதியை அரைத்து வைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் பெருங்காயப்பொடி, மஞ்சள் பொடி போட்டு அதில் துண்டுகளாக வெட்டிய கொய்யா தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும். இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், ஆம்சூர் பொடி, சீனி, உப்பு சேர்த்து நன்கு கலக்கி கால் கப் தண்ணீர் விட்டு நன்கு மூடி சிம்மில் வேகவிடவும். வெல்லத்தையும் போட்டு நான்கு நிமிடம் கழித்து இறக்கி கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்.

புதன், 25 அக்டோபர், 2023

நொறுக்குத்தீனி ரெஸிப்பீஸ்

நொறுக்குத்தீனி ரெஸிப்பீஸ்



1.ஜாலர் அப்பம்

2.சன்னா வடை

3.தட்டுவடை செட்

4.மூங்தால் சாட்

5.எள், கடலை சிக்கி

6.உருளை இனிப்பு ஃபிங்கர் சிப்ஸ்

7.சிப்பி சோஹி

8.இனிப்பு களியோடக்கா

9.தக்காளி கட்லெட்
10.வெஜிடபிள் ஆம்லெட்
11.ட்ரைஃப்ரூட்ஸ் சமோசா
12.கோதுமை போண்டா

13.கருணைக்கிழங்கு சாசேஜ்

14.மினி பஃப்ஸ்


15.பீட்ரூட் பகோடா

16.கேரட் குல்ஃபி

17.ஃப்ரூட் பாப்சிக்கிள்

18.சில்லி பரோட்டா

19.பனானா டிலைட்

20.லெமன் பாஸ்தா



இந்த ரெஸிப்பீஸ் 15.6.2023 குமுதம் சிநேகிதியில் குட்டீஸுக்குப் பிடித்த ஈவினிங் ஸ்நாக் ரெஸிப்பீஸ் என்ற தலைப்பில் வெளியானது

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

சாபுதானா கிச்சடி

சாபுதானா கிச்சடி



தேவையானவை:- ஜவ்வரிசி – 1 கப்எண்ணெயும் நெய்யும் கலந்து – 1 டேபிள் ஸ்பூன்பெருங்காயத்தூள் – 1 சிட்டிகைசீரகம் – ½ டீஸ்பூன்பச்சைமிளகாய் – 2 இரண்டாக கீறவும்., வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன்கடலைப்பருப்பு – ½ டேபிள் ஸ்பூன்உளுந்து – 1 டீஸ்பூன்வரமிளகாய் – 1 இரண்டாக கிள்ளவும்., இஞ்சி – 1 இன்ச்  - துருவவும்., ( பனீர் – 20 கி துண்டுகளாக்கியதுவிரும்பினால் சேர்க்கவும் ), உருளைக்கிழங்கு – 1 சிறியதுஉப்பு – ½ டீஸ்பூன்தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்கொத்துமல்லிகருவேப்பிலை – பொடியாக அரிந்தது 1 டீஸ்பூன்.

செய்முறை:- ஜவ்வரிசியைக் கழுவி சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்உருளையைத் தோல்சீவி சதுரத் துண்டுகளாக்கவும்பனீரையும் சதுரத் துண்டுகளாக்கவும்கடாயில் எண்ணெயையும் நெய்யையும் சூடாக்கி உருளையும் பன்னீரும் பொன்னிறமாகும்வரை வதக்கி ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.. அதே எண்ணெயில் சீரகம்பெருங்காயத்தூள்பச்சைமிளகாய்வரமிளகாய்இஞ்சிவேர்க்கடலைகடலைப்பருப்புப் போட்டுத் தாளிக்கவும்ஊறவைத்த ஜவ்வரிசியை உப்பு சேர்த்து ( விரும்பினால் சிறிது மிளகும் சேர்த்து ) கரண்டியால் நன்கு கிளறி சிறிது தண்ணீர் ஊற்றி மெல்லிய தீயில் மூடி போட்டு வேக விடவும்ஜவ்வரிசி நன்கு கண்ணாடி போல் வெந்ததும் உருளைபனீர்துண்டுகள் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி கருவேப்பிலை கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்.

செவ்வாய், 17 அக்டோபர், 2023

ஜவ்வரிசி பொங்கல்

ஜவ்வரிசி பொங்கல்



தேவையானவை:- ஜவ்வரிசி - 1 கப், பச்சரிசி – கால் கப், பாசிப் பருப்பு - 1/2 கப்பச்சைமிளகாய் - 1 இரண்டாக வகிரவும்இஞ்சி – சிறு துண்டுசீரகம் - 1 டீஸ்பூன்மிளகு - 1 டீஸ்பூன்எண்ணெய் - 2 டீஸ்பூன்நெய் - 2 டீஸ்பூன்உளுந்தப் பருப்பு - 1 டீஸ்பூன்கருவேப்பிலை - 1 இணுக்குமுந்திரி – 6

செய்முறை:- ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.  பச்சரிசியையும் பாசிப்பருப்பையும்  கழுவி வேகவிடவும். இதில்  பாதி சீரகம் , மிளகு , வகிர்ந்த பச்சை மிளகாய், பொடியாக அரிந்த இஞ்சி சேர்த்து  வேக விடவும்நன்கு மலர்ந்ததும் ஜவ்வரிசி சேர்த்துக் கிளறவும். ஒன்று சேர்ந்ததும்  உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்எண்ணெயில் உளுந்து , மீதி சீரகம்மிளகு சேர்த்துப் பொறிந்ததும்முந்திரி சேர்த்து பொன்னிறமானதும் கருவேப்பிலை சேர்த்துப் பொறித்துப் பொங்கலில் போடவும்நெய் சேர்த்துக் கிளறித் தேங்காய்ச் சட்னியோடு பரிமாறவும்

வெள்ளி, 13 அக்டோபர், 2023

பிசினரிசி உப்புப் புட்டு

பிசினரிசி உப்புப் புட்டு



தேவையானவை:- பச்சரிசி – 2 ஆழாக்குபாசிப்பருப்பு – ¼ ஆழாக்குபிசினரிசி – ¼ ஆழாக்குதேங்காய்த் துருவல் – 1மூடிஉப்பு – 1/3 டீஸ்பூன்எண்ணெய் – 1 டீஸ்பூன்கடுகு – ½ டீஸ்பூன்உளுந்து – ½ டீஸ்பூன்வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்குவெங்காயம் பொடியாக அரிந்தது – ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- பாசிப்பருப்பை வெதுப்பி மிக்ஸியில் ஒன்றிரண்டாக உடைக்கவும்பச்சரிசியை ஊறவைத்து வடிகட்டி அரைத்துச் சலிக்கவும்பிசினரிசியைக் கழுவி பச்சரிசி பாசிப்பருப்போடு பிசறி இட்லிப் பாத்திரத்தில் துணி போட்டு ஆவியில் 10 நிமிடம் வேக விடவும்ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும்கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து அதில் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் வரமிளகாயை இரண்டாகக் கிள்ளிப் போடவும்பின் வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வாசமாக வதக்கி புட்டைச் சேர்க்கவும்உப்புத் தூவிக் கிளறி தேங்காய்ப்பூவைச் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

புதன், 11 அக்டோபர், 2023

தவலை வடை

தவலை வடை



தேவையானவை:- பச்சரிசி - 50 கிராம்புழுங்கரிசி - 50 கிராம்உளுந்து - 50 கிராம்துவரம் பருப்பு - 50 கிராம்கடலைப் பருப்பு - 50 கிராம்பாசிப்பருப்பு - 50 கிராம்ஜவ்வரிசி - 50 கிராம்வர மிளகாய் – 4, சோம்பு ( பெருஞ்சீரகம்) - 1 டீஸ்பூன்துருவிய தேங்காய் - 1 கப்பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரியவும்., உப்பு - 1 1/2 டீஸ்பூன்கடுகு - 1 டீஸ்பூன்எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- அரிசி பருப்புக்களை நன்கு கழுவி ஊறவைக்கவும்மிளகாய் , சோம்புஉப்பை பொடியாக்கவும்அத்துடன் அரிசி பருப்பு ஜவ்வரிசி சேர்த்து அரைக்கவும்ஒரு பானில் ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து அதில் வெங்காயத்தை நன்கு வதக்கவும்அதில் துருவிய தேங்காயைப் போட்டுப் பிரட்டி அரைத்த மாவில் கொட்டி நன்கு கலக்கவும்எண்ணெயைக் காயவைத்து ஒரு சின்ன குழிவான கரண்டியில் மாவை எடுத்து ஊற்றவும்இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து தேங்காய்ச் சட்னி அல்லது கதம்பச் சட்னியுடன் சுடச் சுடப் பரிமாறவும்.

செவ்வாய், 10 அக்டோபர், 2023

ஜவ்வரிசி ஃப்ரூட் கேக்

ஜவ்வரிசி ஃப்ரூட் கேக்


தேவையானவை:- ஜவ்வரிசி – 2 கப், ஜீனி – முக்கால் கப், பால் – 2 கப், வாழைப்பழம் – 2, மிக்ஸட் ஃப்ரூட் ஜூஸ் – 5 கப், ஏலக்காய்த்தூள் – 1சிட்டிகை, நெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கேசரிப் பவுடர் – சிறிது. அலங்கரிக்க – செர்ரி, டூட்டி ஃப்ரூட்டி, கிஸ்மிஸ் – மொத்தம் 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- ஜவ்வரிசியை நெய்யில் வறுத்து வைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் பாலுடன் இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்து ஜவ்வரிசியைப் போடவும். நன்கு வெந்ததும் வாழைப்பழத்தை மசித்து 5 கப் ஜூஸையும் சேர்த்து நன்கு கிளறவும். இதில் ஏலப்பொடி, கேசரித்தூள் போட்டுக்கிளறி கெட்டியாக வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி மேலே நடுவில் செர்ரி, அதைச் சுற்றி டூட்டி ஃப்ரூட்டி ஓரங்களில் உலர் திராட்சையைப் பதிக்கவும். ஆறியவுடன் துண்டுகள் போடவும்.

ஞாயிறு, 8 அக்டோபர், 2023

ஜவ்வரிசி ஊத்தப்பம்

ஜவ்வரிசி ஊத்தப்பம்


தேவையானவை:- புழுங்கல் அரிசி – 2 கப்உளுந்து – அரை கப்ஜவ்வரிசி – அரை கப்பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கவும்பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கவும்எண்ணெய் – தேவையான அளவுகடுகு – கால் டீஸ்பூ,, உளுந்து – கால் டீஸ்பூன்உப்பு – அரை டீஸ்பூன்

 

செய்முறை :- புழுங்கல் அரிசி உளுந்தைக் களைந்து இரண்டு மணி நேரம் ஊறவைத்து முதல்நாளே அரைத்து உப்பு சேர்த்துக் கரைத்து வைக்கவும்மறுநாள் ஜவ்வரிசியை  சிறிது நேரம் ஊறவைத்து மாவில் சேர்த்து எண்ணெயில் கடுகு உளுந்து வெங்காயம் பச்சைமிளகாய் தாளித்துக் கொட்டவும்.  நன்கு கரைத்து தோசைக்கல்லில் ஊத்தப்பங்களாகச் சுட்டு இருபுறமும் நன்கு வேகவைத்து எடுக்கவும்பாசிப்பருப்புப் பச்சடியுடன் பரிமாறவும்.

வெள்ளி, 6 அக்டோபர், 2023

பிசினரிசி இனிப்புப் புட்டு

பிசினரிசி இனிப்புப் புட்டு


தேவையானவை:- பச்சரிசி – 2 ஆழாக்குபாசிப்பருப்பு – ¼ ஆழாக்கு., பிசினரிசி ( ஜவ்வரிசி ) – ¼ ஆழாக்குதேங்காய்த் துருவல் –  1 மூடிஜீனி – ¼ ஆழாக்குஏலப்பொடி – 1 சிட்டிகைநெய் – விரும்பினால் 2 டீஸ்பூன்.

செய்முறை :- பச்சரிசியை ஊறவைத்து வடிகட்டி மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும்பிசினரிசியைக் கழுவி லேசான தண்ணீரோடு வைக்கவும்பாசிப்பருப்பைப் பதமாக வேக வைக்கவும்பிசினரிசியையும் பச்சரிசி மாவையும் கலந்து ஆவியில் வேகவைக்கவும். 10 நிமிடம் வெந்ததும் இறக்கி அதில்  வெந்த பாசிப்பருப்புஜீனிதேங்காய் ஏலப்பொடி நெய் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

புதன், 4 அக்டோபர், 2023

ஜவ்வரிசி சேமியா பால் ஐஸ்

ஜவ்வரிசி சேமியா பால் ஐஸ்


தேவையானவை:- ஜவ்வரிசி – 1 கைப்பிடி, சேமியா – 1கைப்பிடி, பால் – ஒரு லிட்டர், ஜீனி – கால் கப், லிக்விட் குளுக்கோஸ் – 2 டேபிள் ஸ்பூன். ( கிடைத்தால் ) – குல்ஃபி மோல்ட் – 8 அல்லது டம்ளர் – 8 ஐஸ்க்ரீம் குச்சிகள் - 8

செய்முறை:- பாலை நன்கு காய்ச்சி ஜீனி சேர்த்து ஆறவிடவும். ஜவ்வரிசியை லேசாக வறுத்து நன்கு வேகவிட்டு நீரில்லாமல் வைக்கவும். சேமியாவைத் தனியாக வேகவைத்து நீரை வடிகட்டி வைக்கவும். பால் ஆறியதும் இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும். லிக்விட் குளுக்கோஸ் சேர்ப்பதானால் பாலை இன்னும் கொஞ்சம் வத்தக் காய்ச்சி ஆறியபின் சேர்க்கலாம். நன்கு கலக்கி குல்ஃபி மோல்டுகளில் அல்லது டம்ளர்களில் ஐஸ்க்ரீம் குச்சியை வைத்து அதில் ஊற்றி ஃப்ரீஸரில் எட்டுமணி நேரம் வைத்து எடுத்து உபயோகிக்கவும்.

செவ்வாய், 3 அக்டோபர், 2023

சாபுதானா/ஐந்தரிசிப் பணியாரம்

சாபுதானா/ஐந்தரிசிப் பணியாரம்


தேவையானவை :- பச்சரிசி - 1/ கப்துவரம் பருப்பு - 1/2 கப்பாசிப்பருப்பு - ½ கப், வெள்ளை ரவை - ¼ கப், ஜவ்வரிசி - 1/4 கப், வெல்லம் - 300 கி, தேங்காய்த்  துருவல் - 1/2 கப், ஏலக்காய் – 3, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை :- பச்சரிசிதுவரம்பருப்புபாசிப்பருப்புஜவ்வரிசி ஆகியவற்றைக் கழுவித் தனித்தனியாக ஊறவைக்கவும். 2 மணி நேரம் கழித்து கிரைண்டரில் போட்டு ஆட்டவும்அதில் ரவைவெல்லம்ஏலக்காய்தேங்காய்த் துருவல் போட்டு விழுதாக ஆட்டி எண்ணெயைக் காயவைத்துப் பணியாரங்களாகச் சுட்டு எடுக்கவும்.

திங்கள், 2 அக்டோபர், 2023

ஜவ்வரிசி புரத போகா

ஜவ்வரிசி புரத போகா


தேவையானவை:ஜவ்வரிசி – அரை கப் அவல் – அரை கப், கடலைப்பருப்பு – 1 டேபிள்பூன்வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன்பச்சை மிளகாய் – 3, கருவேப்பிலை – ஒரு கைப்பிடிஉப்பு – கால் டீஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்உளுந்து- 2 டீஸ்பூன்சீரகம் – கால் டீஸ்பூன்மஞ்சள் தூள் – 1 சிட்டிகைகொப்பரைத் துருவல் – 2 டீஸ்பூன்சீனி – கால் டீஸ்பூன்எண்ணெய்- 3 டீஸ்பூன்.

செய்முறை:- எண்ணெயைக் காயவைத்துக் கடுகுஉளுந்துகடலைப்பருப்புவேர்க்கடலை தாளிக்கவும்இது சிவந்ததும் ஜவ்வரிசியைப் போட்டுப் பொரிந்ததும்வட்ட வட்டமாக நறுக்கிய பச்சைமிளகாயைச் சேர்க்கவும்கருவேப்பிலையைப் போட்டு சீனி உப்பைச் சேர்த்து கொப்பரைத் துருவல்அவலைச் சேர்த்துப் புரட்டவும்நன்கு புரட்டி இறக்கிப் பரிமாறவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...