எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 25 ஜூன், 2023

மிளகு சீரக சாதம்

மிளகு சீரக சாதம்


தேவையானவை:-சீரகசம்பா சாதம் – 1 கப், மிளகு – 10, சீரகம் – 1 டீஸ்பூன், நெய் – 3 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு – 10, கருவேப்பிலை – 1 இணுக்கு. உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:- மிளகு சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்து வைக்கவும். முந்திரிப்பருப்பை இரண்டாக உடைத்து வைக்கவும். நெய்யைக் காயவைத்து முந்திரியை வறுத்துக் கருவேப்பிலையைச் சேர்க்கவும். அதிலேயே உப்பையும் மிளகு சீரகப் பொடியையும் உதிர்த்த சீரகச்சம்பா சாதத்தையும் போட்டு அடுப்பை அணைக்கவும். பின்பு மெல்ல நன்றாகக் கிளறி விட்டுப் பரிமாறவும். 


இது செரிமானம் கொடுக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

 

செவ்வாய், 20 ஜூன், 2023

கோதுமை பொரியரிசி மாவு

கோதுமை பொரியரிசி மாவு


தேவையானவை:- சம்பாக் கோதுமை – 2 ஆழாக்கு, ஜீனி அல்லது வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:-

கோதுமையைக் கழுவிக் காயவைத்து வாணலியில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு வாசம் வரும்வரை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். மிஷினில் அரைத்துக் கொள்ளவும். சாப்பிடும்போது ஜீனி அல்லது வெல்லம் கலந்து தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொடுக்கவும்.

 இது விரத நாட்களில் சாப்பிட உகந்தது. முழுமையான ஊட்டச்சத்துக் கொண்டது.
 

செவ்வாய், 13 ஜூன், 2023

இஞ்சித் துவையல்

இஞ்சித் துவையல்


தேவையானவை:- இஞ்சி – 50 கிராம், உளுந்தம்பருப்பு – கால் கப், வரமிளகாய் – 2, உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:- வெறும் வாணலியில் வரமிளகாய், உளுந்தம்பருப்பை வாசனை வரும்வரை வறுக்கவும். இஞ்சியைக் கழுவித் துண்டுகளாக்கவும். வறுத்த வரமிளகாய், உளுந்தம்பருப்பு , இஞ்சி, உப்பு சேர்த்து மைய அரைக்கவும். இட்லி தோசையுடன் பரிமாறவும். இந்தத் துவையல் சளியை நீக்கும். பசியைத் தூண்டும்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...