எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 20 ஜூன், 2017

34. க்ரீன் ஆப்பிள் ஃப்ரிட்டர்ஸ். GREEN APPLE FRITTERS.

34. க்ரீன் ஆப்பிள் ஃப்ரிட்டர்ஸ்.


தேவையானவை :- பச்சை ஆப்பிள் – 1, கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன், மைதா – 1 டீஸ்பூன், சோள மாவு – 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு,

செய்முறை:- பச்சை ஆப்பிளை ஸ்லைசுகளாக நறுக்கி நடுவில் இருக்கும் விதைகளை வட்டமாக வெட்டி நீக்கவும். கடலைமாவு, மைதா, சோளமாவு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றிக் கட்டிகள் இல்லாமல் கரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து க்ரீன் ஆப்பிள் வளையங்களை மாவில் தோய்த்துப் பொரித்தெடுக்கவும்.

33. கிவி ப்ரெட் சாண்ட்விச்;- KIWI BREAD SANDWICH

33. கிவி ப்ரெட் சாண்ட்விச்;-

தேவையானவை :- கிவி – 1. ப்ரெட் ஸ்லைசஸ் – 3. நெய் அல்லது வெண்ணெய் – 1 டீஸ்பூன். சீனி – 1 டீஸ்பூன்.

செய்முறை:- கிவியைத் தோலுரித்து ஸ்லைஸ் செய்து வைக்கவும். ப்ரெட்டில் நெய் அல்லது வெண்ணெய் தடவி தோசைக்கல்லில் டோஸ்ட் செய்யவும். கிவி ஸ்லைஸுகளில் பொடித்த சீனியைத் தூவிப் பிரட்டி வைக்கவும். ஒரு ப்ரெட்டை வைத்து அதன் மேல் மூன்று கிவி ஸ்லைஸ் வைத்து அதன் மேல் இன்னொரு ப்ரெட் இன்னும் மூன்று கிவி ஸ்லைஸ் அதன் மேல் இன்னொரு ப்ரெட் இன்னும் மூன்று கிவி ஸ்லைஸ் வைத்துப் பரிமாறவும்.

திங்கள், 19 ஜூன், 2017

32. ட்ரை ஃப்ரூட்ஸ் & நட்ஸ் பர்ஃபி. :- DRY FRUITS & NUTS BURFI.

32. ட்ரை ஃப்ரூட்ஸ் & நட்ஸ் பர்ஃபி. :-

தேவையானவை:- பேரீச்சம்பழம் - 100 கி, அத்திப்பழம் - 1, கிஸ்மிஸ் - ஒரு கைப்பிடி, பாதாம், முந்திரி, பிஸ்தா, அக்ரூட் - தலா ஒரு கைப்பிடி, நெய் - 1 டீஸ்பூன், ஏலத்தூள் - 1 சிட்டிகை.
செய்முறை:- மிக்ஸியில் பாதாம், முந்திரி, பிஸ்தா , அக்ரூட்டை கொரகொரப்பாகப் பொடித்து ஒரு பௌலில் போடவும். இதில் அத்திப்பழம் பேரீச்சை, கிஸ்மிஸ் ஆகியவற்றை சுத்தம் செய்து மிக்ஸியில் மசித்துப் போடவும். ஏலத்தூளும் நெய்யும் கலந்து நன்கு உருட்டி பர்ஃபிகளாகத் தட்டிப் பரிமாறவும்.

வெள்ளி, 16 ஜூன், 2017

31. தேன் நெல்லிக்கனி பாயாசம்:- HONEY AMLA GHEER,

31. தேன் நெல்லிக்கனி பாயாசம்

தேவையானவை :-

தேனில் ஊறிய நெல்லிக்காய் – 6
பால் – 4 கப்
முந்திரி – 6
பாதாம் – 10
சீனி – ¼ கப்
வெனிலா எசன்ஸ் – சில துளி

செய்முறை:-

பாதாம்முந்திரியை வெந்நீரில் ஊறவைத்து பாதாமின் தோல் நீக்கி சிறிது பால் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். மிச்ச பாலை நான்கில் மூன்று பாகமாக சுண்டும்படி காய்ச்சவும். பாதாம் முந்திரி விழுதையும் சீனியையும் சேர்க்கவும். நன்கு கரைந்து வாசனை வரும் பக்குவத்தில் இறக்கி வைக்கவும். வெதுவெதுப்பாக இருக்கும்போது வெனிலா எசன்ஸ் சேர்க்கவும். தேனில் ஊறிய நெல்லிக்காயின் கொட்டைகளை நீக்கி டூட்டி ஃப்ரூட்டி போல் துண்டுகள் செய்து பாயாசத்தில் போடவும். மிகவும் ருசியான பாயாசம் இது.

வியாழன், 15 ஜூன், 2017

30. அத்திப்பழ அல்வா :- FIGS HALWA

30. அத்திப்பழ அல்வா :-

தேவையானவை:- காய்ந்த அத்திப்பழம் – பதினைந்து , நெய் – கால் கப்,, பாதாம் + முந்திரி  – ஊறவைத்து தோலுரித்து பொடித்தது – அரை கப், சர்க்கரை – முக்கால் கப் , பால்பவுடர் – முக்கால் கப் , ஏலப்பொடி – கால் டீஸ்பூன், அலங்கரிக்க குச்சியாக நறுக்கப்பட்ட பாதாம் – 1 டேபிள் ஸ்பூன்.வறுத்த முந்திரி கிஸ்மிஸ் - தலா 12.

செய்முறை:- இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து காய்ந்த அத்திப்பழங்களைச் சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிடவும். மென்மையானவுடன் தண்ணீரை வடிகட்டவும். மிக்ஸியில் வேகவைத்த அத்திப்பழங்களை மட்டும் போட்டு சிறிது நீர் ஊற்றி அரைத்து வைக்கவும். நெய்யை அடி கனமான பாத்திரத்தில் போட்டு பொடித்த பாதாமை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறவும். இதில் அரைத்த அத்திப்பழ பேஸ்ட்., பால்பவுடர், சர்க்கரை போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றவும். 5 நிமிடம் விடாமல் கிளறவும். இறுகியதும் ஏலப்பொடி தூவி இறக்கி பாதாம் துருவல் தூவிப் பரிமாறவும்.

திங்கள், 12 ஜூன், 2017

29. சப்போட்டா கீர். :- SUPPOTTA GHEER

29. சப்போட்டா கீர். :-

தேவையானவை:- சப்போட்டா – 2, பால் – அரை லிட்டர், சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன், முந்திரி கிஸ்மிஸ் – தலா 4. நெய் – 1டீஸ்பூன்.

செய்முறை:- பாலைக் குறுகக் காய்ச்சி சர்க்கரை சேர்த்து ஆறவிடவும். சப்போட்டவைத் தோலுரித்து மிக்ஸியில் அரைத்துப் பாலில் சேர்த்து நன்கு கலக்கவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸைப் பொரித்துப் போடவும்.

28. ஃப்ரூட் மிக்ஸ். :- FRUIT MIX

28. ஃப்ரூட் மிக்ஸ். :-


தேவையானவை:- பலாச்சுளை – 1, மாம்பழம் – 1 துண்டு, சப்போட்டா – 1, வாழைப்பழம் – 1 துண்டு, ஆப்பிள் – 1 துண்டு,பப்பாளி – 1 துண்டு. செர்ரி – 1

செய்முறை:- பலாச்சுளையையும் ஆப்பிளையும் பொடியாக அரியவும். பப்பாளி, மாம்பழம் ஆகியவற்றைப் பெரிய துண்டுகள் செய்யவும். சப்போட்டாவையும் வாழைப்பழத்தையும் தோல் நீக்கி கையால் பிசையவும். இவற்றை ஒரு பவுலில் போட்டு நன்கு கையால் கலக்கி க்ளாஸ் டம்ளரில் ஊற்றி செர்ரியை அதன் மேல் வைத்துக் குளிரவைத்துப் பரிமாறவும்.

ஞாயிறு, 11 ஜூன், 2017

27. செர்ரிப்பழ ஜாம் :- CHERRY JAM

27. செர்ரிப்பழ ஜாம் :-

தேவையானவை:- செர்ரிப்பழம் – 100 கி, சர்க்கரை – கால் கப், தண்ணீர் அரை கப்., எலுமிச்சை – 1 மூடி.

செய்முறை:- செர்ரிப்பழங்களைப் பொடியாக அரியவும். ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றிக் கொதித்ததும் எலுமிச்சைச் சாறு பிழிந்து செர்ரிப்பழங்களைச் சேர்க்கவும். 20 நிமிடங்கள் மென்மையாக வெந்ததும் சர்க்கரை சேர்த்து மசித்துக் கிண்டவும். சர்க்கரை கரைந்ததும் நன்கு கொதிக்க விடவும். ஜாமை ஒரு தட்டில் போட்டு விரலால் வழித்தால் ஒட்டாமல் உருண்டு வந்தால் ஜாம் தயாராகி விட்டது. அடுப்பை அணைத்து உடனே ஒரு பாட்டிலில் மாற்றவும்.

வெள்ளி, 9 ஜூன், 2017

26. பச்சை திராட்சை சட்னி :- GREEN GRAPES CHUTNEY

26. பச்சை திராட்சை சட்னி :-

தேவையானவை:- பச்சை திராட்சை – அரை கப், சர்க்கரை- கால் கப், எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், இஞ்சி – துருவியது அரை டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள், சீரகத்தூள் தலா கால் டீஸ்பூன், தண்ணீர் – அரை கப், எலுமிச்சை சாறு – சில துளிகள்.

செய்முறை:- கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகைப் போடவும். வெடித்தவுடன் துருவிய இஞ்சி போட்டு வதக்கி அரை கப் தண்ணீர் ஊற்றவும். சர்க்கரையைப் போடவும். அது கொதி வரும்போது பச்சை திராட்சையைப் போட்டு வேக விடவும். வெந்து சுண்டும்போது உப்பு, மிளகாய்த்தூள், சீரகத்தூள் போட்டு இறக்கி எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.

வியாழன், 8 ஜூன், 2017

25. மாங்கோ கப் :- MANGO CUP.

25. மாங்கோ கப் :-

தேவையானவை:- சிறிதாக நறுக்கிய மாம்பழத்துண்டுகள் – ஒரு கப், தயிர் ஒரு டேபிள் ஸ்பூன் , பால் – ஒரு கப், சர்க்கரை – 2 டீஸ்பூன்.

செய்முறை:- பாலில் சர்க்கரை சேர்த்துக் கரைந்ததும் தயிர் சேர்த்து நன்கு அடிக்கவும். இதில் சிறிதாக நறுக்கிய மாம்பழத் துண்டுகள் சேர்த்துக் குளிரவைத்துப் பரிமாறவும். ஜில்லென்று இனிப்பும் புளிப்புமான சுவையில் அருமையாக இருக்கும். 

புதன், 7 ஜூன், 2017

24. செம்மாதுளை தயிர்ப்பச்சடி :- POMEGRANATE THAYIRPACHADI.

24. செம்மாதுளை தயிர்ப்பச்சடி :-

தேவையானவை :- செம்மாதுளை முத்துக்கள் – அரை கப், தயிர் – அரை கப், சீரகப் பொடி -1 சிட்டிகை, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:- உப்புப் போட்டுத் தயிரைக் கடைந்து மாதுளை முத்துக்களைச் சேர்த்து நன்கு கலக்கவும். சீரகத்தூள் தூவி பரிமாறவும். மாதுளையின் துவர்ப்பும், தயிரின் லேசான புளிப்பும் சேர்ந்து அசத்தலான சுவையில் இருக்கும். 

செவ்வாய், 6 ஜூன், 2017

23. ஆரஞ்சு இனிப்பு சப்பாத்தி :- ORANGE SWEET CHAPATHI

23. ஆரஞ்சு இனிப்பு சப்பாத்தி :-

தேவையானவை:- ஆட்டா – ஒரு கப், ஆரஞ்சு சாறு – அரை கப், உப்பு, சீனி – தலா கால் டீஸ்பூன், சீரகப் பொடி – கால் டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:- ஆட்டாவில் உப்பு, சீனி, சீரகப் பொடி சேர்த்து ஆரஞ்சு சாறை சிறிது சிறிதாக விட்டு கெட்டியாகப் பிசையவும்.  பத்து நிமிடம் ஊறியதும் சப்பாத்திகளாகத் திரட்டி சுற்றிலும் நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

திங்கள், 5 ஜூன், 2017

22. ஃப்ரூட் பாப்சிக்கில்:- FRUIT POPSICLE

22. ஃப்ரூட் பாப்சிக்கில்


தேவையானவை :- மாம்பழம் – 1, கிவி – 1 , செர்ரி – 6, ஆப்பிள் – பாதி, பப்பாளி – 6 துண்டு, எலுமிச்சை ஜூஸ் – ஒரு கப், தேன் – 2 டீஸ்பூன். பாப்சிக்கில் மோல்ட் இரண்டு அல்லது இரண்டு டம்ளர்கள் , நடுவில் சொருக இரண்டு ஐஸ்க்ரீம் ஸ்டிக்குகள் அல்லது ஸ்பூன்கள். 

செய்முறை:- எலுமிச்சை ஜூஸில் தேனைக் கலந்து வைக்கவும். பாப்சிக்கில் மோல்டில் தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கிய கிவி, மாம்பழம் ஆப்பிள், பப்பாளி, செர்ரி இந்த வரிசையில் போட்டு எலுமிச்சை ஜூஸை ஊற்றவும். இதை ஃப்ரீஸரில் எட்டுமணி நேரம் குளிரவைக்கவும். மோல்டை பைப் தண்ணீரில் காட்டினால் ஃப்ரூட் பாப்சிக்கில் பிரிந்து வரும். வெய்யிலுக்கு இதமாக ஜில்லென்று சர்வ் செய்யவும்,

வெள்ளி, 2 ஜூன், 2017

21. பைனாப்பிள் ரசம் :- PINEAPPLE RASAM

21. பைனாப்பிள் ரசம் :-

தேவையானவை:- பைனாப்பிள் – ஒரு துண்டு, பருப்பு வேகவைத்த தண்ணீர் – 2 கப், புளி – ஒரு சுளை, உப்பு – அரை டீஸ்பூன், ரசப்பொடி அல்லது மிளகாய் – 1 மல்லி – சிறிது , சீரகம், மிளகு தலா அரை டீஸ்பூன், வறுத்துப் பொடிக்கவும். நெய் – அரை டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், கருவேப்பிலை.

செய்முறை:- ஒரு கப் பருப்புத் தண்ணீரில் பைனாப்பிளை வேகவைத்து ஒன்றிரண்டாக மசித்து வைக்கவும். மீதி பருப்புத் தண்ணீரில் ஒரு சுளை புளியைக் கரைத்து உப்பைப் போடவும். இதில் ரசப்பொடியைப் போட்டு நன்கு கரைத்து வைக்கவும். நெய்யைக் காயவைத்துக் கடுகு, கருவேப்பிலை தாளித்துப் புளி கரைத்த தண்ணீரை ஊற்றிக் கொதி வரும்போது பைனாப்பிள் கரைத்த தண்ணீரை ஊற்றி நுரைத்ததும் இறக்கவும்.

வியாழன், 1 ஜூன், 2017

20. பேரீச்சைக் கொழுக்கட்டை :- DATES KOZHUKKATTAI.

20. பேரீச்சைக் கொழுக்கட்டை :-

தேவையானவை:- அரிசி மாவு – அரை கப், மைதா – 1 டேபிள் ஸ்பூன், பேரீச்சை – 6, வாழைப்பழம் – அரைத்துண்டு, வெல்லம் – சிறிது. உப்பு, சீனி  தலா கால் டீஸ்பூன், ஏலத்தூள் – ஒரு சிட்டிகை. நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:- அரிசிமாவில் கால் கப் வெந்நீரை ஊற்றிப் பிசையவும். இதில் மைதாவை சேர்க்கவும். மிக்ஸியில் கொட்டை நீக்கிய பேரீச்சை, வாழைப்பழம், வெல்லம், சீனி உப்பு போட்டு சிறிது சேர்த்து அடித்து அரிசி மாவில் ஊற்றி நன்கு பிசையவும். நெய்யில் மாவை வதக்கி எடுத்து ஆறியதும் ஆவியில் ஐந்து நிமிடம் வேகவைத்துப் பரிமாறவும்.  
Related Posts Plugin for WordPress, Blogger...