எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 23 நவம்பர், 2011

MEALMAKER MASALA. மீல்மேக்கர் மசாலா.

MEALMAKER MASALA:-

RECIPE:-

SOYA CHUNKS - 100 GRAMS

BIG ONION - 2 NO. CHOPPED

TOMATO - 1 NO.CHOPPED

GARLIC - 4 PODS CHOPPED

CHILLI POWDER - 1 TSP

DHANIYA POWDER - 1 TSP

TURMERIC POWDER - 1 PINCH.

GARAM MASALA POWDER - 1/4 TSP ( OPTIONAL)

SALT - 1/2 TSP

OIL - 1 TBLSPN.

MUSTARD - 1 TSP

ORD DHAL - 1 TSP

FENNEL - 1/2 TSP

BAY LEAF - 1 INCH

CINNAMON - 1 INCH


PROCEDURE:-

SOAK SOYA CHUNKS IN HOT WATER ( WITH HALF TEASPOON SALT) FOR 10 MINUTES . WASH IT IN COLD WATER FOR THRICE AND SQUEEZE WELL. CUT THEM IN TO TWO AND KEEP ASIDE. HEAT OIL IN A PAD ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL AND FENNEL. THEN ADD THE BAY LEAF AND CINNAMON. ADD ONION., GARLIC., TOMATO AND SAUTE WELL. ADD ALL THE MASALA POWDERS AND SALT. THEN ADD THE SOYA CHUNKS SAUTE FOR 2 MINUTES. COVER THE VESSEL WITH A LID AND COOK TILL ALL THE MASALA IS ABSORBED BY THE SOYA CHUNKS. SERVE IT WITH CHAPPATHIS AND VARIETY RICES.


மீல்மேக்கர் மசாலா.

தேவையானவை:-

சோயா சங்க்ஸ் ( உருண்டைகள்) -100 கி.

பெரிய வெங்காயம் - 2 பொடியாக நறுக்கவும்

தக்காளி - 1 பொடியாக நறுக்கவும்

பூண்டு - 4 பல் உரித்து நறுக்கவும்.

மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன்

தனியா பொடி - 1 டீஸ்பூன்

மஞ்சள் பொடி - 1 சிட்டிகை

கரம் மசாலா பொடி - 1/4 டீஸ்பூன் தேவைப்பட்டால்.

உப்பு - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்

சோம்பு - 1/2 டீஸ்பூன்

பட்டை இலை - 1 இன்ச் துண்டு

பட்டை - 1 இன்ச்.


செய்முறை:-

சோயா சங்க்ஸை சிறிது உப்பு சேர்த்த கொதிநீரில் போட்டு மூடவும். பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் நன்கு அலசி 3 முறை கழுவிப் பிழிந்து இரண்டாக நறுக்கி வைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் சோம்பு போட்டு பின் பட்டை., இலை போடவும். பின் வெங்காயம்., பூண்டு., தக்காளி போட்டு நன்கு வதக்கி எல்லா மசாலா பொடிகளையும்., உப்பையும் சேர்க்கவும். இதில் சோயாவைப் போட்டு நன்கு கிளறி மூடி போட்டு வேக விடவும். எல்லா மசாலாவும் சோயாவில் உறிஞ்சப்பட்டபின் இறக்கி பரிமாறவும். இதை சப்பாத்தி கலவை சாதங்களுக்கு பரிமாறலாம்.

ஞாயிறு, 20 நவம்பர், 2011

VENPONGAL. வெண்பொங்கல்.

VENPONGAL:-
NEEDED:-

RAW RICE - 1 CUP

GREEN GRAM DHAL( MOONG DHAL) - 1/3 CUP

GHEE - 1 TBLSPN

GREEN CHILLY - 1 NO. SLIT OPEN

GINGER - 1 INCH PIECE. CHOPPED

PEPPER - 1 TSP

JEERA - 1 TSP

ORID DHAL - 1 TSP.

CASHEWS - 15 NOS.

CURRY LEAVES - 1 ARK

JEERA PEPPER POWDER - 1/2 TSP

SALT - 1/2 TSP


METHOD:-

MIX RAW RICE AND MOONG DHAL . WASH THRICE AND DRAIN. ADD PEPPER, JEERA, GINGER AND GREEN CHILLY. POUR 4 CUPS OF WATER AND PRESSURE COOK FOR 3 WHISTLES. AFTER 10 MIN. OPEN THE LID ADD SALT AND SMASH WELL WITH LADDLE. HEAT GHEE IN A PAN ADD ORID DHAL , PEPPER , JEERA , CASHEW AND CURRY LEAVES. WHEN SPLUTTERS POUR THIS INTO THE PONGAL. ADD PEPPER JEERA POWDER AND STIRR WELL. IF DESIRED ADD SOME MORE GHEE AND SERVE HOT WITH SMALL ONION SAMBAR AND COCONUT CHUTNEY.


வெண்பொங்கல்:-

செய்முறை:-

பச்சரிசி - 1 கப்

பாசிப்பருப்பு - 1/3 கப்

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

பச்சைமிளகாய் - 1 இரண்டாக வகிரவும்.

இஞ்சி - 1 இஞ்ச் துண்டு பொடியாக நறுக்கவும்.

மிளகு - 1 டீஸ்பூன்

ஜீரகம் - 1 டீஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்

முந்திரிப் பருப்பு - 15 ( முழு)

கருவேப்பிலை - 1 இணுக்கு

மிளகு ஜீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்.

உப்பு - 1/2 டீஸ்பூன்.


செய்முறை:-

பச்சரிசி, பாசிப்பருப்பை சேர்ந்த்து 3 முறை நன்கு களைந்து தண்ணீரை வடித்து வைக்கவும். மிளகு, சீரகம்., இஞ்சி., பச்சைமிளகாயை சேர்க்கவும். 4 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும்வரை குக்கரில் வைக்கவும். 10 நிமிடம் கழித்து திறந்து உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும். ஒரு இரும்புக் கரண்டியில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து, சீரகம்., மிளகு, முந்திரிப் பருப்பு., கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். எல்லாம் பொறிந்தவுடன் பொங்கலில் கொட்டி மிளகு சீரகத் தூள் சேர்த்து நன்கு கிளறி , தேவைபட்டால் இன்னும் சிறிது நெய் சேர்த்து சூடாக சின்ன வெங்காய சாம்பார், தேங்காய்ச் சட்னியோடு பரிமாறவும்.

புதன், 16 நவம்பர், 2011

GREEN CHILLY THUVAIYAL. பச்சை மிளகாய்த் துவையல்.

GREEN CHILLY THUVAIYAL:-

NEEDED:-

GREEN CHILLIES - 8 NOS.

SMALL ONION - 10 NOS,

TAMARIND - 1 AMLA SIZE BALL

SALT - 1/2 TSP

ASAFOETIDA - 1/10 INCH.

OIL - 2 TSP

MUSTARD - 1 TSP

ORID DHAL - 1 TSP


METHOD:-

PEEL AND WASH SMALL ONIONS. WASH CHILLIES. ADD ALL THE INGREDIENTS (EXCEPT OIL, MUSTARD AND ORID DHAL ) AND GRIND WELL. HEAT OIL IN A IRON LADDLE ADD MUSTARD. WHEN IT SLPUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN POUR THIS INTO THE THUVAIYAL. SERVE IT WITH HOT IDDLIES AND DOSAS.


பச்சை மிளகாய் துவையல்:-

தேவையானவை:-

பச்சை மிளகாய் - 8

சின்ன வெங்காயம் - 10

புளி - நெல்லி அளவு.

உப்பு - 1/2 டீஸ்பூன்

பெருங்காயம் - 1/10 இஞ்ச்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்.

செய்முறை:-

சின்னவெங்காயத்தைத் தோலுரித்துக் கழுவவும். பச்சைமிளகாய்களையும் கழுவவும். எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ( எண்ணெய்., கடுகு, உளுந்து தவிர்த்து) நன்கு அரைக்கவும். ஒரு இரும்புக் கரண்டியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் துவையலில் கொட்டி கிளறவும். சூடான இட்லிகளோடும் தோசைகளோடும் பரிமாறவும்.


காரம் அதிகமானால் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடவும்.:)

செவ்வாய், 8 நவம்பர், 2011

ALOO GOBI. ஆலு கோபி.(சுக்கா சப்ஜி)

ALOO GOBI:-
NEEDED:-

POTATO - 2 NOS

CAULIFLOWER - 1 NO. SMALL

OIL - 3 TSP

JEERA - 1/2 TSP

JEERA POWDER - 1/2 TSP

RED CHILLI POWDER - 1 TSP

GARAM MASALA POWDER + AMCHOOR POWDER - 1/2 TSP

SALT - 1/2 TSP


METHOD:-

WASH , PEEL AND CUT THE POTATOS LIKE FOR FRENCH FRIES. SEPERATE THE FLORETS AND IMMERSE THEM IN HOT AND SALTED WATER FOR 5 MINUTES. TAKE OUT FROM WATER AND KEEP ASIDE. HEAT OIL IN A PAN ADD JEERA., THEN ADD THE ALOO AND GOBI. SAUTE FOR 2 MINUTES. ADD JEERA POWDER., RED CHILLI POWDER., GARAM MASALA POWDER., AMCHOOR POWDER AND SALT. STIRR WELL. AND KEEP COVERED. COOK IN SIM FOR 7 MINUTES AND SERVE HOT WITH ROTIES ., NAAN., OR KULCHAS.


ஆலு கோபி:-

தேவையானவை:-

உருளைக்கிழங்கு - 2

காலிஃப்ளவர் - 1 சிறியது

எண்ணெய் - 3 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் + ஆம்சூர் பொடி - 1/2 டீஸ்பூன்

உப்பு - 1/2 டீஸ்பூன்.


செய்முறை:-

உருளையை தோலுரித்து கழுவி விரல் அளவு துண்டுகளாக்கவும். காலிஃப்ளவரை பூக்களாய்ப் பிரித்து உப்பு கலந்த வெந்நீரில் போட்டு 5 நிமிடம் வைக்கவும். தண்ணீரை வடித்து பூக்களை தனியாக வைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து சீரகம் போடவும். பொறிந்ததும் உருளை , காலிஃப்ளவரைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். சீரகப்பொடி., மிளகாய்ப்பொடி., கரம் மசாலா பொடி., ஆம்சூர் பொடி., உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு சிம்மில் 7 நிமிடம் வேகவைத்து சூடாக சப்பாத்தி., ரொட்டி., நான்., குல்ச்சாக்களுடன் பரிமாறவும்.

செவ்வாய், 1 நவம்பர், 2011

KEEMA MASALA. கைமா( கொத்துக்கறி மசால்)

KEEMA MASAL:-

NEEDED:-

KEEMA - 250 GMS

PARABOILED CHANNA DHAL - 1 CUP

CHOPPED ONION - 1 CUP

CHOPPED TOMATO - 1/2 CUP

CHOPPED GARLIC - 1 TSP

CHILLI POWDER - 2 TSP

TURMERIC POWDER - 1 PINCH

CORRIANDER POWDER - 1 TSP

SALT - 1/2 TSP

OIL - 1 TBLSPN

ORID DHAL - 1/2TSP

FENNEL - 1/2 TSP

KALPASIPPU - 1

BAY LEAF - 1 INCH

CINNAMON - 1 INCH

CLOVES - 2 NOS.


METHOD:-

WASH AND PRESSURE COOK THE MEAT . HEAT OIL IN A PAN ADD ORID DHAL, FENNEL, CLOVES, KAPASIPPU, BAY LEAF AND CINNAMON. ADD CHOPPED ONION ., GARLIC AND TOMATO. SAUTE WELL. ADD ALL THE MASALA POWDERS. STIRR WELL. ADD THE COOKED MEAT AND CHANNA DHAL WITH SALT. SAUTE WELL AND ADD I/2 CUP WATER. KEEP COVERED AND COOK FOR 10 MINUTES IN A SLOW FIRE. STIRR OCCASSIONALLY. WHEN THE OIL SEPERATES AT THE SIDES REMOVE FROM FIRE AND SERVE IT WITH RICES AND CHAPPATHIS AND NAANS. WE CAN USED TO MAKE IT FOR STUFFED PAROTTAS AND FOR PUFFS AND SAMOSAS.


கைமா மசால்:-

தேவையானவை :-

கைமா ( கொத்துக்கறி ) - 250 கிராம்

வேகவைத்த கடலைப் பருப்பு - 1 கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்

பொடியாக நறுக்கிய தக்காளி - 1/2 கப்

பொடியாக நறுக்கிய பூண்டு - 1டீஸ்பூன்

வரமிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

மல்லித்தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

உளுந்து - 1/2 டீஸ்பூன்

சோம்பு - 1/4 டீஸ்பூன்

கல்பாசிப்பூ - 1

பட்டை இலை - 1 இன்ச்

பட்டை - 1 இன்ச்

கிராம்பு - 2.


செய்முறை:-

மட்டன் கைமாவை நன்கு கழுவி பிரஷர் குக்கரில் வேக வைக்கவும். பானில் எண்ணெய் ஊற்றி உளுந்து., சோம்பு, பட்டை, இலை, கிராம்பு, கல்பாசிப்பூ போட்டுத் தாளிக்கவும். வெங்காயம்., தக்காளி., பூண்டு போட்டு நன்கு வதக்கவும். எல்லா மசாலா பொடியும் போட்டு நன்கு வதக்கியவுடன் மட்டன்., கடலைப் பருப்பு, உப்பு சேர்க்கவும். நன்கு கிளறி அரை கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மென்தணலில் பத்து நிமிடம் வேகவிடவும். தண்ணீர் சுண்டி பக்கங்களில் எண்ணெய் பிரிந்ததும் இறக்கி சூடாக சாதம்., சப்பாத்தி, நான் ஆகியவற்றோடு பரிமாறவும். இதை வைத்து ஸ்டஃப்ட் பரோட்டாக்கள்., சமோசா., பஃப்ஸ்கள் செய்யலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...