எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 23 ஜூலை, 2013

PARUPPU THUVAIYAL. பருப்புத் துவையல்

PARUPPU THUVAIYAL.    பருப்புத் துவையல்

PARUPPU THUVAIYAL:-
NEEDED:-

THUVAR DHAL - 2 TBLSPN
GRATED COCONUT - 1 TABLSPN
RED CHILLIE - 1 NO.
SALT - 1/3 TSP
GARLIC - 2 PODS.

METHOD:-

FRY THUVAR DHAL AND RED CHILLIE WITHOUT OIL. WHEN IT CHANGES TO A GOLDEN BROWN REMOVE FROM FIRE ADD COCONUT, SALT  AND GROUND COARSLY WITH LITTLE WATER. LAST ADD GARLIC AND RUN THE MIXER FOR A MINUTE. SERVE IT WITH JEERA KOZHUKKATTAI OR RASAM RICE. OR VATHTHAK KUZHAMBU RICE.

பருப்புத் துவையல்:-
தேவையானவை:-

துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 1
உப்பு - 1/3 டீஸ்பூன்
வெள்ளைப்பூண்டு - 2 பல்

செய்முறை :-
வெறும் கடாயில் துவரம்பருப்பு & வரமிளகாயை வறுக்கவும். அது பொன்னிறமானதும் இறக்கி அத்தோடு உப்பு, தேங்காய், சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைக்கவும். கடைசியில் பூண்டு சேர்த்து மிக்ஸியை சில செகண்டுகள் ஓட விட்டு எடுத்து சீரகக் கொழுக்கட்டையோடு பரிமாறவும். இதை ரசம் சாதம் வத்தக்குழம்பு சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம். 

JEERA KOZHUKKATTAI. சீரகக் கொழுக்கட்டை.

JEERA KOZHUKKATTAI:-
NEEDED :-
BOILED RICE FLOUR/ IDIYAPPA MAAVU - 1 CUP
JEERA -  1 TSP
SALT - 1/3 TSP
CHOPPED ONION - 1 TBL SPN ( OPTIONAL)
GRATED COCONUT -  1 TBLSPN ( OPTIONAL )
HOT WATER - NEEDED.

METHOD :-
ADD JEERA, SALT, ONION, COCONUT  TO THE RICE FLOUR WITH ENOUGH HOT WATER AND KNEAD WELL . MAKE IT INTO A TIGHT DOUGH. TAKE A PINCH OF DOUGH AND ROLL THEM WITH FINGERS TO MAKE SMALL KOZHUKKATTAI ( BUDS).

BOIL WATER IN A PAN.POUR THE KOZHUKKATTAIS AND COOK FOR 10 MINUTES. STIRR THEM AFTER 5 MINUTES. ( IF U STIRR IMMEDIATELY AFTER ADDING IT TO THE  BOILED WATER THEN IT WILL BE DISSOLVED )

AFTER 10 MINUTES DRAIN IT AND SERVE HOT WITH PARUPPU THUVAIYAL.

சீரக கொழுக்கட்டை:-
தேவையானவை :-
புழுங்கல் அரிசி மாவு / கொழுக்கட்டை மாவு/ இடியாப்ப மாவு - 1 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/3 டீஸ்பூன்
வெங்காயம் - பொடியாக அரிந்தது 1 டேபிள் ஸ்பூன் ( விரும்பினால்)
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் ( விரும்பினால்)
வெந்நீர் - தேவையான அளவு.

செய்முறை:-
சீரகம், வெங்காயம், தேங்காய், உப்பை மாவில் போடவும். தேவையான தண்ணீர் ஊற்றி கெட்டியாகப் பிசையவும்.விரலால் கிள்ளி சீடைக்காய் அளவு எடுத்து தட்டிப் போடவும்.

தண்ணீரைக் கொதிக்க வைத்து கொழுக்கட்டைகளைப் போடவும்.10 நிமிடம் வேக விடவும். 5 நிமிடம் வெந்தபின்பே கரண்டியால் கிளறி விடவும். ( போட்ட உடன் கிண்டினால் மாவு வெந்நீரில் கரைந்து விடும்.)

10 நிமிடம் கழித்து வடித்து எடுத்து சூடாக பருப்புத் துவையலுடன் பரிமாறவும்.

ஞாயிறு, 7 ஜூலை, 2013

RED BEANS MASALA, சிவப்பு பீன்ஸ் மசாலா.

RED BEANS  MASALA:-

NEEDED :-
RED BEANS  - 250 GRAMS
BIG ONION - 2 NO. CHOPPED
TOMATO - 1 NO.CHOPPED
GARLIC - 4 PODS CHOPPED
CHILLI POWDER - 1 TSP
DHANIYA POWDER - 1 TSP
TURMERIC POWDER - 1 PINCH.
GARAM MASALA POWDER - 1/4 TSP ( OPTIONAL)
SALT - 1/2 TSP
OIL - 1 TBLSPN.
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
FENNEL - 1/2 TSP
BAY LEAF - 1 INCH
CINNAMON - 1 INCH


PROCEDURE:-
PEEL AND COOK THE RED BEANS FOR 3 WHISTLES. 

HEAT OIL IN A PAD ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL AND FENNEL. THEN ADD THE BAY LEAF AND CINNAMON. ADD ONION., GARLIC., TOMATO AND SAUTE WELL. ADD ALL THE MASALA POWDERS AND SALT. THEN ADD THE COOKED BEANS.  SAUTE FOR 2 MINUTES. COVER THE VESSEL WITH A LID AND COOK TILL ALL THE MASALA IS ABSORBED BY THE BEANS. SERVE IT WITH CHAPPATHIS AND VARIETY RICES.

 சிவப்பு பீன்ஸ் மசாலா..

தேவையானவை:-
சிவப்பு பீன்ஸ் 100 கி.
பெரிய வெங்காயம் - 2 பொடியாக நறுக்கவும்
தக்காளி - 1 பொடியாக நறுக்கவும்
பூண்டு - 4 பல் உரித்து நறுக்கவும்.
மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன்
தனியா பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
கரம் மசாலா பொடி - 1/4 டீஸ்பூன் தேவைப்பட்டால்.
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பட்டை இலை - 1 இன்ச் துண்டு
பட்டை - 1 இன்ச்.


செய்முறை:-
சிவப்பு பீன்ஸை உரித்து குக்கரில்  3 விசில் வரை வேகவைக்கவும்.  
பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் சோம்பு போட்டு பின் பட்டை., இலை போடவும். பின் வெங்காயம்., பூண்டு., தக்காளி போட்டு நன்கு வதக்கி எல்லா மசாலா பொடிகளையும்., உப்பையும் சேர்க்கவும். இதில் சிவப்பு பீன்சைப் போட்டு நன்கு கிளறி மூடி போட்டு வேக விடவும். எல்லா மசாலாவும் பீன்ஸால் உறிஞ்சப்பட்டபின் இறக்கி பரிமாறவும். இதை சப்பாத்தி கலவை சாதங்களுக்கு பரிமாறலாம்.

GARLIC RASAM. பூண்டு ரசம்.

GARLIC  RASAM..:-

NEEDED :-

TOMATO - 1NOS
BOILED THUVAR DHAL - 1TBLSPN.
TAMARIND - 1 AMLA SIZE BALL
SALT - 2 TSP
GARLIC - 8  PODS
TURMERIC - 1 TSP
JEERA PEPPER POWDER - 2 TSP
DHANIA POWDER - 1 TSP
OIL - 2 TSP
MUSTARD - 1 TSP
URAD DHAL - 1 TSP
JEERA - 1 TSP
FENUGREEK 1/4 TSP
RED CHILLIES - 2 NOS
CURRY LEAVES - 1 ARK
ASAFOETIDA - 1 / 8 INCH PIECE
CORRIANDER LEAVES - 1 TSP CHOPPED.

METHOD:-

SQUEEZE THE SOAKED TAMARIND WITH SALT IN 3 CUPS OF WATER ADD THUVAR DHAL .,  . ADD  TOMATO , TURMERIC., CRUSHED GARLIC., DHANIA POWDER., JEERA PEPPER POWDER.

HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD URAD DHAL., JEERA., ASAFOETIDA., FENUGREEK AND CURRY LEAVES. HALVE THE RED CHILLIES AND ADD IT. ADD CURRY LEAVES AND POUR THE TAMARIND PULP IN IT.. BRING TO BOILING AND REMOVE FROM FIRE.  SPRINKLE  CORRIANDER LEAVES AND SERVE HOT WITH PAPPADS AND URULAI MASALA.

YOU CAN HAVE IT AS SOUP TOO.


பூண்டு ரசம்

தேவையானாவை:-
தக்காளி - 1
வெந்த துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
புளி - 1 நெல்லி அளவு
உப்பு - 2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
பூண்டு - 8 பல்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
மிளகு ஜீரகப் பொடி - 2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கருவேப்பிலை- 1 இணுக்கு
பெருங்காயம் - 1 /8 இன்ச் துண்டு
கொத்துமல்லித்தழை - 1 டீஸ்பூன் நறுக்கியது

செய்முறை :-
 புளியை 3 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து சாறு எடுக்கவும் . இதில் வெந்த துவரம் பருப்பு., தக்காளி., நசுக்கிய பூண்டு., மஞ்சள் பொடி., உப்பு., தனியா தூள்., மிளகு ஜீரகப் பொடி., சேர்க்கவும்.

 பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும்., ஜீரகம்., வெந்தயம் பெருங்காயம் போட்டு., ரெண்டாகக் கிள்ளிய வரமிளகாய்., கருவேப்பிலை போடவும். இதில் புளிக்கரைசலை ஊற்றி நுரைத்துக் கொதிவரும் நிலையில் எடுத்து கொத்துமல்லி தூவி சாதம் ., அப்பளம்., உருளை வறுவலுடன் பரிமாறவும்..

அப்படியே சூப் போலவும் குடிக்கலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...