எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 24 ஏப்ரல், 2013

TURKEYBERRY THUVAIYAL.சுண்டைக்காய்த் துவையல்

TURKEYBERRY THUVAIYAL.சுண்டைக்காய்த் துவையல்.

TURKEYBERRY THUVAIYAL

NEEDED:-

TURKEYBERRY - 1/2 CUP
GREEN CHILLIES - 4 NOS
BIG ONION - 1 NO
TOMATO - 1 NO ( SMALL)
GRATED COCONUT - 1 TBLSPN
ASAFOETIDA - 1 PEPPER SIZE
SALT - 1/2 TSP
TAMARIND - 3 PODS.
OIL - 2 TSP
MUSTARD - 1/2 TSP
ORID DHAL - 2 TSP

METHOD:-

WASH AND CUT THE TURKEYBERRIES INTO TWO AND IMMERSE THEM IN WATER. PEEL AND CHOP THE CHILLIES, ONION AND TOMATO. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL AND ASAFOETIDA. WHEN IT BECOMES BROWN ADD GREEN CHILLIES, AND HALVED TURKEYBERRIES. SAUTE FOR 2 MINUTES AND ADD ONION & TOMATO. SAUTE FOR A MINUTE THEN ADD SALT, TAMARIND AND GRATED COCONUT. STIRR WELL AND REMOVE FROM FIRE. AFTER COOLING GRIND COARSLY AND SERVE IT WITH IDDLIS OR WITH PLAIN RICE AND GHEE.

சுண்டைக்காய்த் துவையல்:-

தேவையானவை:-

சுண்டைக்காய் - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1 ( சிறியது)
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
புளி - 3 சுளை
பெருங்காயம் - 1 மிளகு அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்து - 2 டீஸ்பூன்.

செய்முறை:-

சுண்டைக்காய்களை ஆய்ந்து கழுவி இரண்டாக நறுக்கித் தண்ணீரில் போடவும். பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்களைக் கழுவிப் பொடியாக நறுக்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்தவுடன் உளுந்து, பெருங்காயம் போட்டு சிவந்தவுடன் பச்சை மிளகாய், சுண்டைக்காயைப் போட்டு வதக்கவும். இரண்டு நிமிடம் வதங்கியதும் வெங்காயம், தக்காளியைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். உப்பு, புளி, தேங்காய் சேர்த்து இன்னும் நன்கு வதக்கி ஆறவைத்து அரைக்கவும். இட்லிக்குத் தொட்டுக் கொள்ளலாம்  அல்லது நெய் சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.

PEANUT CHUTNEY. வேர்க்கடலைச் சட்னி( மல்லாட்டைச் சட்னி)

PEANUT CHUTNEY. வேர்க்கடலைச் சட்னி( மல்லாட்டைச் சட்னி)

PEANUT CHUTNEY:-

NEEDED:-

RED CHILLY - 3 NOS.
PEANUT FRIED AND DESKINNED - ONE HANDFUL
SALT - 1/2 TSP
TAMARIND - 1 POD
BIG ONION - 1 NO.
OIL - 2 TSP
MUSTARD - 1/4 TSP
ORID DHAL - 1/2 TSP
CURRY LEAVES - 1 ARK

METHOD:-

FRY THE RED CHILLIES AND PEANUTS IN A DRIED PAN. PEEL, CHOP AND SAUTE THE ONION IN 1 TSP OIL. WITH ONION ADD RED CHILLIES, PEANUTS, SALT, TAMARIND AND GRIND WELL. ADD ENOUGH WATER TO MAKE THE CHUTNEY CONSISTENCY. FRY THE MUSTARD, ORID DHAL, CURRY LEAVES AND TOSS IT OVER THE CHUTNEY AND SERVE HOT WITH IDDLIS OR RAVA VEG KICHADI.

வேர்க்கடலை/ மல்லாட்டைச் சட்னி:-

தேவையானவை:-

வரமிளகாய் - 3
வேர்க்கடலை வறுத்துத் தோல் நீக்கியது - 1 கைப்பிடி
உப்பு - 1/2 டீஸ்பூன்
புளி - 1 சுளை
பெரிய வெங்காயம் - 1
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுந்து - 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:-

வெறும் வாணலியில் வரமிளகாய், வேர்க்கடலையை லேசாக வறுக்கவும். அதன் பின் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை நன்கு வதக்கவும். வெங்காயத்துடன் மிளகாய், வேர்க்கடலை, உப்பு, புளி போட்டு நன்கு அரைக்கவும். சட்னி பதத்திற்குத் தேவையான தண்ணீர் ஊற்றவும். ஒரு ஸ்பூன் எண்ணெயில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும். இட்லி அல்லது ரவா வெஜ் கிச்சடியுடன் பரிமாறவும்.

IDDLI UPMA. இட்லி உப்புமா

IDDLI UPMA. இட்லி உப்புமா.

IDDLI UPMA:-

NEEDED:-

IDDLI - 4 NOS
BIG ONION - 1 CHOPPED
GREEN CHILLY - 1 NO. SLIT OPEN
OIL - 2 TSP
MUSTARD - 1/2 TSP
ORID DHAL - 1 TSP
CURRY LEAVES - 1 ARK

METHOD:-

SOAK THE IDDLIS IN WATER, SQUEEZE THE WATER AND SMASH THEM PARTIALLY. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD GREEN CHILLY, ONION, CURRY LEAVES. SAUTE FOR A MINUTE. ADD THE SCRAMBLED IDDLI AND STIRR WELL. SERVE HOT WITH IDDLI PODI.

இட்லி உப்புமா.

தேவையானவை:-

இட்லி - 4
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரியவும்.
பச்சை மிளகாய் - 1 இரண்டாக வகிரவும்.
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை:-

இட்லிகளைத் தண்ணீரில் நனைத்து உதிர்க்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும், பச்சை மிளகாய், கருவேப்பிலை, வெங்காயம் போட்டுத் தாளிக்கவும். நன்கு வதங்கியதும் அதில் இட்லியைப் போட்டுக் கிளறி சூடாக எடுத்து இட்லிப் பொடியுடன் பரிமாறவும்.

CARROT ORANGE JUICE..காரட் ஆரஞ்ச் ஜூஸ்.

CARROT ORANGE JUICE..காரட் ஆரஞ்ச் ஜூஸ்.

CARROT ORANGE JUICE:-

NEEDED:-

CARROT - 1 NO
ORANGE - 2 NOS
SUGAR - 2 TSP
ICE CUBES - 4 NOS.
WATER - 2 CUPS

METHOD:-

PEEL CARROT & CUT INTO CUBES. PEEL ORANGE, REMOVE SKIN AND SEEDS. ADD ALL THE INGREDIENTS AND RUN THE JUICER MIXER UNTIL ALL THE JUICE COMEOUT OF THE MESH. ADD A LITTLE WATER AND EXTRACT THE REST. POUR IT IN A GLASS TUMBLER OR SILVER TUMBLER AND SERVE.

காரட் ஆரஞ்ச் ஜூஸ்:-

தேவையானவை:-

காரட் - 1
ஆரஞ்ச் - 2
ஜீனி - 2 டீஸ்பூன்
ஐஸ் கட்டிகள் - 4
தண்ணீர் - 2 கப்

செய்முறை:-

காரட்டைத் தோலுரித்து சதுரத் துண்டுகளாக்கவும். ஆரஞ்சைத் தோலுரித்து விதை நீக்கவும். காரட், ஆரஞ்ச், ஜீனி, ஐஸ்துண்டுகள், தண்ணீர் எல்லாவற்றையும் சேர்த்து ஜூசர் மிக்சரில் போட்டு ஜூசை வடிகட்டவும். மிச்சமிருக்கும் சக்கையில் இன்னும் சிறிது நீர் ஊற்றி மிச்ச ஜூசையும் வடிகட்டி கண்ணாடி டம்ளர் அல்லது சில்வர் டம்ளர்களில் பரிமாறவும்.

LEMON HONEY. லெமன் ஹனி.

LEMON HONEY.  லெமன் ஹனி.

LEMON HONEY.

NEEDED:-

LEMON - 1 NO
HONEY - 1 TBLSPN
SUGAR - 1 TSP
SALT - 1 PINCH
WATER - 2 CUPS
ICE CUBES - 4.

METHOD:-

SQUEEZE THE LEMON. ADD HONEY, SUGAR , SALT, ICECUBES AND RUN THE JUICER MIXER WITH ENOUGH WATER FOR A MINUTE. POUR IT IN A GLASS TUMBLER AND SERVE.

லெமன் ஹனி:-

தேவையானவை:-

எலுமிச்சை - 1
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
ஜீனி - 1 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
தண்ணீர் - 2 கப்
ஐஸ் க்யூப்ஸ் - 4

செய்முறை:-

எலுமிச்சையைச் சாறு பிழிந்து தேன், உப்பு, ஜீனி, ஐஸ் கட்டிகள், தேவையான தண்ணீர் சேர்த்து ஜூசரில் ஒரு நிமிடம் ஓடவிட்டு கண்ணாடி டம்ளர்களில் ஊற்றிப் பரிமாறவும்

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

PAANAGAM. பானகம்.:-

PAANAGAM.  பானகம்.:-

NEEDED:-

JAGGERY - 1 CUP
LEMON JUICE - 1/2 TBLSPN,
SUKKUP PODI - 1 PINCH
SALT - 1 PINCH
CARDAMOM POWDER - 1/2 TSP
TAMARIND - 1 POD ( OPTIONAL)
WATER - 1LITRE.

METHOD:-
SOAK JAGGERY IN WATER AND FILTER IT. ( IF DESIRED SOAK AND SQUEZE THE TAMARIND IN THIS WATER . ) ADD LEMON JUICE, SUKKUP PODI, SALT, CARDAMOM POWDER. MIX WELL AND SERVE.

பானகம்:-

தேவையானவை:-

வெல்லம் - 1 கப்
எலுமிச்சைச் சாறு - 1/2 டேபிள் ஸ்பூன்
சுக்குப் பொடி - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
ஏலக்காய்ப் பொடி - 1/2 டீஸ்பூன்
புளி - 1 சுளை ( விரும்பினால்)
தண்ணீர் - 1 லி

செய்முறை:-
வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். புளி சேர்ப்பதாக இருந்தால் இந்தத் தண்ணீரில் புளியையும் போட்டுக் கரைத்து வடிகட்டலாம். எலுமிச்சைச்சாறு, சுக்குப் பொடி, உப்பு, ஏலக்காய்ப் பொடி சேர்த்து நன்கு கலக்கி வழங்கவும்.

BUTTERMILK. நீர்மோர்

BUTTERMILK.  நீர்மோர்.

BUTTERMILK:-

NEEDED:-
CURD -  1 CUP
WATER - 5 CUPS
JEERA - 1 TSP
ASAFOETIDA POWDER - 1 PINCH
CURRY, CORIANDER LEAVES - 1 TSP CHOPPED
GREEN CHILLY - ( OPTIONAL). 1 NO.
SALT - 1 TSP

METHOD:-
BEAT CURD WELL WITH A LADDLE/ MATHU. ADD SALT, HALVED GREEN CHILLY, JEERA, ASAFOETIDA POWDER, CURRY, CORIANDER LEAVES. ADD WATER, MIX WELL AND SERVE. IF DESIRED ADD ICE CUBES.

நீர்மோர்

தேவையானவை:-
தயிர் - 1 கப்
தண்ணீர் - 5 கப்
ஜீரா - 1 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை
கருவேப்பிலை, கொத்துமல்லித்தழை - 1 டீஸ்பூன் பொடியாக அரிந்தது
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:-
தயிரை மத்துக் கொண்டு நன்கு கடையவும். அதில் உப்பு, இரண்டாகக் கீறிய பச்சைமிளகாய், ஜீரகம் பெருங்காயப் பொடி, கருவேப்பிலை, கொத்துமல்லித்தழை போட்டுத் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து வழங்கவும். தேவைப்பட்டால் ஐஸ்துண்டுகள் சேர்க்கவும்.

MANATHTHAKKAALIK KEERAI MANDI. (SOLANUM NIGRUM. ). மணத்தக்காளிக் கீரை மண்டி.

மணத்தக்காளிக்கீரை மண்டி::- ( நீர்ச் சாறு)
**********************************
NEEDED:-

MANATHAKKAALIK KEERAI - 1 BUNCH
SMALL ONION - 10 NOS PEEL AND HALVED
RICE RINSED WATER - 2 CUP
COCONUT - 1 TBLSPN. GROUND FINELY
OIL - 2 TSP
ORID DHAL - 1 TSP
JEERA - 1/2 TSP
RED CHILLIE -1 NO HALVED
SALT - 1/2 TSP

METHOD:-

CLEAN, WASH AND CHOP THE GREENS. HEAT OIL IN A PAN ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN  ADD JEERA, RED CHILLIE AND SMALL ONIONS. SAUTE FOR A MINUTE THEN ADD THE GREENS. SAUTE FOR ANOTHER 2 MINUTES THEN ADD THE RICE RINSED WATER. BRING TO BOIL AND SIMMER IT FOR ANOTHER 5 MINUTES. ADD THE SALT AND COCONUT PASTE AND REMOVE FROM FIRE.

WE CAN DRINK THIS OR CAN EAT THIS MIXED WITH PLAIN RICE.

மணத்தக்காளிக் கீரை மண்டி :-
தேவையானவை:-

மணத்தக்காளிக் கீரை அல்லது பொன்னாங்கண்ணிக் கீரை அல்லது அரைக்கீரை, அல்லது முளைக்கீரை அல்லது அகத்திக் கீரை. - ஒரு கட்டு.
சின்ன வெங்காயம் - 10 தோலுரித்து இரண்டாக நறுக்கவும்.
அரிசி களைந்த கெட்டித்தண்ணீர் - 2 கப்
தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் நைசாக அரைக்கவும்.
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 1 இரண்டாகக் கிள்ளி வைக்கவும்.
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:-
கீரையை நன்கு கழுவி ஆய்ந்து நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து போட்டு சிவந்ததும், சீரகம் போட்டுப் பொறிந்ததும், வரமிளகாய் சின்ன வெங்காயம் தாளிக்கவும். ஒரு நிமிடம் வதக்கிய பின் கீரையை சேர்க்கவும்.  2 நிமிடம் கீரையை வதக்கியபின் அரிசி களைந்த கெட்டித் தண்ணீரை ஊற்றவும். கொதித்து வரும்போது சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.

வெங்காயமும் கீரையும் வெந்தபின் உப்பு,  அரைத்த தேங்காய் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்து இறக்கவும். இதை சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம். சூப் போல அப்படியேயும் குடிக்கலாம்.

INSTANT MANGO PICKLE. பச்சரிசி மாங்காய் ஊறுகாய்.

INSTANT MANGO PICKLE. பச்சரிசி மாங்காய் ஊறுகாய்.

NEEDED:-

MANGO - 1 NO
RED CHILLI POWDER - 1 TSP
SALT - 1/2 TSP
ASAFOETIDA POWDER - 1 PINCH.
OIL - 1 TSP
MUSTARD - 1/2 TSP

METHOD:-

WASH AND CHOP THE MANGO. ADD SALT AND RED CHILLI POWDER AND ASAFOETIDA POWDER. HEAT OIL AND ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD THIS TO THE PICKLE. STIRR WELL AND SERVE IT WITH CURD RICE.

பச்சரிசி மாங்காய் ஊறுகாய்:-

தேவையானவை:-

பச்சரிசி மாங்காய் - 1
வரமிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை.
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:-

மாங்காயைக் கழுவிக் கொட்டை நீக்கிப் பல்லுப் பல்லாக நறுக்கவும். அதில் உப்பு, பெருங்காயப்பொடி, மிளகாய்ப்பொடியைப் போடவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகைப் பொறித்து ஊறுகாயில் போட்டு நன்கு கலக்கிப் பரிமாறவும்.

CUCUMBER THAYIRPPACHADI .வெள்ளரிக்காய் தயிர்ப்பச்சடி.

CUCUMBER THAYIRPPACHADI .வெள்ளரிக்காய் தயிர்ப்பச்சடி :-

NEEDED:-

CUCUMBER - 1 NO
CURD - 1 CUP
SALT - 1/4 TSP
SUGAR -1 PINCH
OIL - 1 TSP
MUSTARD - 1/4 TSP

METHOD:-
HANG THE CURD IN A CLOTH TO DRAIN THE WATER IN IT. OPEN THE CLOTH & PLACE IT IN A BOWL . WASH PEEL AND CHOP THE  CUCUMBER .  ADD  THE CURD. ADD SUGAR & SALT. STIRR WELL.  HEAT OIL . ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD IT TO THE  THAYIRPPACHADI.  REFRIDGERATE & SERVE.

வெள்ளரிக்காய் தயிர்ப்பச்சடி:-

தேவையானவை:-

வெள்ளரிக்காய் - 1
தயிர் - 1 கப்
உப்பு - 1/4 டீஸ்பூன்
சீனி - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்.

செய்முறை:-
ஒரு துணியில் தயிரைக் கட்டித் தொங்கவிடவும். அதிலிருக்கும் தண்ணீர் வடிந்ததும் ஒரு பவுலில் போடவும்.  வெள்ளரிக்காயைக் கழுவித் தோலுரித்துக் குச்சியாக  நறுக்கவும்.  உப்பு, சீனி சேர்த்து நன்கு கலக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டிக் குளிரவைத்துப் பரிமாறவும்.

திங்கள், 15 ஏப்ரல், 2013

CHAYOTE (CHOW CHOW) SAMBAR.. சௌ சௌ சாம்பார்.



CHAYOTE (CHOW CHOW)  SAMBAR.

NEEDED:-

CHOW CHOW -  1 NO.
SMALL ONION - 6 NOS
TOMATO - 1 NO
BOILED THUVAR DHAL - 1 CUP
TAMARIND - 1 AMLA SIZE BALL
SALT - 1 TSP
RED CHILLI POWDER - 2 TSP
CORIANDER POWDER - 2 TSP
TURMERIC POWDER - 1 PINCH
OIL - 1 TSP
MUSTARD - 1 TSP
JEERA - 1/2 TSP
ASAFOETIDA  POWDER - 1 PINCH
CURRY LEAVES - 2 ARK
CHOPPED CORIANDER LEAVES  - 1 TSP

METHOD:-
PEEL THE SKIN AND DICE THE CHOWCHOW. PEEL AND CUT THE ONION ,&  TOMATO. SOAK TAMARIND IN 3 CUPS OF WATER WITH SALT. SQEEZE THE PULP & ADD THE TURMERIC POWDER, RED CHILLI POWDER & CORIANDER POWDER.
PRESSURE COOK THE THUVAR DHAL , CHOW CHOW ,ONION, TOMATO WITH A PINCH OF ASAFOETIDA AND TURMERIC POWDER. AFTER ONE WHISTLE REMOVE THE COOKER FROM FIRE. AFTER COOLING OPEN THE LID AND ADD THE TAMARIND PULP. COOK FOR 7 MINUTES.

HEAT ONE TSP OIL IN AN  IRON LADLE. ADD MUSTARD, JEERA, ASAFOETIDA POWDER, RED CHILLIES AND CURRY LEAVES. TOSS THAT IN THE BOILING SAMBAR. SERVE HOT WITH  PLAIN RICE WITH  APPALAMS  AND BINDI/PLANTAIN  MASALA. 

NOTE:- FOR ADDITIONAL TASTE  GROUND 2 PODS OF GARLIC, 1/2 TSP JEERA. 1 TSP POPPY SEEDS . ADD THIS PASTE TO THE BOILING SAMBAR AND OFF THE GAS. ADD CHOPPED CORIANDER TOO.

சௌ சௌ சாம்பார்:-

தேவையானவை.:-
சௌ சௌ  -  1
சின்ன வெங்காயம் - 6
தக்காளி - 1
வேகவைத்த துவரம் பருப்பு
புளி - 1 நெல்லிக்காய் அளவு
உப்பு - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை
கருவேப்பிலை - 1 இணுக்கு
கொத்துமல்லி பொடியாக அரிந்தது - 1 டீஸ்பூன்

செய்முறை:-
சௌ சௌவைத் தோல் சீவி  2 இஞ்ச்  சதுரங்களாக வெட்டவும். சின்ன வெங்காயத்தைத்  தோலுரித்து நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் உப்புடன்  ஊறப்போட்டுப் பிழிந்து சாறு எடுக்கவும். அதில் மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, மிளகாய்ப் பொடியைப் போடவும்.
ப்ரஷர் பானில் வேகவைத்த பருப்பு,, சௌ சௌ , சி. வெங்காயம், தக்காளி போட்டு ஒரு சிட்டிகை பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு வேகவிடவும். ஒரு விசில் சத்தம் வந்ததும் இறக்கி ஆறியதும் திறந்து புளிக்கரைசலை ஊற்றவும். 7 நிமிடங்கள் கொதித்து வாசனை வந்ததும்  அடுப்பை அணைக்கவும்.

ஒரு இரும்புக் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெயைக் காயவைக்கவும். அதில் கடுகு போட்டு வெடித்ததும் சீரகம், பெருங்காயப் பொடி, வரமிளகாய், கருவேப்பிலை தாளித்து சாம்பாரில்  கொட்டி சூடா சாதம், அப்பளம் , வெண்டிக்காய்/வாழைக்காய் மசாலாவுடன் பரிமாறவும். 

குறிப்பு :- மேலும் சுவை கூட்ட :-  இரண்டு பல் பூண்டு, 1/2 டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் கசகசாவை அரைத்து கொதிக்கும் குழம்பில் கொட்டி இறக்கவும். பொடியாக அரிந்த கொத்துமல்லியும் தூவலாம்.


FRUIT GHEER. பழப் பாயாசம்.



FRUIT GHEER.  பழப் பாயாசம்.

FRUIT GHEER:-

NEEDED:-
FRUIT TIN – 1 NO. (OR)
DICED APPLE, PINEAPPLE, GREEN & BLACK GRAPES ( SEEDLESS),CHERRIES – MIXED 1 CUP
MILK – 1 LITRE
BADAM – 5 NOS
CASHEW – 5 NOS
CUSTARD POWDER – 1 TBLSPN
SUGAR – ½ CUP
FRUIT ESSENCE – 3 DROPS
SARAP PARUPPU – 1 TBLSPN.
GHEE – 1 TSP.

METHOD:-
SOAK BADAM AND CASHEW IN HOT WATER. PEEL BADAM AND GROUND WITH CASHEW. ADD THE FINE PASTE INTO THE BOILING MILK. COOK FOR 2 MINUTES. MIX CUSTARD WITH LITTLE WARM MILK AND POUR THIS TO THE BOILING MIXTURE. ADD SUGAR. STIRR WELL. COOK FOR ANOTHER 2 MINUTES AND REMOVE FROM FIRE.

AFTER COOLING ADD THE FRUIT ESSENCE AND MIXED FRUITS. TOSS IT WITH SARAIP PARUPPU FRIED IN GHEE. REFRIDGERATE AND SERVE AFTER 3 HOURS. 

பழப் பாயாசம்:-

தேவையானவை :-
பழ டின் – 1 ( அல்லது)
சதுரத் துண்டுகளாக்கிய ஆப்பிள், பைன் ஆப்பிள், பச்சை,கறுப்பு திராக்ஷைகள்( விதையில்லாதது), செர்ரிப் பழம் – இந்தக் கலவை 1 கப்.
பால் – 1 லிட்டர்.
பாதாம் – 5
முந்திரி – 5
கஸ்டர்ட் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
சீனி – ½ கப்
பழ எஸென்ஸ் – 3 சொட்டு
சாரைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்.
நெய் – 1 டீஸ்பூன்.

செய்முறை:-
பாதாமையும் முந்திரியையும் வெந்நீரில் ஊறப்போடவும். பாதாமை உரித்து முந்திரியுடன் அரைத்துக் கொதிக்கும் பாலில் ஊற்றவும். இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும். கஸ்டர்ட் பவுடரை வெதுவெதுப்பான பாலில் கரைத்துக் கொதிக்கும் பாலில் ஊற்றவும். சீனியை சேர்க்கவும். நன்கு கலக்கி இரண்டு நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி ஆறவிடவும்.

ஆறியதும் அதில் பழ எஸென்ஸ், மற்றும் பழக் கலவையைச் சேர்க்கவும். சாரைப்பருப்பை நெய்யில் வறுத்துத் தூவி ஃப்ரிஜ்ஜில் 3 மணி நேரம் குளிரவைத்துப் பரிமாறவும்.

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

CHICKEN TUKADA சிக்கன் துக்கடா.

CHICKEN TUKADA சிக்கன் துக்கடா.

CHICKEN TUKADA:-

NEEDED:-
CHICKEN WITH BONES - 250 GMS ( MAKES INTO TINY PIECES)
RED CHILLI POWDER - 2 TSP
EGG - 1 NO
GINGER GARLIC PASTE - 1 TSP
CORN FLOUR -  1/2 TBLSPN
SALT - 1 TSP
OIL - FOR FRYING

METHOD:-
WASH  THE CHICKEN WELL AND ADD ALL THE INGREDIENTS. STIRR WELL AND MARINATE FOR 2 HOURS. HEAT OIL AND  DEEP FRY. SERVE HOT WITH LEMON RINDS AND ONION RINGS.

சிக்கன் துக்கடா:-

தேவையானவை:-
சிக்கன் எலும்புடன் - 250 கி ( சின்னத் துண்டுகளாக்கவும் )
வரமிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
முட்டை - 1
இஞ்சி பூண்டு மசாலா - 1 டீஸ்பூன்
சோள மாவு - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-
சிக்கனை நன்கு கழுவி எண்ணெய் தவிர எல்லாவற்றையும் சேர்த்துப் பிசறி இரண்டுமணி நேரம் ஊறவைக்கவும். எண்ணெயைக் காயவைத்து நன்கு பொறித்தெடுக்கவும். எலுமிச்சை, வெங்காய ஸ்லைஸ்களுடன் பரிமாறவும்.

DRIED MANGO SAMBAR மாவற்றல் சாம்பார்.

DRIED MANGO SAMBAR  மாவற்றல் சாம்பார்.


NEEDED:-
DRIED MANGO PIECES - 15 NOS.
SMALL ONION - 6 NOS
TOMATO - 1 NO
BOILED THUVAR DHAL - 1 CUP
SALT - 1 TSP
RED CHILLI POWDER - 1 TSP
CORIANDER POWDER - 2 TSP
TURMERIC POWDER - 1 PINCH
OIL - 1 TSP
MUSTARD - 1 TSP
JEERA - 1/2 TSP
ASAFOETIDA  POWDER - 1 PINCH
CURRY LEAVES - 2 ARK


METHOD:-
PEEL AND CUT THE ONION ,& TOMATO. .  ADD THE TURMERIC POWDER, RED CHILLI POWDER & CORIANDER POWDER WITH SALT.

PRESSURE COOK THE THUVAR DHAL , DRIED MANGO PIECES, ONION, TOMATO WITH A PINCH OF ASAFOETIDA AND TURMERIC POWDER. AFTER THREE  WHISTLES REMOVE THE COOKER FROM FIRE. AFTER COOLING OPEN THE LID AND SMASH WELL ADD ENOUGH WATER AND  THE C,C, T, POWDERS AND COOK FOR 5 MINUTES.

HEAT ONE TSP OIL IN A  IRON LADLE. ADD MUSTARD, JEERA, ASAFOETIDA POWDER, AND CURRY LEAVES. TOSS THAT IN THE BOILING SAMBAR. SERVE HOT WITH  PLAIN RICE WITH  BINDI OR  POTATO CURRY. 

மாவற்றல்  சாம்பார்:-

தேவையானவை.:-
மாவற்றல் துண்டுகள்   -  15
சின்ன வெங்காயம் - 6
தக்காளி - 1
வேகவைத்த துவரம் பருப்பு
உப்பு - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை.
கருவேப்பிலை - 1 இணுக்கு


செய்முறை:-
சின்ன வெங்காயத்தைத்  தோலுரித்து நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும்.  மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, மிளகாய்ப் பொடி, உப்பு  ஆகியவற்றைக் கலந்து வைக்கவும்.

ப்ரஷர் பானில் வேகவைத்த பருப்பு,, மாவற்றல்  , சி. வெங்காயம், தக்காளி போட்டு ஒரு சிட்டிகை பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு வேகவிடவும். மூன்று விசில் சத்தம் வந்ததும் இறக்கி ஆறியதும் திறந்து தேவையான தண்ணீர் ஊற்றி மசாலாப் பொடிகளைப் போடவும்.  5 நிமிடங்கள் கொதித்து வாசனை வந்ததும்  அடுப்பை அணைக்கவும்.

ஒரு இரும்புக் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெயைக் காயவைக்கவும். அதில் கடுகு போட்டு வெடித்ததும் சீரகம், பெருங்காயப் பொடி, வரமிளகாய், கருவேப்பிலை தாளித்து சாம்பாரில்  கொட்டி சூடான  சாதம், வெண்டிக்காய் அல்லது உருளைக் கறியுடன் பரிமாறவும்.

PHULKA . ஃபுல்கா

PHULKA . ஃபுல்கா

NEEDED:-
ATTA - 2 CUPS
SALT - 1/2 TSP
MILK - 1 TBLSPN
OIL - 2 TSP
WARM WATER - NEEDED AMT

METHOD :-
ADD OIL , MILK, SALT IN ATTA  AND KNEAD WELL WITH ENOUGH WARM WATER. KEEP THE DOUGH COVERED WTTH WET CLOTH FOR 2 HOURS. MAKE 12 EQUAL BALLS & ROLL THEM AS CHAPPATIS.

HEAT THE TAWA AND PUT THE CHAPPATIS AND TURN THEM OFTEN TILL BECOMES FLUFFY. SERVE HOT WITH  ALOO TOMATAR. OR ANY SUKA SUBJIS AND DHAL.

ஃபுல்கா:-

தேவையானவை:-
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
பால் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
வெதுவெதுப்பான தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:-
கோதுமை மாவில் எண்ணெய், பால், உப்பு சேர்த்து தேவையான வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்துப் பிசையவும். பிசைந்த மாவை ஈரத்துணி கொண்டு மூடி 2 மணி நேரம் ஊறவைக்கவும். அதை 12 சமபாகங்களாகப் பிரித்து சப்பாத்தியாகத் தேய்க்கவும்.

தவாவை சூடுபடுத்தி அதில் சப்பாத்திகளைப் போட்டு எண்ணெய் ஊற்றாமல் திருப்பித் திருப்பி வேகவிட்டு உப்பியதும் எடுத்து ஆலு டமாட்டர் அல்லது சுக்கா சப்ஜி, தாலுடன் பரிமாறவும்.

ALOO TOMATOR ஆலு டமாட்டர்.

ALOO TOMATOR  ஆலு டமாட்டர்.

NEEDED:-

ALOO - 2 NOS
TOMATO - 3 NOS
JEERA - 1 TSP
CHILLI POWDER - 1 TSP
GARAM MASALA - 1/2 TSP
AMCHUR POWDER - 1/4 TSP
SALT - 1/3 TSP
OIL -  3 TSP

METHOD:-
WASH AND CUT THE ALOO AND TOMATO INTO FINGER LIKE PIECES.  HEAT OIL IN A PAN. ADD JEERA AND TOMATO AND ALOO.SAUTE WELL FOR 4 MINUTES. ADD CHILLI POWDER , GARAM MASALA , AMCHUR AND SALT. COOK TILL THE OIL SEPERATES AT THE SIDES. SERVE HOT WITH RUMALI ROTI OR CHAPPATHI.

ஆலு டமாட்டர்.

தேவையானவை :-
உருளைக்கிழங்கு - 2
தக்காளி - 3
ஜீரகம் - 1 டீஸ்பூன்
வரமிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலாப் பொடி - 1/2 டீஸ்பூன்
ஆம்சூர்ப் பொடி - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/3 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்

செய்முறை:-
உருளை மற்றும் தக்காளியை நன்கு கழுவி விரல் நீளத் துண்டுகளாக்கவும். எண்ணெயைக் காயவைத்து ஜீரகம் தாளிக்கவும். அதில் உருளை , தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.  உப்பு, ஆம்சூர் பொடி, வரமிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்க்கவும். நன்கு கிளறி வேகவைத்து  ஓரங்களில் எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.  ருமாலி ரோட்டி, சப்பாத்தியுடன் பரிமாறவும்.

COCONUT MILK KANJI . தேங்காய்ப்பால் கஞ்சி

COCONUT MILK KANJI . தேங்காய்ப்பால் கஞ்சி.

COCONUT MILK KANJI:-

NEEDED:-
RAW RICE - 1 CUP
COCONUT MILK - THICK - 1 CUP
COCONUT MILK - WITH WATER - 2 CUPS
FENUGREEK - 1 TSP
GARLIC - 10 PODS
SALT - 1/2 TSP


METHOD:-
WASH RAW RICE WITH FENUGREEK. ADD GARLIC AND 2 CUPS OF COCONUT MILK WITH WATER AND PRESSURE COOK FOR 3 WHISTLES. AFTER COOLING SMASH WELL WITH A LADDLE. ADD SALT AND THE THICK COCONUT MILK.

SERVE IT WITH JAGGERY OR PICKLES OR  DHAL CHUTNEY  ( PARUPPU THUVAIYAL.)

NOTE:- THIS IS GOOD FOR THE CURE OF MOUTH AND STOMACH ULCERS.

தேங்காய்ப்பால் கஞ்சி:-

தேவையானவை :-
பச்சரிசி - 1 கப்
தேங்காய்ப்பால் - திக் - 1 கப்
தேங்காய்ப்பால் - தண்ணீர் கலந்தது - 2 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
வெள்ளைப் பூண்டு - 10 பல்
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:-
பச்சரிசியைக் கழுவி வெந்தயம், பூண்டைச் சேர்த்து தண்ணீர் ஊற்றிப் பிழிந்த தேங்காய்ப் பால் 2 கப் ஊற்றி 3 விசில் சத்தம் வரும்வரை வைக்கவும். பிரஷர் போனதும் திறந்து நன்கு மசித்து உப்பும் முதல் தேங்காய்ப் பாலும் சேர்க்கவும்.

இதை அச்சு வெல்லம் அல்லது ஊறுகாய் அல்லது பருப்புத் துவையலுடன் பரிமாறவும்.

குறிப்பு:- இது வாய்ப்புண் வயிற்றுப் புண்ணை ஆற்றும்.

BROAD BEANS SAMBAR. அவரைக்காய் சாம்பார்.

BROAD BEANS SAMBAR.

NEEDED:-
BROAD BEANS - 200 GMS
SMALL ONION - 6 NOS
TOMATO - 1 NO
BOILED THUVAR DHAL - 1 CUP
TAMARIND - 1 AMLA SIZE BALL
SALT - 1 TSP
RED CHILLI POWDER - 2 TSP
CORIANDER POWDER - 2 TSP
TURMERIC POWDER - 1 PINCH
OIL - 1 TSP
MUSTARD - 1 TSP
JEERA - 1/2 TSP
ASAFOETIDA  POWDER - 1 PINCH
CURRY LEAVES - 2 ARK
CHOPPED CORIANDER LEAVES  - 1 TSP

METHOD:-
REMOVE THE NERVES AND CUT THE BROAD BEANS INTO  2 INCH PIECES.  PEEL AND CUT THE ONION ,& TOMATO. SOAK TAMARIND IN 3 CUPS OF WATER WITH SALT. SQEEZE THE PULP & ADD THE TURMERIC POWDER, RED CHILLI POWDER & CORIANDER POWDER.

PRESSURE COOK THE THUVAR DHAL , BEANS,ONION, TOMATO WITH A PINCH OF ASAFOETIDA AND TURMERIC POWDER. AFTER ONE WHISTLE REMOVE THE COOKER FROM FIRE. AFTER COOLING OPEN THE LID AND ADD THE TAMARIND PULP. COOK FOR 7 MINUTES.

HEAT ONE TSP OIL IN A  IRON LADLE. ADD MUSTARD, JEERA, ASAFOETIDA POWDER, RED CHILLIES AND CURRY LEAVES. TOSS THAT IN THE BOILING SAMBAR. SERVE HOT WITH  PLAIN RICE WITH  APPALAMS  AND URULAI  MASALA.

NOTE:- FOR ADDITIONAL TASTE  GROUND 2 PODS OF GARLIC, 1/2 TSP JEERA. 1 TSP POPPY SEEDS . ADD THIS PASTE TO THE BOILING SAMBAR AND OFF THE GAS. ADD CHOPPED CORIANDER TOO.

அவரைக்காய்  சாம்பார்:-

தேவையானவை.:-
அவரைக்காய்  - 200 கி
சின்ன வெங்காயம் - 6
தக்காளி - 1
வேகவைத்த துவரம் பருப்பு
புளி - 1 நெல்லிக்காய் அளவு
உப்பு - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை
கருவேப்பிலை - 1 இணுக்கு
கொத்துமல்லி பொடியாக அரிந்தது - 1 டீஸ்பூன்

செய்முறை:-
அவரைக்காயை  நரம்பை நீக்கி  2 இஞ்ச் துண்டுகளாக வெட்டவும். சின்ன வெங்காயத்தைத்  தோலுரித்து நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் உப்புடன் ஊறப்போட்டுப் பிழிந்து சாறு எடுக்கவும். அதில் மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, மிளகாய்ப் பொடியைப் போடவும்.

ப்ரஷர் பானில் வேகவைத்த பருப்பு,, அவரைக்காய் , சி. வெங்காயம், தக்காளி போட்டு ஒரு சிட்டிகை பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு வேகவிடவும். ஒரு விசில் சத்தம் வந்ததும் இறக்கி ஆறியதும் திறந்து புளிக்கரைசலை ஊற்றவும். 7 நிமிடங்கள் கொதித்து வாசனை வந்ததும்  அடுப்பை அணைக்கவும்.

ஒரு இரும்புக் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெயைக் காயவைக்கவும். அதில் கடுகு போட்டு வெடித்ததும் சீரகம், பெருங்காயப் பொடி, வரமிளகாய், கருவேப்பிலை தாளித்து சாம்பாரில்  கொட்டி சூடான  சாதம், அப்பளம் , உருளை மசாலாவுடன் பரிமாறவும்.

குறிப்பு :- மேலும் சுவை கூட்ட :-  இரண்டு பல் பூண்டு, 1/2 டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் கசகசாவை அரைத்து கொதிக்கும் குழம்பில் கொட்டி இறக்கவும். பொடியாக அரிந்த கொத்துமல்லியும் தூவலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...