புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

திங்கள், 15 ஏப்ரல், 2013

CHAYOTE (CHOW CHOW) SAMBAR.. சௌ சௌ சாம்பார்.CHAYOTE (CHOW CHOW)  SAMBAR.

NEEDED:-

CHOW CHOW -  1 NO.
SMALL ONION - 6 NOS
TOMATO - 1 NO
BOILED THUVAR DHAL - 1 CUP
TAMARIND - 1 AMLA SIZE BALL
SALT - 1 TSP
RED CHILLI POWDER - 2 TSP
CORIANDER POWDER - 2 TSP
TURMERIC POWDER - 1 PINCH
OIL - 1 TSP
MUSTARD - 1 TSP
JEERA - 1/2 TSP
ASAFOETIDA  POWDER - 1 PINCH
CURRY LEAVES - 2 ARK
CHOPPED CORIANDER LEAVES  - 1 TSP

METHOD:-
PEEL THE SKIN AND DICE THE CHOWCHOW. PEEL AND CUT THE ONION ,&  TOMATO. SOAK TAMARIND IN 3 CUPS OF WATER WITH SALT. SQEEZE THE PULP & ADD THE TURMERIC POWDER, RED CHILLI POWDER & CORIANDER POWDER.
PRESSURE COOK THE THUVAR DHAL , CHOW CHOW ,ONION, TOMATO WITH A PINCH OF ASAFOETIDA AND TURMERIC POWDER. AFTER ONE WHISTLE REMOVE THE COOKER FROM FIRE. AFTER COOLING OPEN THE LID AND ADD THE TAMARIND PULP. COOK FOR 7 MINUTES.

HEAT ONE TSP OIL IN AN  IRON LADLE. ADD MUSTARD, JEERA, ASAFOETIDA POWDER, RED CHILLIES AND CURRY LEAVES. TOSS THAT IN THE BOILING SAMBAR. SERVE HOT WITH  PLAIN RICE WITH  APPALAMS  AND BINDI/PLANTAIN  MASALA. 

NOTE:- FOR ADDITIONAL TASTE  GROUND 2 PODS OF GARLIC, 1/2 TSP JEERA. 1 TSP POPPY SEEDS . ADD THIS PASTE TO THE BOILING SAMBAR AND OFF THE GAS. ADD CHOPPED CORIANDER TOO.

சௌ சௌ சாம்பார்:-

தேவையானவை.:-
சௌ சௌ  -  1
சின்ன வெங்காயம் - 6
தக்காளி - 1
வேகவைத்த துவரம் பருப்பு
புளி - 1 நெல்லிக்காய் அளவு
உப்பு - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை
கருவேப்பிலை - 1 இணுக்கு
கொத்துமல்லி பொடியாக அரிந்தது - 1 டீஸ்பூன்

செய்முறை:-
சௌ சௌவைத் தோல் சீவி  2 இஞ்ச்  சதுரங்களாக வெட்டவும். சின்ன வெங்காயத்தைத்  தோலுரித்து நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் உப்புடன்  ஊறப்போட்டுப் பிழிந்து சாறு எடுக்கவும். அதில் மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, மிளகாய்ப் பொடியைப் போடவும்.
ப்ரஷர் பானில் வேகவைத்த பருப்பு,, சௌ சௌ , சி. வெங்காயம், தக்காளி போட்டு ஒரு சிட்டிகை பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு வேகவிடவும். ஒரு விசில் சத்தம் வந்ததும் இறக்கி ஆறியதும் திறந்து புளிக்கரைசலை ஊற்றவும். 7 நிமிடங்கள் கொதித்து வாசனை வந்ததும்  அடுப்பை அணைக்கவும்.

ஒரு இரும்புக் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெயைக் காயவைக்கவும். அதில் கடுகு போட்டு வெடித்ததும் சீரகம், பெருங்காயப் பொடி, வரமிளகாய், கருவேப்பிலை தாளித்து சாம்பாரில்  கொட்டி சூடா சாதம், அப்பளம் , வெண்டிக்காய்/வாழைக்காய் மசாலாவுடன் பரிமாறவும். 

குறிப்பு :- மேலும் சுவை கூட்ட :-  இரண்டு பல் பூண்டு, 1/2 டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் கசகசாவை அரைத்து கொதிக்கும் குழம்பில் கொட்டி இறக்கவும். பொடியாக அரிந்த கொத்துமல்லியும் தூவலாம்.


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...