எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 31 அக்டோபர், 2013

MANAKOLAM .. மனகோலம் .

MANAKOLAM .. மனகோலம் .

NEEDED :-
GREENGRAM DAL - 2 CUPS
JAGGERY - 2 CUPS
SALT - 1/2 TSP
DALDA/OIL - FOR FRYING.

COCONUT - 5 INCH PIECE.
CHANNA GRAM DAL - 2 TBLSPN
GHEE - 2 TSP
SUGAR POWDER - 1 TBLSPN.

METHOD:-
FRY GREEN GRAM DAL. GROUND AND SIEVE IT. ADD SALT.POUR ENOUGH WATER AND MIX WELL  TO MAKE  A SMOOTH DOUGH.

HEAT DALDA OR OIL .PUT THE DOUGH IN MANAKOLAM KATTAI , SQUEEZE AND FRY IT .

SEPERATE THE MANAKOLAM AS 2 INCH PIECES. FRY THE CHANNA GRAM DAL IN GHEE . JULIENNED THE COCONUT AND FRY THAT ALSO IN GHEE.

MIX THE MANAKOLAM, FRIED CHANNA DAL, COCONUT IN A  SILVER OR BRASS BASIN .

ADD LITTLE WATER TO THE JAGGERY AND MAKE THICK PAGU  BY HEATING.

POUR THE VELLAP PAGU TO THE MANAKOLAM MIXTURE AND STIRR WELL.  SPRAY SUGAR POWDER. SERVE AFTER COOL.


THIS IS A CHETTINADU SPECIAL PALAKARAM.

MANAKOLAM .. மனகோலம் .

தேவையானவை:-
பாசிப்பருப்பு மாவு - 2 கப்
வெல்லம் - 2 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
டால்டா/எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

தேங்காய் - 5 இன்ச் துண்டு
பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
சீனி பொடித்தது - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:-
பாசிப்பருப்பை வெறும் வாணலியில் லேசாக  வறுத்து அரைத்துச் சலிக்கவும். உப்பும் தேவையான தண்ணீரும் சேர்த்து மாவு பிசையவும்.

எண்ணெய் அல்லது டால்டாவைக் காயவைத்து மனகோலக் கட்டையில் போட்டு பிழிந்து  2 இன்ச் துண்டுகளாக உதிர்த்து வைக்கவும்.

தேங்காயைப் பல்லுப் பல்லாக நறுக்கி நெய்யில் வதக்கவும். பொட்டுக்கடலையையும் நெய்யில் வறுத்துக் கொட்டவும்.

மனகோலம், தேங்காய், பொட்டுக்கடலை மூன்றையும் ஒரு சில்வர்/பித்தளை பேசினில்  போடவும்.

வெல்லத்தில் சிறிது நீர் சேர்த்து முற்றிய பாகு தயாரித்து இந்தக் கலவையில் ஊற்றிக் கலந்து விடவும். பொடித்த சீனியைத் தூவி ஆறியபின் பரிமாறவும்.

இது செட்டிநாட்டின் ஸ்பெஷல் பலகாரமாகும்.

6 கருத்துகள்:

  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_3.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. அக்கா,சூப்பராக இருக்கு,பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...