எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

CHICKEN DRUMSTICKS CHOPS.கோழி ( ட்ரம்ஸ்டிக்ஸ்) சாப்ஸ்.


CHICKEN DRUMSTICKS CHOPS:-

NEEDED:-

CHICKEN DRUMSTICKS - 2 NOS
RED CHILLI POWDER - 1 TBLSPNOR
REDCHILLIES - 10 NOS. ( GROUND TO PASTE)
SALT - 3/4 TSP
EGG - 1 NO ( OPTIONAL)
OIL - NEEDED

METHOD :-

WASH & ADD THE SALT AND CHILLI PASTE/POWDER TO THE CHICKEN. ADD 3 CUPS WATER AND COOK IN A MEDIUM FIRE. COOK TILL THE WATER EVAPORATES & THE CHICKEN BECOMES TENDER AND COVERED WITH MASALA. HEAT OIL IN A PAN FRY THE DRUMSTICKS AND SERVE HOT WITH BEETROOT RICE. ( IF DESIRED DIP THE DRUMSTICKS IN BEATEN EGG BEFORE FRYING).

கோழி ( ட்ரம்ஸ்டிக்ஸ்) சாப்ஸ் :-

தேவையானவை:-

கோழி கால் பகுதி - 2
வரமிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்( அல்லது)
சிவப்பு மிளகாய் - 10 ( பேஸ்டாக அரைக்கவும்)
உப்பு - 3/4 டீஸ்பூன்
முட்டை - 1 ( விரும்பினால்)
எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை:-

கோழி கால் பகுதியைக் கழுவி மிளகாய்ப் பொடி/ அரைத்த மிளகாய் விழுது, உப்பு சேர்க்கவும். அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் சமைக்கவும். எல்லா தண்ணீரும்  உறிஞ்சி சிக்கன் மென்மையாக வெந்து மசாலா திக்கானவுடன் எடுத்து எண்ணெயில் பொரித்து பீட்ரூட் சாதத்தோடு பரிமாறவும். ( விரும்பினால் பொறிக்குமுன் முட்டையை அடித்து அதில் நனைத்துப் பொரிக்கவும்.)

BEETROOT RICE. பீட்ரூட் சாதம்.

BEETROOT RICE :-

NEEDED:-

RICE - 1 CUP ( COOKED)
MOONG DHAL - 1 TBLSPB ( COOKED)
BEETROOT - 150 GMS CHOPPED
BIG ONION - 1 NO CHOPPED
TOMATO - 1 N CHOPPED
GINGER GARLIC PASTE - 2 TSP
RED CHILLI POWDER - 1 TSP
OIL - 2 TSP
BASIL LEAF - 1 INCH
CINNAMON - 1 INCH
CLOVE - 2 NOS
CARDAMOM - 1 NO.
SOMPH - 1/2 TSP
SALT - 1 TSP

METHOD:-
HEAT OIL IN A PAN ADD SOMPH, BASIL LEAF, CINNAMON, CLOVE, CARDAMOM, THEN ADD CHOPPED ONION. SAUTE FOR A MINUTE ADD GINGER GARLIC PASTE. FRY TILL BROWN ADD TOMATO, RED CHILLI POWDER, SALT, MOONG DHALL. SAUTE WELL & ADD LITTLE WATER. COOK FOR 5 MINUTES. REMOVE FROM FIRE. ADD RICE . MIX WELL. SERVE HOT WITH CHICKEN DRUMSTICKS CHOPS.

பீட்ரூட் சாதம்:-

தேவையானவை :-

அரிசி - 1 கப் ( சமைத்தது)
பாசிப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் ( வேகவைத்தது)
பீட்ரூட் - 150 கி துருவியது
பெரிய வெங்காயம் - 1 துருவியது
தக்காளி - 1 துருவியது.
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை - 1 இன்ச்
பட்டை - 1 இஞ்ச்
கிராம்பு - 2
ஏலக்காய்- 1
சோம்பு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:-
ஒரு பானில் எண்ணெயைச் சூடாக்கி சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போடவும். இவை பொரிந்ததும், வெங்காயத்தை வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்க்கவும். அது சிவப்பாக வரும்போது தக்காளி, வரமிளகாய்த்தூள், உப்பு, பாசிப்பருப்பு சேர்த்து நன்கு கிண்டவும். சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேகவைத்து அடுப்பில் இருந்து இறக்கவும். சாதத்தைச் சேர்த்து நன்கு கிளறவும். சூடாக சிக்கன் ட்ரம்ஸ்டிக்ஸ் சாப்ஸுடன் பரிமாறவும்.

புதன், 6 பிப்ரவரி, 2013

MOONG DHAL SUBJI மூங்தால் ( பாசிப்பயறு) சப்ஜி.:-

MOONG DHAL SUBJI:-



NEEDED:-

MOONG DHAL - 1 CUP
BIG ONION - 1 NO
TOMATO - 1 NO
GINGER GARLIC PASTE - 1 TSP
RED CHILLI POWDER - 1/2 TSP
DHANIYA POWDER - 1/2 TSP
TURMERIC POWDER - 1 PINCH
GARAM MASALA POWDER - 1/3 TSP
SALT - 1/2 TSP
OIL - 2 TSP

METHOD:-
FRY WASH AND PRESSURE COOK THE MOONG DHAL WITH NEEDED WATER. GROUND BIG ONION AND TOMATO SEPERATELY. HEAT OIL IN A PAN ADD GROUND ONION. SAUTE WELL. ADD GINGER GARLIC PASTE. SAUTE FOR 2 MINUTES. ADD ALL POWDERS WITH SALT AND TOMATO PASTE. SAUTE FOR A MINUTE AND ADD THE COOKED MOONGDHAL WITH WATER. COOK FOR 5 MINUTES AND SERVE HOT WITH GOBI BAROTTA OR ALOO BAROTTAS.



மூங்தால் ( பாசிப்பயறு) சப்ஜி

தேவையானவை:-
பாசிப்பயறு - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
வரமிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
தனியா தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
கரம் மசாலா பொடி - 1/3 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:-
பாசிப்பயறை வறுத்து கழுவி தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் வேகவிடவும். வெங்காயம், தக்காளியை தனித்தனியாக அரைக்கவும். ஒரு பானில் எண்ணெய் ஊற்றி வெங்காய பேஸ்டைப் போட்டு வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு பேஸ்டைப் போட்டு 2 நிமிடம் வதக்கி எல்லாப் பொடிகளையும் போட்டு உப்பு, தக்காளி பேஸ்ட் சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கி வேகவைத்த பாசிப்பயறைத் தண்ணீருடன் சேர்க்கவும். 5 நிமிடம் நன்கு சமைத்து கோபி பரோட்டா அல்லது ஆலு பரோட்டாக்களுடன் பரிமாறவும்.

GOBI BAROTTA கோபி பரோட்டா.

GOBI BAROTTA:-

NEEDED:-
ATTA - 2 CUPS
SALT - 1/2 TSP
BUTTER/GHEE - 1 TBLSPN
WATER & OIL - NEEDED.

GOBI - 1 CUP ( CHOPPED)
ONION - 1 TBL SPN CHOPPED
RED CHILLI POWDER - 1/3 TSP
GARAM MASALA - 1/4 TSP

METHOD:-
MIX BUTTER/GHEE & SALT WITH ATTA. ADD NEEDED WATER AND KNEAD IT WELL. COVER IT WITH A WET CLOTH AND KEEP ASIDE.

ADD CHOPPED GOBI, ONION, RED CHILLI POWDER, GARAM MASALA POWDER.

DIVIDE THE DOUGH INTO 12 EQUAL PARTS. MAKE THEM LIKE CUPS AND FILL THE CUPS WITH ONE TSP OF GOBI MIX MASALA. ROLL THEM WITH FLOUR AND FRY THE BAROTTAS WITH GHEE OR OIL AND SERVE HOT WITH MOONG DHAL SUBJI.

கோபி பரோட்டா:-

தேவையானவை:-
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
வெண்ணெய்/நெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர், எண்ணெய் போதுமான அளவு.

கோஸ் - 1 கப் ( பொடியாக அரிந்தது)
பெரிய வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன் பொடியாக அரிந்தது.
வரமிளகாய்த் தூள் - 1/3 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்

செய்முறை:-
கோதுமைமாவுடன் வெண்ணெய்/நெய் & உப்பைக் கலக்கவும் தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக பிசையவும். ஒரு ஈரத்துணியில் மூடி ஊறவைக்கவும்.

பொடியாக அரிந்த கோஸுடன் பொடியாக அரிந்த வெங்காயம், மிளகாய்ப் பொடி, கரம் மசாலாப் பொடியை சேர்க்கவும்.

மாவை 12 சம உருண்டகளாக உருட்டி கிண்ணம் போல் செய்து அதில் ஒரு டீஸ்பூன் கோஸ் கலவையை வைத்து உருட்டவும். மாவில் புரட்டி கனமான பரோட்டாக்களாகச் செய்து எண்ணெய் அல்லது நெய்யில் சுட்டெடுத்து மூங்தால் சப்ஜி (பாசிப்பயறு) யுடன் பரிமாறவும்.

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

CABBAGE INSTANT MASALA கோஸ் மசாலா

CABBAGE INSTANT MASALA

NEEDED :-

CABBAGE - 200 GMS
RED CHILLI POWDER - 1 TSP
MUSTARD - 1/4 TSP
SALT - 1/3 TSP
OIL - 1 TSP

METHOD:-

HEAT OIL IN A TAWA. WASH AND CUT THE CABBAGE INTO BIG PIECES. ADD MUSTARD IN HEAT OIL . WHEN IT SPLUTTERS ADD CABBAGE. SAUTE FOR A MINUTE ADD RED CHILLI POWDER AND SALT. COOK FOR 3 MINUTES AND SERVE HOT WITH CHAPPATHI OR CURD RICE. THE HALF COOKED CABBAGE IS DELICIOUS WITH CHAPPATHIS AND CURD RICE.

கோஸ் மசாலா:-

தேவையானவை:-

முட்டைக் கோஸ் - 200 கிராம்
சிகப்பு மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:-

பானில் எண்ணெய் ஊற்றி கடுகு போடவும். முட்டைக் கோஸைக் கழுவி பெரிய துண்டுகளாக வெட்டவும். கடுகு வெடித்ததும் கோஸைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பின் சிகப்பு மிளகாய்த் தூள், உப்பு போட்டு  3 நிமிடம் வதக்கி சூடாக சப்பாத்தி தயிர் சாதத்தோடு பரிமாறவும். பாதி வெந்த முட்டைக் கோஸ் மசாலா மிகவும் சுவையாக இருக்கும்.

MAIDA DOSAI மைதா தோசை

MAIDA DOSAI:-

NEEDED:-

MAIDA - 1 CUP
SALT - 1/2 TSP
JEERA - 1 TSP
ASAFOETIDA - 1 PINCH
WATER - NEEDED
OIL - 10 ML

METHOD:-

MIX ALL THE INGREDIENTS TO MAKE A BATTER. HEAT DOSA TAWA AND POUR THE BATTER FROM THE CORNERS TOWARDS THE MIDDLE OF THE TAWA . SPRAY OIL. TURN THE OTHER SIDE AND COOK WELL. SERVE HOT WITH TOMATO CHUTNEY OR MILAGAI CHUTNEY.

மைதா தோசை:-

தேவையானவை:-

மைதா - 1 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
ஜீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
தண்ணீர்  - தேவையான அளவு
எண்ணெய் - 10 மிலி

செய்முறை:-

எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் ஊற்றிக் கரைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவை ஓரங்களில் இருந்து நடுவில் வருமாறு ஊற்றவும். லேசாக எண்ணெய் ஊற்றவும். மறுபுறம் திருப்பிப் போட்டு நன்கு வெந்ததும் தக்காளிச் சட்னி அல்லது மிளகாய்ச் சட்னியுடன் பரிமாறவும்.

BINDI PORIYAL. வெண்டைக்காய் பொரியல்:-

BINDI PORIYAL.

NEEDED:-

BINDI - 250 GMS
RED CHILLI POWDER - 1 TSP
SALT - 1/3 TSP
OIL -  1 TSP ( 5 ML)
MUSTARD - 1/2 TSP
ORID DHAL - 1/2 TSP

METHOD :-

WASH AND CUT THE BINDIS. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD BINDIS AND SAUTE WELL FOR 3 MINUTES. ADD SALT AND CHILLI POWDER. COOK TILL THE BINDIS  ARE TENDER . SERVE HOT WITH WITH CHAPPATIS/CURD RICE.

வெண்டைக்காய் பொரியல்:-

தேவையானவை :-

வெண்டைக்காய் - 250 கி
வர மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - 1/3 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன் ( 5 மிலி)
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்து - 1/2 டீஸ்பூன்

செய்முறை:-

வெண்டைக்காய்களைக் கழுவித் துடைத்து நறுக்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் வெண்டைக்காய்களைப் போட்டு 3 நிமிடம் வதக்கவும். உப்பும் மிளகாய்த்தூளும் சேர்த்து வதக்கி வெண்டைக்காயில் சார்ந்து மென்மையானதும் இறக்கி சப்பாத்தி அல்லது தயிர்சாதத்துடன் பரிமாறவும்
Related Posts Plugin for WordPress, Blogger...