எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 28 ஜூன், 2012

PALAKKAAY (YOUNG JACK FRUIT) PIRATTAL. பலாக்காய் பிரட்டல்

PALAKKAAY PIRATTAL.
NEEDED:-
PALAKKAAY - 1/4 PIECE.
BIG ONION - 1 NO.
CHOPPED TOMATO -1 NO.
CHOPPED GARLIC -6 PODS.PEELED.
SALT - 1 TSP.

TO GRIND:- RED CHILLIES -6 NOS
ANISEEDS - 1 TSP
CUMIN SEEDS - 1/2 TSP
PEPPER - /4 TSP
GRATED COCONUT - 1 TBLSPN
SMALL ONION - 2 NOS
GARLIC - 1 POD.

FOR FRYING :-
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
ANISEEDS - 1/4 TSP
CURRY LEAVES - 1 ARK
KALPASIPPOO - 1 INCH
CINNAMON - 1 INCH
BAY LEAF - 1 INCH
OIL - 1 TBLSPN

METHOD :-
DICE PALAKKAAY AND REMOVE THE SKIN. PRESSURE COOK FOR 3 WHISTLES WITH ENOUGH WATER. GROUND THE MASALA WITH LITTLE WATER LIKE A PASTE. HEAT OIL IN A PAN ADD MUSTARD.WHEN IT SPLUTTERS ADD ORID DHAL.WHEN IT BECOMES BROWN ADD ANISEEDS. THEN ADD KALPASIPPOO, CINNAMON, BAY LEAF ALONG WITH CURRY LEAVES, ONION, TOMATO AND GARLICS. SAUTE WELL AND ADD THE GROUND MASALA. FRY TILL THE IOL SEPERATES AT THE END OF THE VESSEL ADD THE COOKED PALAKKAAY WITH SALT. ADD LITTLE WATER AND COOK THE PALAKKAAY COVERED WITH A LID IN A SLOW FIRE. STIRR OCCASIONALLY AND COOK TILL ALL THE MASALA IS WELL COOKED WITH PALAKKAAY. SERVE HOT WITH SAMBAR RICE AND CURD RICE. ITS GOOD WITH CHAPPATHIS TOO.

பலாக்காய் பிரட்டல்:-
தேவையானவை.:-
பலாக்காய் - 1/4 பங்கு ( பலா மூசு)
பெரிய வெங்காயம் - 1.
பொடியாக நறுக்கவும்.
தக்காளி - 1 .பொடியாக நறுக்கவும்.
வெள்ளைப் பூண்டு - 6 பல் உரிக்கவும்,
உப்பு - 1 டீஸ்பூன்

அரைக்க:-
வரமிளகாய் - 6
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/4 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2
பூண்டு - 1 பல்

தாளிக்க:-
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
கருவேப்பிலை -1 இணுக்கு
கல்பாசிப்பூ- 1 இன்ச்
பட்டை - 1 இன்ச்
இலை - 1 இன்ச்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:- பலாக்காயை பிளாச்சுகளாக வெட்டி தோல் சீவித் துண்டுகளாக்கவும். கைகளில் எண்ணெயைத் தடவிக் கொண்டு வெட்டினால் ஒட்டாமல் வரும். ப்ரஷர் குக்கரில் 3 விசில் வரும்வரை போதுமான தண்ணீர் ஊற்றி வேகவிடவும். அரைக்கக் கொடுத்துள்ள மசாலாவை நன்கு மைய அரைக்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும், சோம்பு போடவும். அதனுடன் பட்டை, இலை, கல்பாசிப்பூ, கருவேப்பிலை, வெங்காயம், தக்காளி, பூண்டு போட்டு நன்கு வதக்கவும். அதில் அரைத்த மசாலாவைப் போட்டு நன்கு வதக்கி பக்கங்களில் எண்ணெய் பிரிந்ததும் வெந்த பலாக்காயைப் போட்டு உப்பு சேர்க்கவும். சிறிது தண்ணீர் ஊற்றி மூடி போட்டு சிறு தீயில் பலாக்காயை அவ்வப்போது கிளறி வேகவைக்கவும். மசாலா நன்கு கலந்து பலாக்காய் நன்கு வெந்ததும் சூடாக சாம்பார் சாதம்/ தயிர் சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.

புதன், 13 ஜூன், 2012

CASHEW PAKODA - முந்திரி பக்கோடா

CASHEW PAKODA.:-
NEEDED:- CASHEW - 100 GMS.
{CHANNA DHAL - 1 CUP
CORN FLOUR - 1 TSP
RED CHILLI POWDER - 1 TSP
SALT - 1/2 TSP.
SOMPH POWDER - 1 PINCH ( OPTIONAL )
COOKING SODA - 1 PINCH ( OPTIONAL)
RED FOOD COLOUR - 1 PINCH( OPTIONAL) }
OR MTR BAJJI BONDA MIX - 1 CUP
WATER - 1/4 CUP
OIL - FOR FRYING.


METHOD:-
ADD CASHEW WITH CHANNA DHALL, CORN FLOUR, CHILLI POWDER, SALT, SOMPH POWDER, COOKING SODA AND RED FOOD COLOUR IN A BOWL.{OR ADD MTR BAJJI BONDA MIX } POUR WATER AND KNEAD WELL. HEAT THE OIL IN A PAN AND FRY THE PAKODAS AND SERVE HOT.

முந்திரி பக்கோடா :-
தேவையானவை:-
முந்திரிப் பருப்பு - 100 கிராம். {
கடலை மாவு - 1 கப்,
சோள மாவு - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1 சிட்டிகை ( விரும்பினால்)
சமையல் சோடா - 1 சிட்டிகை ( விரும்பினால்)
ரெட் ஃபுட் கலர் - 1 சிட்டிகை (விரும்பினால்.) }
அல்லது எம் டி ஆர் பஜ்ஜி போண்டா மிக்ஸ் - 1 கப்.
தண்ணீர் - 1/4 கப்
எண்ணெய் - பொறிக்கத்தேவையான அளவு


செய்முறை:- முந்திரியுடன் கடலை மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு, சோம்புத்தூள், சமையல் சோடா மற்றும் ரெட் ஃபுட் கலரை சேர்க்கவும். {அல்லது எம் டி ஆர் பஜ்ஜி போண்டா மிக்ஸை சேர்க்கவும்.} தண்ணீரை ஊற்றி நன்கு பிசறி எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுத்துச் சூடாகப் பரிமாறவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...