எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 29 ஜனவரி, 2024

19.பால் பொங்கல்

19.பால் பொங்கல்

 

தேவையானவை:- பச்சரிசி – 2 கப், பால் 2 லிட்டர், சர்க்கரை – கால் கப்.

செய்முறை:- பச்சரிசியைக் களைந்து பாலில் வேகப்போடவும். அடிப்பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும். சாதம் வெந்து பால் குறுகி வந்ததும் நன்கு குழைத்து மசித்துச் சர்க்கரை சேர்த்துக் கிளறி இறக்கி நிவேதிக்கவும்.

சனி, 27 ஜனவரி, 2024

3.பைனாப்பிள் பொங்கல்

3.பைனாப்பிள் பொங்கல்


 

தேவையானவை:- பைனாப்பிள் – கால் பாகம், பச்சரிசி – 1 கப், பாசிப்பருப்பு – அரை கப், பால் – 1 கப், சீனி – கால்கப் + 1 டேபிள் ஸ்பூன், முந்திரி – 10, ஏலப்பொடி – கால் டீஸ்பூன், பைனாப்பிள் எஸன்ஸ் – சில துளிகள், நெய் – 1 டேபிள் ஸ்பூன்., யெல்லோ ஃபுட் கலர் – சிறிது.

 

செய்முறை:- பைனாப்பிளை சுத்தம் செய்து ஒரு இஞ்ச் சதுரத் துண்டுகளாக்கி ஒரு டேபிள் ஸ்பூன் ஜீனி சேர்த்து சிறிது நீருடன் வேகவைத்து எடுக்கவும். பச்சரிசி, பாசிப்பருப்புடன் இரண்டரை கப் நீரூற்றி குக்கரில் வேகவைத்து எடுத்து சீனி & பால் ஊற்றிக் குழைத்து பைனாப்பிளைச் சேர்க்கவும். நெய்யில் முந்திரியைப் பொரித்துப் போட்டு ஃபுட் கலரையும் எஸன்ஸையும் சேர்த்து நன்கு கலக்கிப் பரிமாறவும்.

வியாழன், 25 ஜனவரி, 2024

2.கேரட் சேமியா கேசரி

2.கேரட் சேமியா கேசரி


 

தேவையானவை:- கேரட் – 200 கி, சேமியா – 1 கப், நாட்டுச் சர்க்கரை – 1 ¼ கப், தண்ணீர் – 3 கப், நெய் – 3 டேபிள் ஸ்பூன், முந்திரி – 1, ஏலப்பொடி – கால்டீஸ்பூன்.

 

செய்முறை:- கேரட்டைத் தோல் சீவித் துருவவும். நெய்யில் முந்திரியை வறுத்து எடுத்து வைக்கவும். அதில் பாதி நெய்யில் துருவிய கேரட்டைப் போட்டுப் பச்சை வாசம் போக நன்கு வதக்கவும். அதன் பின் மீதி நெய்யை விட்டு சேமியாவைப் போட்டுப் பொன்னிறமாக வறுத்து அதன் மேல் தண்ணீரைக் கொதிக்க வைத்து ஊற்றவும். இதோடு வதக்கிய கேரட்டையும் சேர்க்கவும். கேரட்டும் சேமியாவும் நன்கு வெந்ததும் நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்து கிளறவும். கேசரி சுருண்டு நெய் பிரியும்போது ஏலப்பொடியையும் முந்திரியையும் தூவிப் பரிமாறவும். 

செவ்வாய், 23 ஜனவரி, 2024

1.பீட்ரூட் தேங்காய் பர்ஃபி

1.பீட்ரூட் தேங்காய் பர்ஃபி

 

தேவையானவை:- பீட்ரூட் – 1, தேங்காய் – அரை மூடி, ஜீனி – 1 கப், நெய் -1 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன், முந்திரி – 10, ஏலப்பொடி – கால்டீஸ்பூன்.

 

செய்முறை:- பீட்ரூட்டைத் தோல்சீவி தூளாகத் துருவவும். தேங்காயையும் தூளாகத் துருவி வைக்கவும். ஒரு ட்ரேயில் ஒரு டீஸ்பூன் நெய்யைத் தடவி வைக்கவும். அடி கனமான பானில் பீட்ரூட் துருவலையும் தேங்காய்த்துருவலையும் போட்டு மிதமான தீயில் நன்கு வதக்கவும். பச்சை வாசம் போனவுடன் ஜீனியைச் சேர்த்துத் தொடர்ந்து கிளறவும். ஒரு சின்ன பானில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யில் முந்திரியை வதக்கி பீட்ரூட்டில் சேர்க்கவும். நன்கு கிளறி பக்கங்களில் ஒட்டாமல் இறுகி வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டித் துண்டுகள் போடவும். 

சனி, 20 ஜனவரி, 2024

ரஸ்க் சாக்லேட் & நட்ஸ்

ரஸ்க் சாக்லேட் & நட்ஸ்

தேவையானவை:-- பேகட் ரஸ்க் – 4, மில்க் சாக்லேட் – 2, வால்நட்,பாதாம், பிஸ்தா, முந்திரி – தலா 5 – சிறுதுண்டுகளாக உடைக்கவும்.

செய்முறை:- பேகட்டை வெறும் பேனில் வைத்து ரஸ்க்போல் க்ரிஸ்பியாக வரும்வரை வைக்கவும். வால்நட், பாதாம், முந்திரி, பிஸ்தாவை வெறும் வாணலியில் வாசம் வரும்வரை வறுத்து வைக்கவும். மில்க் சாக்லேட்டுக்களை ஒரு பானில் வைத்து வெந்நீரில் பாத்திரத்தில் அமிழ்த்தி உருகவிடவும். உருகியதும் பேகட் ரஸ்கில் சாக்லேட் சாஸைத் தடவி பொடித்த வால்நட், பாதாம், முந்திரி, பிஸ்தாவைத் தூவி விடவும்.

வியாழன், 18 ஜனவரி, 2024

20.பலகாய் மண்டி.

20.பலகாய் மண்டி.



தேவையானவை:- நாட்டுக் காய்கள் - முருங்கைக்காய் - 1, கத்திரிக்காய் - 2, வாழைக்காய் - பாதிஉருளைக்கிழங்கு - சின்னம் ஒன்று, (மாவத்தல் - 8 , அவரைவத்தல் - 6, தட்டைப்பயிறு - அரை கப்  இது மூன்றையும் வேகவைத்து வைக்கவும்.) பச்சைமிளகாய் - 8, சின்ன வெங்காயம் - 10, வெள்ளைப்பூண்டு - 10, அரிசி களைந்த திக் தண்ணீர் - 2 கப்உப்பு - அரை டீஸ்பூன்புளி - 4 சுளைஎண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்கடுகு - அரை டீஸ்பூன்உளுந்து - அரை டீஸ்பூன்பெருங்காயம் - 1 துண்டுகருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:- அரிசி மண்டியில் உப்புப் புளியை ஊறவைக்கவும்காய்கறிகளை இரண்டு இஞ்ச் துண்டுகளாக வெட்டவும்வெங்காயம் பூண்டை உரித்து இரண்டாக நறுக்கவும்பச்சைமிளகாயையும் ஒரு இஞ்ச் துண்டாக நறுக்கவும்எண்ணெயைக் காயவைத்துக் கடுகுஉளுந்துபெருங்காயம் தாளித்து கருவேப்பிலை பச்சைமிளகாயைச் சேர்க்கவும்லேசாக வதங்கியதும் வெங்காயம் பூண்டுகாய்களைச் சேர்த்து இன்னும் சில நிமிடம் வதக்கவும்.இதில் உப்புப் புளியை மண்டியோடு கரைத்து ஊற்றவும்கொதி வந்ததும் மூடி போட்டுப் பத்து நிமிடம் நன்கு வேக வைக்கவும்கடைசியாக வேகவைத்த மாவத்தல் கத்திரிவத்தல்தட்டைப்பயறு போட்டு இன்னும் சில நிமிடம் வேகவைத்து இறக்கவும்

செவ்வாய், 16 ஜனவரி, 2024

19.பச்சைப்புளியஞ்சாதம்

19.பச்சைப்புளியஞ்சாதம்



தேவையானவை:- உதிரியாக, விதையாக வடித்த சாதம் – 1 கப், புளி – 1 நெல்லி அளவு, உப்பு – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன். வறுத்துப் பொடிக்க:- வரமிளகாய் – 2, மல்லி – அரை டீஸ்பூன், கடுகு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் – 1 இஞ்ச் துண்டு. தாளிக்க:- நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து – தலா ஒருடீஸ்பூன், கடலைப்பருப்பு, வேர்க்கடலை – தலா 2 டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு

செய்முறை:- உதிரியாக வடித்த சாதத்தில் புளியையும் உப்பையும் கெட்டியாகக் கரைத்து ஊற்றவும். மஞ்சள்பொடி நல்லெண்ணெய் சிறிது சேர்த்து நன்கு கலந்து சிறிது சூடுபடுத்தவும். வரமிளகாய், மல்லியைத் தனியாக வறுத்துப் பொடிக்கவும், கடுகு, பெருங்காயம், வெந்தயத்தைத் தனியாக வறுத்துப் பொடிக்கவும். இப்பொடிகளைச் சாதத்தில் தூவி எண்ணெயில் கடுகு, உளுந்து கடலைப்பருப்பு, வேர்க்கடலை வறுத்துப் போட்டு நன்கு கலந்து ஊறியதும் உபயோகிக்கவும்.

ஞாயிறு, 14 ஜனவரி, 2024

18.மோரு கறி

18.மோரு கறி


தேவையானவை:- தயிர் – 1 கப், சின்ன வெங்காயம் – அரிந்தது ஒருகைப்பிடி, இஞ்சி, பூண்டு தலா அரை இஞ்ச் – பொடியாக நறுக்கவும். கருவேப்பிலை – இணுக்கு, உப்பு – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – அரை சிட்டிகை. தாளிக்க :- எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு –அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன் வரமிளகாய் – 2.

செய்முறை:- தயிரைக் கடைந்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்புப் போட்டு வைக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, சீரகம், வெந்தயம் தாளிக்கவும். இதில் வரமிளகாய், கருவேப்பிலை, பொடியாக அரிந்த வெங்காயம், இஞ்சி, பூண்டு போட்டு வதக்கித் தயிரைச் சேர்க்கவும். லேசாக நுரைத்து வந்ததும் இறக்கவும். சாதத்தில் ஊற்றிச் சாப்பிடலாம்

சனி, 13 ஜனவரி, 2024

17.தால் தட்கா

17.தால் தட்கா



தேவையானவை:- துவரம்பருப்பு - 1 கப்பெரிய வெங்காயம் - 1 , இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்நெய் - 1 டேபிள் ஸ்பூன்சீரகம் - அரை டீஸ்பூன்வரமிளகாய் - 1, பச்சைமிளகாய் - 2, உப்பு - அரை டீஸ்பூன்மஞ்சள்தூள் -1 சிட்டிகைமிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்கரம் மசாலா - கால் டீஸ்பூன்காய்ந்த வெந்தயக்கீரை - சிறிதுகொத்துமல்லி – சிறிதுஎலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்.

செய்முறை:-துவரம்பருப்பைக் கழுவிக் குக்கரிப் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்வெங்காயத்தைப்  பொடியாக அரியவும்ஒரு பானில் நெய்யை ஊற்றி சீரகம்வரமிளகாய்வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்இதில் இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய்பச்சைமிளகாய்,  இஞ்சி ,பூண்டு பேஸ்டைப் போட்டு வாசம் வரும்வரை வதக்கவும்உப்பையும் போட்டுமசிந்ததும் மிளகாய்த்தூள்மஞ்சள்தூள்கரம் மசாலா போட்டு எண்ணெய் பிரிந்ததும் வெந்த துவரம்பருப்பை நன்கு மசித்து ஊற்றவும்கொதித்ததும் காய்ந்த வெந்தயக் கீரைகொத்துமல்லித்தழை தூவிஎலுமிச்சைச்சாறுசேர்த்து  இறக்கவும்.சப்பாத்திசாதம்மேத்தி பரோட்டா , நான் , ருமாலி ரொட்டி ஆகியவற்றோடு இது நன்றாக இருக்கும்.

செவ்வாய், 9 ஜனவரி, 2024

16.வேப்பம்பூ எலுமிச்சை ரசம்

16.வேப்பம்பூ எலுமிச்சை ரசம்



தேவையானவை :- வேப்பம்பூ – 1 கைப்பிடிஎலுமிச்சை – 1., நெய் – 1 டீஸ்பூன்மிளகு சீரகத்தூள் – 1 டீஸ்பூன்மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்கருவேப்பிலை – 1 டீஸ்பூன்பருப்பு கடைந்த தண்ணீர் – 2 கப்கடுகு – 1 டீஸ்பூன்வெந்தயம் – ½ டீஸ்பூன்சீரகம் – ½ டீஸ்பூன்., வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்குஉப்பு – ½ டீஸ்பூன்கொத்துமல்லித் தழை அரிந்தது – 1 டீஸ்பூன்

செய்முறை:- நெய்யைக் காயவைத்து கடுகு போடவும்வெடித்ததும் வெந்தயம் சீரகம் போட்டு பொரிந்ததும் அதிலேயே இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய்கருவேப்பிலை போடவும்அதில் வேப்பம்பூவைப் போட்டுப் புரட்டி வறுத்து பருப்பு கடைந்த தண்ணீரை ஊற்றவும்அதில் மிளகு சீரகத்தூளையும் மஞ்சள் பொடியையும் உப்பையும் சேர்க்கவும்நுரைத்து வரும்போது இறக்கி ஒரு எலுமிச்சையை விதையில்லாமல் சாறு பிழிந்து சேர்த்து கொத்துமல்லித் தழை போட்டு மூடி வைக்கவும்சிறிது நேரம் கழித்து உபயோகிக்கவும்

திங்கள், 8 ஜனவரி, 2024

15.இஞ்சிப்புளித் தொக்கு

15.இஞ்சிப்புளித் தொக்கு


தேவையானவை:- இஞ்சி – 200 கிபச்சை மிளகாய் – 50 கிபுளி – 1 பெரிய எலுமிச்சை அளவுஉப்பு – 1 டீஸ்பூன்மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,கடுகு - 1 டீஸ்பூன்நல்லெண்ணெய் - 50 கிராம்வெல்லம் – 50 கிகருவேப்பிலை – 1 இணுக்கு.

செய்முறை:- இஞ்சியைத் தோல்சீவிக் கழுவிப் பொடியாகத் துருவவும்பச்சைமிளகாயையும் பொடியாக நறுக்கவும்உப்புப்புளியை அரை கப் தண்ணீரில் கரைக்கவும்பானில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு போட்டுப் பொறிந்ததும் கருவேப்பிலைஇஞ்சி , பச்சைமிளகாய்  சேர்த்து வதக்கி  மஞ்சள்தூள்  சேர்த்துக் கரைத்த உப்புப்புளியை ஊற்றவும்கொதித்து சுண்டும்போது வெல்லம் சேர்த்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.

வியாழன், 4 ஜனவரி, 2024

14.வர மிளகாய்த் துவையல்

14.வர மிளகாய்த் துவையல்


தேவையானவை :- சிகப்பு மிளகாய் – 12,  பெரிய வெங்காயம் - 1, சின்ன வெங்காயம் - 10, உப்பு - 1/2 டீஸ்பூன்புளி - 1 சிறு துண்டுபெருங்காயம் 1/8 இஞ்ச் துண்டுபூண்டு - 2 பல்எண்ணெய் - 2 டீஸ்பூன்கடுகு - 1/2 டீஸ்பூன்உளுந்து - 1/2 டீஸ்பூன்கறிவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை :- வெங்காயம் பூண்டு தோலுரித்துக் கழுவித்  துண்டுகளாக்கவும்சிகப்பு மிளகாய் ., வெங்காயங்கள்., பூண்டு., பெருங்காயம்., உப்பு., புளி., இவற்றை மிக்ஸியில் மைய அரைக்கவும்கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும்உளுந்து போட்டு சிவந்ததும்., கறிவேப்பிலை போட்டுத் தாளித்து  மிளகாய்த் துவையலைச் சேர்க்கவும் உடன் அடுப்பை ஆஃப் செய்யவும்இந்த துவையலைக் குழிப்பணியாரம் ., கோதுமை தோசை., முட்டைத்தோசைவெள்ளைப்பணியாரங்களுடன் பரிமாறவும்..

செவ்வாய், 2 ஜனவரி, 2024

13.மாம்பழ சாம்பார்

13.மாம்பழ சாம்பார்



தேவையானவை:- அரைப்பழமாகப் பழுத்த மாம்பழம் -1 துவரம் பருப்பு – அரை கப்வறுத்து நுணுக்கிய சாம்பார் பொடி – 1 டேபிள் ஸ்பூன்புளி – நெல்லி அளவுஉப்பு – ஒரு டீஸ்பூன்சின்ன வெங்காயம் – 8, தக்காளி – 1, கருவேப்பிலை – 1 இணுக்குதாளிக்க :- எண்ணெய் – 2 டீஸ்பூன்கடுகுஉளுந்துசீரகம் – தலா அரை டீஸ்பூன்பெருங்காயப் பொடி -1 சிட்டிகை.

செய்முறை:- துவரம்பருப்பை நன்கு வேகவிடவும்வெந்ததும் இதில் தோலுரித்து நறுக்கிய சின்ன வெங்காயம் , தோலோடு நான்காக வெட்டிய மாம்பழத்தைப் போட்டு வேகவிடவும்கொட்டையையும்  போடலாம்இதில் உப்பு புளியைக் கரைத்து ஊற்றி வறுத்து நுணுக்கிய சாம்பார் பொடி போட்டு வெந்ததும் இறக்கி எண்ணெயில் கடுகுஉளுந்துசீரகம்பெருங்காயப்பொடி தாளித்துச் சேர்க்கவும்.

திங்கள், 1 ஜனவரி, 2024

12.ஆரஞ்சு சப்பாத்தி

12.ஆரஞ்சு சப்பாத்தி


தேவையானவை:- ஆட்டா – ஒரு கப்ஆரஞ்சு சாறு – அரை கப்உப்புசீனி – தலா கால் டீஸ்பூன்சீரகப் பொடி – கால் டீஸ்பூன்நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:- ஆட்டாவில் உப்புசீனிசீரகப் பொடி சேர்த்து ஆரஞ்சு சாறை சிறிது சிறிதாக விட்டு கெட்டியாகப் பிசையவும்.  பத்து நிமிடம் ஊறியதும் சப்பாத்திகளாகத் திரட்டி சுற்றிலும் நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...