எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 31 அக்டோபர், 2013

MANAKOLAM .. மனகோலம் .

MANAKOLAM .. மனகோலம் .

NEEDED :-
GREENGRAM DAL - 2 CUPS
JAGGERY - 2 CUPS
SALT - 1/2 TSP
DALDA/OIL - FOR FRYING.

COCONUT - 5 INCH PIECE.
CHANNA GRAM DAL - 2 TBLSPN
GHEE - 2 TSP
SUGAR POWDER - 1 TBLSPN.

METHOD:-
FRY GREEN GRAM DAL. GROUND AND SIEVE IT. ADD SALT.POUR ENOUGH WATER AND MIX WELL  TO MAKE  A SMOOTH DOUGH.

HEAT DALDA OR OIL .PUT THE DOUGH IN MANAKOLAM KATTAI , SQUEEZE AND FRY IT .

SEPERATE THE MANAKOLAM AS 2 INCH PIECES. FRY THE CHANNA GRAM DAL IN GHEE . JULIENNED THE COCONUT AND FRY THAT ALSO IN GHEE.

MIX THE MANAKOLAM, FRIED CHANNA DAL, COCONUT IN A  SILVER OR BRASS BASIN .

ADD LITTLE WATER TO THE JAGGERY AND MAKE THICK PAGU  BY HEATING.

POUR THE VELLAP PAGU TO THE MANAKOLAM MIXTURE AND STIRR WELL.  SPRAY SUGAR POWDER. SERVE AFTER COOL.


THIS IS A CHETTINADU SPECIAL PALAKARAM.

MANAKOLAM .. மனகோலம் .

தேவையானவை:-
பாசிப்பருப்பு மாவு - 2 கப்
வெல்லம் - 2 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
டால்டா/எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

தேங்காய் - 5 இன்ச் துண்டு
பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
சீனி பொடித்தது - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:-
பாசிப்பருப்பை வெறும் வாணலியில் லேசாக  வறுத்து அரைத்துச் சலிக்கவும். உப்பும் தேவையான தண்ணீரும் சேர்த்து மாவு பிசையவும்.

எண்ணெய் அல்லது டால்டாவைக் காயவைத்து மனகோலக் கட்டையில் போட்டு பிழிந்து  2 இன்ச் துண்டுகளாக உதிர்த்து வைக்கவும்.

தேங்காயைப் பல்லுப் பல்லாக நறுக்கி நெய்யில் வதக்கவும். பொட்டுக்கடலையையும் நெய்யில் வறுத்துக் கொட்டவும்.

மனகோலம், தேங்காய், பொட்டுக்கடலை மூன்றையும் ஒரு சில்வர்/பித்தளை பேசினில்  போடவும்.

வெல்லத்தில் சிறிது நீர் சேர்த்து முற்றிய பாகு தயாரித்து இந்தக் கலவையில் ஊற்றிக் கலந்து விடவும். பொடித்த சீனியைத் தூவி ஆறியபின் பரிமாறவும்.

இது செட்டிநாட்டின் ஸ்பெஷல் பலகாரமாகும்.

ATHIRASAM. அதிரசம்.

ATHIRASAM. அதிரசம்.

NEEDED:-
RAW RICE - 4 CUPS
JAGGERY - 2 CUPS
CARDAMOM - 4 POWDERED.
GHEE - 1 TBLSPN.
OIL - FOR FRYING.

METHOD:-
WASH AND SOKA RAW RICE FOR 2 HOURS. DRAIN AND DRY IN A CLOTH. GROUND WHILE WET.SIEVE THE FLOUR.

POUR HALF CUP WATER IN JAGGERY AND MAKE A THICK SYRUP BY HEATING. KEEP TILL IT GETS PAGU PATHAM.

FILTER THE PAGU IN RICE FLOUR WITH CARDAMOM POWDER. MIX WELL WITH LITTLE GHEE AND KEEP ASIDE FOR 2 DAYS.

HEAT OIL IN A PAN. MAKE ATHIRASAMS IN A OILY PLASTIC SHEETS AND FRY THEM IN OIL. SERVE HOT.



ATHIRASAM. அதிரசம்.

தேவையானவை :-

பச்சரிசி - 4 கப்
வெல்லம் - 2 கப்
ஏலக்காய் - 4 பொடித்தது
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-
பச்சரிசியைக் கழுவி  2 மணி நேரம் ஊறவைக்கவும். நீரை வடித்து நிழலில் துணியில் உலரப் போடவும். ஈரமாக இருக்கும்போதே மாவாக அரைத்துச் சலிக்கவும்.

அரை கப் தண்ணீர் ஊற்றி வெல்லத்தைப் பாகு காய்ச்சவும். பாகு ஒட்டாமல் இருக்கும்போது இறக்கவும்.

பாகை அரிசி மாவில் வடிகட்டி ஏலத்தூள் சேர்த்துக் கிளறவும். சிறிது நெய் சேர்க்கவும். இரண்டு நாட்கள் அப்படியே வைக்கவும்.

ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து அதிரசங்களை ஒரு எண்ணெய் தடவிய பாலிதீன் பேப்பரில் தட்டி வேக வைக்கவும். பொன்னிறமானதும் எடுத்து சூடாகப் பரிமாறவும்.

 

MURUKKUVADAI. முறுக்கு வடை .

MURUKKUVADAI. முறுக்கு வடை .

NEEDED:-
RAW RICE - 4 CUPS
ORID DAL - 1 1/2 CUPS
BUTTER - 1 TBLSPN 
SALT - 2 TSP
OIL - FOR FRYING.

METHOD:-
WASH AND SOAK THE RICE. DRAIN AND DRY IT IN A CLOTH.

 FRY THE ORID DHAL ( SLIGHTLY BROWN ) IN A DRY PAN. GROUND THEM SEPERATELY.  SIEVE WELL. MIX THEM & ADD BUTTER AND SALT. ADD ENOUGH WATER AND MIX THEM TO MAKE A SOFT DOUGH.

TAKE A HANDFUL OF DOUGH  (ON A OILY OR BUTTERED PLASTIC PAPER) MAKE MURUKKUS BY HAND BY TWISTING WITH FINGERS.

HEAT OIL IN A PAN FRY THEM TILL GOLDEN BROWN. SERVE HOT.


MURUKKUVADAI. முறுக்கு வடை .

தேவையானவை :-
பச்சரிசி - 4 கப்
வெள்ளை உளுந்தம்பருப்பு - 1 1/2 கப்
உப்பு - 1 2 டீஸ்பூன்
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.
செய்முறை:-
பச்சரிசியைக் கழுவி ஊற வைக்கவும். நீரை வடித்து ஒரு துணியில் உலரப் போடவும்.பச்சரிசியை சிறிது ஈரத்தோடு பொடிக்கவும்.

வெள்ளை உளுந்தம்பருப்பை சிவப்பாக வெதுப்பி பொடிக்கவும்.  இரண்டையும் சலிக்கவும். இரண்டையும் சேர்த்து வெண்ணெயும் உப்பும் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்துப் பிசையவும். மாவு மென்மையாக இருக்க வேண்டும்.

ஒரு கையளவு மாவை எடுத்து எண்ணெய் அல்லது நெய் தடவிய ஷீட்டில் விரல்களால் சுழற்றி முறுக்கு செய்யவும்.

எண்ணெயைக் காயவைத்து ஒவ்வொன்றாகப் பொரித்தெடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.

புதன், 30 அக்டோபர், 2013

MAAVURUNDAI ( GREENGRAM DAL LADDU) - மாவுருண்டை

MAAVURUNDAI ( GREENGRAM LADDU) - மாவுருண்டை.

NEEDED:-
GREEN GRAM DAL - 2 CUPS
SUGAR - 2 CUPS
GHEE - 1/4 CUP.

METHOD:-

FRY GREEN GRAM DAL IN A DRIED PAN TILL THE AROMA COMES. GROUND IT . SIEVE THE DAL POWDER. POWDER THE SUGAR AND SIEVE THAT ALSO. MIX WELL.

HEAT THE GHEE IN A SEPERATE PAN. POUR IT IN THA DAL + SUGAR POWDER MIX. MAKE LADDUS AND SERVE HOT.

MAAVURUNDAI ( GREENGRAM LADDU) - மாவுருண்டை

தேவையானவை :-
பாசிப்பருப்பு - 2 கப்
ஜீனி - 2 கப்
நெய் - 1/4 கப்.

 செய்முறை:-
பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுக்கவும். மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். ஜீனியையும் பொடித்துச் சலிக்கவும். இரண்டையும் நன்கு கலக்கவும்.

நெய்யை ஒரு பானில் காயவைத்து இந்த மாவு, ஜீனிக் கலவையில் சூடாக ஊற்றி உருண்டைகள் பிடிக்கவும். சூடாகப் பரிமாறவும்.

THENKUZHAL. தேன்குழல்.

THENKUZHAL.  தேன்குழல்.

NEEDED:-
RAW RICE - 4 CUPS.
ORID DHAL - 1 CUP
SALT - 1 1/2 TSP
WATER -  2 CUPS
OIL - FOR FRYING. (  OR  DALDA - OPTIONAL )

METHOD:-
WASH AND DRY THE RAW RICE IN A CLOTH. GROUND IT IN A MIXIE AND SIEVE IT. FRY THE ORID DHAL IN A PAN WITH OUT OIL. POWDER IT. MIX RICE FLOUR AND ORID DHAL FLOUR. ADD SALT . MIX WELL WITH ENOUGH WATER.  POUR LITTLE WARM OIL AND MIX WELL AS A THICK DOUGH.

HEAT OIL IN A PAN.( IF DESIRED ADD DALDA ). PREPARE THENKUZHAL WITH THENKUZHAL KATTAI.  SERVE HOT.

THENKUZHAL.  தேன்குழல்.

தேவையானவை :-
பச்சரிசி - 4 கப்
வெள்ளை உளுந்தம் பருப்பு - 1 கப்
உப்பு - 1 1/2  டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு ( அல்லது டால்டா - விரும்பினால்

செய்முறை:-
பச்சரிசியைக் கழுவி நிழற்காய்ச்சலாகப் போட்டு மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். உளுந்தம் பருப்பை வெறும் வாணலியில் வெதுப்பி மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். இரண்டையும் கலந்து உப்பு சேர்த்துத் தேவையான நீர் ஊற்றிப் பிசையவும். கொஞ்சம் காய்ந்த எண்ணெயையும் ஊற்றிப் பிசைந்து நீள் உருண்டைகளாக உருட்டி ஒரு ஈரத் துணி கொண்டு மூடவும்.

எண்ணெயைக் காயவைத்து( டால்டா வேண்டுமானால் இப்போது சேர்க்கவும் .)  மாவு உருண்டைகளைத் தேன்குழல் அச்சில் போட்டு காயும் எண்ணெயில் பிழிந்து வெண்ணிறமாக எடுக்கவும். பக்குவம் சரியாக இருந்தால் வெண்ணிறமாகவே வரும்.


KEEMA RICE .கொத்துக்கறி சாதம்.

KEEMA RICE .கொத்துக்கறி சாதம்.

NEEDED:-
COOKED BASMATI RICE - 2 CUPS.
KEEMA ( MUTTON) - 200 GMS.
BIG ONION - 2 NOS. ( FINELY CHOPPED)
TOMATO - 1 NO ( GROUND)
GINGER GARLIC PASTE  - 2 TSP
OIL - 1 TBLSPN
RED CHILLI POWDER - 1/2 TSP
CORIANDER POWDER - 1 TSP
( CLOVE - 1, CINNAMON - 1 INCH PIECE . BAY LEAF - 2 INCH PIECE, CARDAMOM - 1 , SOMPH - 1 TSP, PEPPER - 1/2 TSP) - POWDERED.
SALT - 1 TSP

METHOD:-
WASH AND PRESSURE COOK THE KEEMA. HEAT OIL IN A PAN ADD CHOPPED ONIONS. SAUTE TILL IT BECOMES GLASSY. ADD GINGER GARLIC PASTE. SAUTE TILL OIL SEPERATES. ADD THE RED CHILLI POWDER, CORIANDER POWDER, POWDERED MASALA,& SALT. SAUTE FOR A MINUTE AND ADD THE GROUND TOMATO. ADD THE PARA COOKED KEEMA. SAUTE WELL AND ADD LITTLE WATER. COOK TILL ALL THE MASALAS MIX TOGETHER.

PLACE BASMATI RICE IN A SERVING PLATE . MIX THE KEEMA MASALA WITH RICE AND SERVE HOT WITH BOILED EGG, CURD ONION AND KURMA.

KEEMA RICE .கொத்துக்கறி சாதம்.

தேவையானவை.:-
பாசுமதி சாதம் - 2 கப்
கைமா ( மட்டன் கொத்துக்கறி ) - 200 கி
பெரிய வெங்காயம் - 2 ( பொடியாக அரியவும்)
தக்காளி - 1 ( அரைக்கவும்)
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
( கிராம்பு - 1, ஏலக்காய் - 1, பட்டை - 1 இன்ச் துண்டு, இலை - 2 இன்ச் துண்டு, சோம்பு - 1 டீஸ்பூன், மிளகு - 1/2 டீஸ்பூன் ) - பொடியாக்கவும்.
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:-
கொத்துக்கறியைக் ( கைமா) கழுவி பிரஷர் குக்கரில் வேகவிடவும். ஒரு பானில் வெங்காயத்தைப் போட்டுத் தண்ணீராக ஆகும்வரை வதக்கவும். (கண்ணாடி போல மின்னும்). அதில் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். அதில் வரமிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, பொடித்த மசாலா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அரைத்த தக்காளியை ஊற்றவும். . கைமாவைச் சேர்த்து நன்கு வதக்கி சிறிது நீர் சேர்த்து வேக விடவும். மசாலா ஒன்று சேரும்வரை வதக்கவும்.

ஒரு தட்டில் பாசுமதி சாதத்தைப் பரப்பி அதில் கைமா மசாலாவைச் சேர்த்து லேசாகக் கிளறவும். அவித்த முட்டை, தயிர் வெங்காயம், குருமாவோடு பரிமாறவும்.

செவ்வாய், 29 அக்டோபர், 2013

CURRY LEAVES, GINGER, TURKYBERRY THUVAIYAL. கருவேப்பிலை, இஞ்சி, சுண்டைக்காய்த் துவையல்

CURRY LEAVES, GINGER, TURKYBERRY THUVAIYAL.

NEEDED:-
CURRY LEAVES - 1 HANDFUL ( TENDER)
GINGER - 2 INCH ( PEELED & CHOPPED)
TURKYBERRY  BIG - 20 NOS
GRATED COCONUT - 1 TBLSPN
BIG ONION - 1 NO ( PEELED AND CHOPPED)
GREEN CHILLIES - 4 NOS.
TAMARIND - 3 PODS
SALT - 1/3 TSP
OIL - 1 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 3 TSP
ASAFOETIDA - 1/8 INCH PIECE.

METHOD:-
CUT THE TURKEY BERRY AND WASH IT IN WATER. HEAT OIL IN A PAD. ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ASAFOETIDA AND ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD GREEN CHILLIES AND  TURKY BERRY. SAUTE FOR 2 MINUTES . THEN ADD CHOPPED GINGER, ONION, AND CURRY LEAVES. SAUTE FOR A MINUTE. THEN ADD  GRATED COCONUT, SALT AND TAMARIND. SAUTE WELL FOR 2 MINUTES. REMOVE FROM FIRE.

AFTER COOLING GROUND COARSLY WITH LITTLE WATER AND SERVE IT DOSAS AND IDDLYS AND WITH PLAIN RICE AND GHEE. OR WITH CURD RICE.

 கருவேப்பிலை, இஞ்சி, சுண்டைக்காய்த் துவையல்:-

தேவையானவை :_
கருவேப்பிலை - 2 கைப்பிடி ( இளசு)
இஞ்சி - 2 இன்ச் ( தோல் சீவிக் கழுவிப் பொடியாக அரியவும் )
சுண்டைக்காய் - 20 முற்றியது.
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 தோலுரித்துப் பொடியாக அரியவும்.
பச்சை மிளகாய் - 4
புளி - 3 சுளை
உப்பு - 1/3 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 3 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/8 இன்ச் துண்டு.

செய்முறை:-
சுண்டைக்காய்களை இரண்டாக வெட்டித் தண்ணீரில் போடவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போடவும். கடுகு வெடித்ததும் உளுந்து பெருங்காயம் போட்டு சிவந்ததும் பச்சைமிளகாய், சுண்டைக்காயைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும். பின் இஞ்சி, வெங்காயம், கருவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வதக்கி தேங்காய், உப்பு, புளி சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கவும்.

ஆறியவுடன் லேசாக தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைத்து இட்லி, தோசை, நெய் சாதம் அல்லது தயிர்சாதத்தோடு பரிமாறவும்.

வியாழன், 24 அக்டோபர், 2013

PANEER CAPSICUM( CHEESE,GREEN PEPPER/BELL PEPPER ) MASALA. பனீர் குடைமிளகாய் மசாலா.

PANEER CAPSICUM( GREEN PEPPER ) MASALA. பனீர் குடைமிளகாய் மசாலா.

PANEER CAPSICUM( GREEN PEPPER ) MASALA. 

NEEDED:-
PANEER - 200 GMS DICED
CAPSICUM - 1 NO. CUT INTO THIN STRANDS
BIG ONION - 2 NOS. CUT INTO THIN STRANDS.
GINGER GARLIC PASTE - 1 TSP
TOMATO -2 NOS ( GROUND)
RED CHILLI POWDER - 1 TSP
CORRIANDER POWDER - 1 TSP
GARAM MASALA POWDER - 1 /4 TSP
SALT - 1/ 2 TSP
SUGAR - 1 PINCH. 
OIL - 2 TBLSPN.

METHOD:-

WASH AND FRY THE PANEER CUBES IN OIL. KEEP ASIDE. SAUTE THE ONION AND CAPSICUM  IN THE SAME OIL. ADD GINGER GARLIC PASTE. SAUTE TILL THE OIL SEPERATES. ADD GROUND TOMATOS. ADD THE CHILLI POWDER, CORRIANDER POWDER, SALT, GARAM MASALA AND SUGAR, SAUTE FOR A MINUTE ADD ENOUGH WATER. BRING TO BOIL ADD THE PANEER CUBES & COOK FOR 5 MINUTES. SERVE HOT WITH LEMON RINDS, SLICED ONIONS, CUCUMBER FOR CHAPPATIS, RUMALI ROTIS AND NAAN AND KULCHA.

பனீர் குடைமிளகாய் மசாலா :-

தேவையானவை.:-
பனீர் - 200 கி சின்னச் சதுரமாக வெட்டவும்.
குடைமிளகாய் - 1 நீளமாக வெட்டவும்.
பெரிய வெங்காயம் - 2 நீளமாக வெட்டவும்.
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தக்காளி - 2. ( அரைக்கவும்).
சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா பவுடர் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
சீனி - 1 சிட்டிகை
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-
பனீரைக் கழுவி எண்ணெயில் பொறித்தெடுக்கவும். அதே எண்ணெயில் வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். அதில் இஞ்சி பூண்டைப் போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கி அரைத்த தக்காளியைச் சேர்க்கவும். அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, சீனி, கரம் மசாலா பொடியைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கித் தேவையான தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். அதில் பனீரைச் சேர்த்து 5 நிமிடம் சமைத்து எலுமிச்சை, வெங்காயம், வெள்ளரித்  துண்டுகளுடன் சப்பாத்தி, ருமாலி ரோட்டி, நான், குல்சாவோடு பரிமாறவும்.


KAALI DHAL MAKKHANI. கறுப்பு உளுந்து சப்ஜி.

KAALI DHAL MAKKHANI.  கறுப்பு உளுந்து வெண்ணெய் சப்ஜி.

KAALI DHAL MAKKHANI.
NEEDED:-
KAALI DHAL/URAD DHAL SPLITED - 1 CUP
RAJMA -  1/4 CUP ( OPTIONAL)
BIG ONION - 2 NOS. CHOPPED
GINGER GARLIC PASTE - 2 TSP
TOMATOS - 2 CHOPPED
ASAFOTIDA - 1 PINCH
RED CHILLI POWDER - 1 TSP
CORIANDER POWDER - 2TSP
FRESH CREAM - 2 TBLSPN
CUMIN SEEDS - 1 TSP
SALT - 1/2 TSP
OIL - 1 TBLSPN
GHEE - 2 TBLSPN


METHOD :-
SOAK URAD DHAL OVERNIGHT.ADD 3 CUPS WATER AND PRESSURE COOK FOR THREE WHISTLES.( IF DESIRED SOAK AND  PRESSURE COOK RAJMA TOO.)

HEAT OIL IN A PAN ADD THE ASAFOETIDA AND CUMIN SEEDS. WHEN IT SPLUTTERS ADD ONION, SAUTE WELL TILL IT BECOMES GOLDEN BROWN. ADD GINGER GARLIC PASTE. SAUTE TILL THE OIL SEPERATES. ADD THE TOMATOS WITH SALT, REDCHILLI POWDER, CORIANDER POWDER. SAUTE FOR A MINUTE AND THEN ADD THE BOILED URAD DHAL. ( AND RAJMA TOO ) .COOK FOR 5 MINUTES. BEAT THE CREAM WELL AND ADD THIS TO THE BOILING MIXTURE. HEAT THE GHEE IN A SEPERATE PAN AND POUR OVER THIS AND MIX WELL. SERVE HOT WITH ONION, CUCUMBER  SLICES FOR CHAPPATHIS/ RUMALI ROTIS/ NAANS.


கருப்பு உளுந்து சப்ஜி:-

தேவையானவை:-
கருப்பு உளுந்து இரண்டாக உடைத்தது - 1 கப்
ராஜ்மா - 1/4 கப் ( விரும்பினால்)
பெரிய  வெங்காயம் - 2 பொடியாக அரியவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தக்காளி - 2 பொடியாக அரியவும்.
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை
சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-
கறுப்பு உளுந்தம் பருப்பைத் தோலுடன் ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும். 3 கப் தண்ணீர் ஊற்றி ப்ரஷர் குக்கரில் 3 விசில் வரும்வரை வேக விடவும். ( விரும்பினால் ராஜ்மாவையும் முதல் நாள் ஊறவைத்து பிரஷர் குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும். )

ஒரு பானில் எண்ணெயைச் சூடாக்கி அதில் பெருங்காயம், சீரகத்தைத் தாளிக்கவும். சீரகம் வெடித்ததும் வெங்காயம் போட்டு ப்ரவுனாகும் வரை வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு எண்ணெய் பிரியும்வரை வதக்கவும்.  பின் தக்காளி, உப்பு, சிவப்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள், போட்டு வதக்கி வெந்த உளுந்தைச் சேர்க்கவும் ( ராஜ்மாவையும் சேர்க்கவும் ). 5 நிமிடம் வேகவைத்து க்ரீமை மத்தால் நன்கு கடைந்து ஊற்றவும். நெய்யைக் காயவைத்து ஊற்றி நன்கு கலக்கி ஸ்லைஸ் செய்த வெங்காயம் , வெள்ளரிக்காய் இவைகளோடு சப்பாத்தி, ருமாலி ரொட்டி, நான் ஆகியவற்றுக்கு சூடாகப் பரிமாறவும்.
 

BREAD PAKODA. ப்ரெட் பகோடா.

BREAD PAKODA. ப்ரெட் பகோடா.

BREAD PAKODA. :-
NEEDED :-

BREAD - 4 SLICES
BESAN/ GRAM FLOUR - 1 CUP
RICE FLOUR - 1 TSP
CHILLI POWDER - 1/3 TSP
SALT - 1/3 TSP
WATER - NEEDED
OIL - FOR FRYING

METHOD :-

CUT THE BREAD INTO FOUR PIECES. MIX BESAN, RICE FLOUR, CHILLI POWDER, SALT. ADD ENOUGH WATER AND MIX WELL. THIS SHOULD BE LIKE DOSA BATTER. DIP THE BREAD SLICES AND DEEP FRY IN OIL . SERVE HOT WITH MINT CHUTNEY AND MAGGI HOT AND SWEET TOMATO CHILLI SAUCE.. BECAUSE ITS DIFFERENT.. :p :p :p


ப்ரெட் பகோடா:-
 தேவையானவை:-
ப்ரெட் - 4 ஸ்லைசஸ்
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -  1/3 டீஸ்பூன்
உப்பு - 1/3 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - பொறிக்கத்தேவையான அளவு.

செய்முறை:-
ப்ரெட்டின் ஓரங்களை வெட்டி நான்கு துண்டுகளாக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூளை நன்கு கலக்கி தேவையான தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைக்கவும். ப்ரெட் ஸ்லைசுகளை இதில் நனைத்து நன்கு காயும் எண்ணெயில் பொறித்தெடுக்கவும். புதினா சட்னி, மாகி ஹாட் அண்ட் ஸ்வீட் டொமாடோ சில்லி சாஸுடன் பரிமாறவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...