12.பெங்களூரு தொன்னை பிரியாணி
தேவையானவை :- சிக்கன் - அரை கிலோ, சீரக சம்பா அரிசி - 2 கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி 2, தயிர் - 1 கப், மல்லித்தூள் - 1 டீஸ்பூன், பிரியாணி மசாலா தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், கசூரி மேத்தி - கால் டீஸ்பூன், உப்பு 2 டீஸ்பூன், எலுமிச்சை 1 மூடி, தண்ணீர் 4 கப், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், நெய் - 1 டேபிள் ஸ்பூன், பட்டை , கிராம்பு தலா 2. அரைக்க:- பெரிய வெங்காயம் 2, புதினா, கொத்துமல்லி தலா ஒரு கைப்பிடி, பச்சை மிளகாய் - 6, பூண்டு - 20 பல், இஞ்சி 2 இஞ்ச் துண்டு, மிளகு 1 டீஸ்பூன், பட்டை, ஏலக்காய், கிராம்பு தலா 2, உப்பு கால் டீஸ்பூன்.
செய்முறை :- அரிசியைக் களைந்து ஊறவைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மைய அரைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் சேர்த்து பட்டை கிராம்பு தாளிக்கவும். இதில் நீளமாக அரிந்த வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். அதில் மட்டனைப் போட்டு நன்கு வதக்கித் தக்காளியை அரைத்து ஊற்றவும். இத்துடன் மல்லித்தூள், மஞ்சள்தூள் பிரியாணி மசாலாத்தூள் & அரைத்த மசாலாவையும் சேர்த்து நன்கு திறக்கிவிட்டு கசூரி மேத்தி போட்டு தயிர் சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வரும்வரை வேக விடவும். வெந்ததும் திறந்து இன்னும் 3 கப் நீரூற்றி அரிசியைச் சேர்த்துக் கிளறவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் மூடியைப் போட்டுக் குறைந்த தணலில் பத்து நிமிடம் வைத்து இறக்கவும். பனை ஓலையில் செய்யப்பட்ட பெரிய தொன்னையில் வைத்து ரெய்த்தாவுடன் பரிமாறவும்.