10.நாட்டுக்கோழி பிரியாணி
தேவையானவை :- நாட்டுக்கோழி 1, சீரக சம்பா 1 கிலோ, பெரிய வெங்காயம் 4, தக்காளி - 4, பச்சை மிளகா - 4, இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன், அரைக்க :- சோம்பு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், கசகசா - ஒரு டீஸ்பூன், வர மிளகாய் 8, மல்லி - ரெண்டு டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - 2 டீஸ்பூன். எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை :- நாட்டுக்கோழியை சுத்தம் செய்து வாட்டி மஞ்சள் தடவி பெரிய துண்டுகளாக அரியவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை எண்ணெயில்லாமல் வறுத்து அரைத்துக் கோழியில் போடவும். மஞ்சள்தூள், உப்பு, தயிர் சேர்த்துப் பிசறி இரண்டு மணி நேரம் ஊறவிடவும். அரிசியைக் களைந்து ஊறவைக்கவும். வெங்காயத்தையும் தக்காளியையும் நீளமாக நறுக்கவும். ஒரு வெங்காயத்தை மட்டும் எடுத்து எண்ணெயில் பொன்னிறமாகப் பொறித்து வைக்கவும். அதே கடாயில் மிச்ச வெங்காயத்தையும் தக்காளியையும் நன்கு வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். இஞ்சி பூண்டு விழுது சிவந்ததும் பச்சை மிளகாயையும் ஊறவைத்த கோழியையும் மசாலாவுடன் சேர்க்கவும். நன்கு கிளறி எண்ணெய் பிரிந்து சிக்கன் வேகும் வரை வைக்கவும். வெந்ததும் ஆறு கப் நீரூற்றிக் கொதி வந்ததும் அரிசியைச் சேர்க்கவும். மிதமான தீயில் பத்து நிமிடம் கிளறி விட்டு மூடிபோட்டு தம்மில் பத்து நிமிடம் வைத்து இறக்கவும். பொறித்த வெங்காயத்தைத் தூவி குருமா, சிப்ஸுடன் பரிமாறவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!