எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 29 டிசம்பர், 2020

செட்டிநாட்டு மட்டன் பிரியாணி

செட்டிநாட்டு மட்டன் பிரியாணி :-


தேவையானவை :- பாசுமதி அரிசி - 2 கப், மட்டன் - அரை கிலோ, பெரிய வெங்காயம் - 3, தக்காளி - 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன், அரைக்க :- பச்சை மிளகாய் - 3, சோம்பு, சீரகம், மிளகு - தலா அரை டீஸ்பூன், கசகசா - அரை டீஸ்பூன், பட்டை , கிராம்பு, ஏலக்காய் - 1 துண்டு, புதினா கொத்துமல்லித்தழை - 2 டீஸ்பூன் , தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன். எலுமிச்சை  - அரை மூடி. மீளகாய்த்தூள், மல்லித்தூள் - தலா 1 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2, மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, உப்பு - ஒரு டீஸ்பூன். எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், பட்டை , பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, கல்பாசிப்பூ, மராட்டி மொக்கு - தலா ஒன்று. கிராம்பு, ஏலக்காய் - தலா 2. புதினா கொத்துமல்லித்தழைகள் - பொடியாக அரிந்தது இரு கைப்பிடிகள். 

செய்முறை:- பாசுமதி அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும். மட்டனை பெரிய துண்டுகளாக வெட்டிக் கழுவி வைக்கவும். வெங்காயத்தை நீளமாக அரியவும். தக்காளியைத் துண்டுகள் செய்யவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கவும். ப்ரஷர் குக்கரில் எண்ணெயைக் காயவைத்துப் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, கல்பாசிப்பூ மராட்டிமொக்கு, தாளித்து வெங்காயத்தைப் போட்டு மென்மையாகும்வரை வதக்கவும். இதில் பச்சை மிளகாய் , இஞ்சிபூண்டு பேஸ்டைப் போட்டு வாசம் வரும்வரை வறுத்து மட்டனைச் சேர்க்கவும். மட்டனைப் போட்டு நன்கு திறக்கி மஞ்சள்தூள் மல்லித்தூள், மிளகாய்த்தூள் போடவும். எல்லாம் ஒன்று சேர்ந்ததும் தக்காளியைப் போட்டு நன்கு வதக்கிக் குழைய விடவும். அதன் பிறகு அரைத்த மசாலாவைப் போட்டு  வதக்கி கால் கப் தண்ணீர் ஊற்றிக் குக்கரை மூடி 3 விசில் வேகவிடவும். வெந்ததும் குக்கரைத் திறந்து அரிசி, உப்பு, புதினா கொத்துமல்லித்தழைகளைச் சேர்த்து கலக்கி இன்னும் ஒரு விசில் வைத்து இறக்கவும். எலுமிச்சை பிழிந்து கலந்து விட்டு சிறிது நேரம் கழித்து சிப்ஸ், வெங்காயத்தயிர்ப்பச்சடியுடன் பரிமாறவும். 


  

சனி, 19 டிசம்பர், 2020

சிக்கன் குருமா

சிக்கன் குருமா/கோழிக்குருமா.


தேவையானவை:- சிக்கன் -அரை கிலோ,பெரிய வெங்காயம் -2, தக்காளி - 2, தேங்காய் - 1 மூடி, பச்சைமிளகாய் -8 - 10, சோம்பு - ஒரு டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கசகசா - அரை டீஸ்பூன், பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் -4, பூண்டு - 4 பல், இஞ்சி - ஒரு இஞ்ச் துண்டு, தாளிக்க :- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, கல்பாசிப்பூ, அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை - தலா 1, உப்பு - 1 டீஸ்பூன், கொத்துமல்லித்தழை - 1 டேபிள் ஸ்பூன் பொடியாக அரிந்தது. 

செய்முறை:- சிக்கனைக் கழுவி குக்கரில் இரண்டு விசில் வரும்வரை வேகவைத்து இறக்கவும். தேங்காய், பச்சைமிளகாய், சோம்பு, சீரகம், மிளகு, கசகசாவை கால் டீஸ்பூன் எண்ணெயில் வெதுப்பி பொட்டுக்கடலை, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சியுடன் சேர்த்து அரைக்கவும். பெரிய வெங்காயம் தக்காளியைப் பொடியாக அரியவும். ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்துப் பட்டை கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, கல்பாசிப்பூ தாளித்து வெங்காயம் தக்காளியைப் போட்டு எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். இதில் மட்டனைப் போட்டுத் திறக்கி அரைத்த மசாலாவையும் சேர்க்கவும். நன்கு கிளறி மூடி போட்டுக் கொதி வந்ததும் 20 நிமிடம் சிம்மில் வைத்து வேகவைக்கவும். அதன் பின் உப்பு சேர்த்து இரு நிமிடங்கள் கொதித்ததும் கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும். இது சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி, சாதம் அனைத்திற்கும் ஏற்றது. 

செவ்வாய், 15 டிசம்பர், 2020

லெமன் சேமியா

லெமன் சேமியா


தேவையானவை:- சேமியா - 1 பாக்கெட், பெரிய வெங்காயம் - 1, காரட் -சின்னம் 1, பட்டாணி - ஒரு கைப்பிடி, பச்சைமிளகாய் - 1,உப்பு - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - அரை மூடி. தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா - அரை டீஸ்பூன்.

செய்முறை:- வெங்காயம், பச்சைமிளகாய், காரட்டை நீளமாக நறுக்கி வைக்கவும்.  கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், பட்டாணி, கேரட்டைத் தாளிக்கவும். நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், உப்புச்  சேர்த்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். தண்ணீர் கொதி வந்ததும் சேமியாவைச் சேர்த்துக் கிளறி தீயை அடக்கி சிம்மில் வைத்து மூடி போட்டு இரு நிமிடங்கள் வேகவிடவும். அடுப்பை அணைத்து மூடியைத் திறந்து எலுமிச்சைச் சாறு பிழிந்து நன்கு கலக்கித் திரும்ப மூடி வைக்கவும். தக்காளி சாஸ் அல்லது தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும். 
  
Related Posts Plugin for WordPress, Blogger...