எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 10 மார்ச், 2025

சக்கைப் பிரதமன்


சக்கைப் பிரதமன்

தேவையானவை:- பலாச்சுளை – 20, பாசிப்பருப்பு – 50 கிதேங்காய் – 1, வெல்லம் – 4 அச்சுஏலக்காய் – 2, நெய் – 1 டேபிள் ஸ்பூன்முந்திரிப்பருப்பு – 15, பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- பாசிப்பருப்பை வேகப்போடவும்பலாச்சுளையை கொட்டை நீக்கி நறுக்கிக் குக்கரில் வேகவைத்து ஆறவைத்து மசிக்கவும்தேங்காயில் இரண்டு பால் எடுக்கவும்இரண்டாம் பாலைப் பருப்பில் ஊற்றி வெல்லத்தைக் கரைய வைக்கவும்அதில் அரைத்த பலாச்சுளையைப் போட்டுக் கொதித்ததும் இறக்கி நெய்யில் முந்திரி தேங்காய்ப்பல்லைப் பொறித்துப் போட்டு ஏலக்காய்ப் பொடி தூவிப் பரிமாறவும்.

ஞாயிறு, 9 மார்ச், 2025

நேந்திரம் பழப் பிரதமன்

நேந்திரம் பழப் பிரதமன்

தேவையானவை:- நேந்திரம் பழம் – 1, தேங்காய் முற்றியது – 1, வெல்லம் – 4 அச்சுஏலக்காய் – 2, நெய் – 2 டீஸ்பூன்முந்திரிப் பருப்பு – 15.

செய்முறை:- நேந்திரம்பழத்தைத் தோலுரித்து வேகவைத்து மசிக்கவும்தேங்காயைத் திருகி  கெட்டிப்பால் அரை கப்பும் தண்ணிப்பால் 1 ½ கப்பும் எடுக்கவும்வெல்லத்தைப் பொடித்துப் பாகு காய்ச்சி பழக்கூழையும் சேர்த்துக் காய்ச்சவும்நன்கு கிளறி இரண்டாம் பாலை ஊற்றி இறக்கி வைத்து முதல் பாலையும் சேர்க்கவும்நெய்யில் முந்திரியைப் பொறித்துப் போடவும்.


புதன், 5 மார்ச், 2025

பாலாடைப் பிரதமன்

பாலாடைப் பிரதமன்


தேவையானவை:- ரெடிமேட் அடை – ஒரு பாக்கெட்பால் – 1 லிமில்க் மெய்ட் – 200 கிசீனி – 1 டேபிள்ஸ்பூன்ஏலக்காய்த் தூள் – 1 சிட்டிகைகுங்குமப்பூ – 1 சிட்டிகைநெய் – 1 டேபிள் ஸ்பூன்முந்திரி – 15, காய்ந்த திராக்ஷை- 15.

செய்முறை:- அடையை முதலில் கொதிக்கும் நீரில் போட்டுக் கழுவிப் பின்பு வேகவைக்கவும்பாலைக் காய்ச்சி அதில் அடையைச் சேர்த்து வற்றவிடவும்சுண்டி வரும்போது மில்க மெயிடையும் சீனியையும் சேர்க்கவும்இறக்கி ஏலப்பொடிகுங்குமப்பூ ( சூடான பாலில் கரைத்து ஊற்றவும். ) போட்டு நெய்யில் முந்திரி திராக்ஷையை வறுத்துப் போடவும்.

திங்கள், 3 மார்ச், 2025

குறுவை அரிசிப் பாயாசம்

குறுவை அரிசிப்  பாயாசம்


தேவையானவை:-  குறுவை அரிசி - அரை ஆழாக்கு, பால் - 1 லிட்டர்ஜீனி - 1/2 ஆழாக்குஏலக்காய் – 2, முந்திரி  - 10, கிஸ்மிஸ் – 10, நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:- குறுவை அரிசியை மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்துக்  குக்கரில் அரை லிட்டர் பாலில் வேகவிடவும்வெந்ததும் இறக்கி மிச்ச பாலையும் சேர்த்து ஜீனி கரையும் வரை காய்ச்சி நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் பொறித்துப் போட்டு ஏலத்தைப் பொடி செய்து போட்டுப் பரிமாறவும்.

புதன், 26 பிப்ரவரி, 2025

குழாய்ப் புட்டு

குழாய்ப் புட்டு



தேவையானவை :-, பச்சரிசி – 2 கப், தேங்காய் – 1, உப்பு – 1 சிட்டிகை., குழாய்ப் புட்டு செய்ய குழாய்ப் புட்டுக்குழல் பாத்திரமும் மாவு சலிக்க சல்லடையும் வேண்டும்.

 

செய்முறை :- பச்சரிசியக் களைந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். ஊறியதும் நீரை வடித்துவிட்டு மிக்ஸியில் அரைத்து நைஸ் சல்லடையில் சலிக்கவும். மாவில் உப்புக் கலந்து பிசறி வைக்கவும்.

தேங்காயை உடைத்துத் தோல் வராமல் மென்மையாகத் துருவவும். குழாய்ப் புட்டுப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து நீர் ஊற்றவும். அதன் குழல் போன்ற பகுதியில் அச்சைப் போட்டு முதலில் கொஞ்சம் மாவு பின் தேங்காய்த் துருவல் போடவும். இதே போல் மூன்று லேயர் போட்டு பாத்திரத்தில் ஃபிட் செய்து அடுப்பில் வைத்து வேகவுடவும். பத்து நிமிடங்களில் வெந்ததும் இறக்கி ஏலப் பொடியுடன் சீனி சேர்த்துப் பரிமாறவும்.

திங்கள், 24 பிப்ரவரி, 2025

கொழுக்கட்டை

கொழுக்கட்டை



தேவையானவை :- இட்லி அரிசி - 2 கப், துருவிய தேங்காய் - 1 கப், பொடியாக அரிந்த வெங்காயம் - 1/2 கப், வரமிளகாய் - 4 விதை நீக்கி சின்னதாக வெட்டவும்., கருவேப்பிலை - 1 இணுக்கு, உப்பு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், ஜீரகம் - 1/2 டீஸ்பூன்., எண்ணெய் - 3 டீஸ்பூன்.

செய்முறை :- இட்லி அரிசியைக் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். கொரகொரப்பாக அரைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து., சீரகம்., வரமிளகாய்., கருவேப்பிலை போடவும். வெங்காயம் போட்டு நன்கு வதக்கி மாவை ஊற்றவும். உப்பு சேர்க்கவும். 5 நிமிடம் நன்கு கிளறி கையில் ஒட்டாமல் வரும்போது தேங்காய்த்துருவல் சேர்க்கவும். அடுப்பை அணைத்து மாவை கையால் நன்கு பிசைந்து எலுமிச்சை உருண்டைகளாகவும் பிடி கொழுக்கட்டைகளாகவும் பிடித்து ஆவியில் 20 நிமிடம் வேகவிடவும்.

சனி, 22 பிப்ரவரி, 2025

சர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ்



தேவையானவை :- சர்க்கரை வள்ளிக்கிழங்கு -  4, சின்ன வெங்காயம் - 6, பச்சை மிளகாய் - 1, உப்பு - கால் டீஸ்பூன்,  தாளிக்க - எண்ணெய் - 2 டீஸ்பூன். கடுகு - அரை டீஸ்பூன், உளுந்து - ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை :- சர்க்கரை வள்ளிக்கிழங்குகளை வேகவைத்துத் தோலுரிக்கவும். புட்டுபோல உதிர்த்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் பச்சை மிளகாயைப் பொடிப்பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் பச்சைமிளகாய், வெங்காயம் கருவேப்பிலையைத் தாளிக்கவும். ஓரிரு நிமிடங்கள் வதக்கியபின் உதிர்த்த சர்க்கரைவள்ளிக்கிழங்கையும் உப்பையும் சேர்க்கவும்.  நன்கு கலக்கி கிளறி இறக்கவும்.

புதன், 19 பிப்ரவரி, 2025

இலை அடை

இலை அடை



தேவையானவை :- இட்லி அரிசி - 2 ஆழாக்கு, துருவிய தேங்காய் - 1 கப், தூள் வெல்லம் - 1/2 கப், உப்பு - 1 சிட்டிகை, வாழை இலை – 2

 

செய்முறை :- அரிசியை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

நன்கு மசிய அரைக்கவும். உப்பு சேர்க்கவும். ஒரு காட்டன் துணியில் மாவைக் கொட்டிவைத்தால் அதிகப்படியான தண்ணீரை உறிஞ்சி விடும். தேங்காயையும் வெல்லத்தையும் கலக்கவும். இலையை சம துண்டுகளாக வெட்டவும். இலையில் மாவை மெல்லிய தகடாக தட்டவும். அதில் தேங்காய் வெல்லக் கலவையை பரப்பவும். ரெண்டாக மடித்து ஒட்டவும். ஆவியில் 15 நிமிடங்கள் வேகவைக்கவும். வாழை இலைகளை எடுத்துவிட்டுப் பரிமாறவும். ப்ளைன் இலை அடைக்கு வெறும் தேங்காய் மட்டும் தூவி செய்யவும்.

திங்கள், 17 பிப்ரவரி, 2025

ஆப்பம்

ஆப்பம்



தேவையானவை :- பச்சரிசி - 1 கப், புழுங்கல் அரிசி ( இட்லி அரிசி) - 1 கப், உளுந்து - 1/2 கப், வெந்தயம் - 2 டீஸ்பூன், உப்பு - 1/2 டீஸ்பூன்

 

செய்முறை :- அரிசிகள்., உளுந்து., வெந்தயத்தை கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். மைய அரைத்து உப்பு போட்டுக் கரைத்து வைக்கவும். 10 மணி நேரம் புளிக்க விடவும். ஆப்பக்கல்லை எண்ணைத் துணியால் துடைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றி கல்லை அடுப்பிலிருந்து எடுத்து அப்படியே ஸ்லாத்தவும். அல்லது சுற்றவும். மாவு எல்லாப் பக்கங்களிலும் சரியாக பரவும்.. அடுப்பில் வைத்து மூடி போட்டு ஒரு நிமிடம் வேக விடவும். மூடியை திறந்து ஆப்பத்தை எடுத்து தேங்காய்ப் பால் ஊற்றிப் பரிமாறவும். ஒரு முழுத்தேங்காயைத் திருகி மிக்சியில் அரைத்து 2 கப் தண்ணீர் ஊற்றிப் பாலெடுத்து வடிகட்டி ., 2 டேபிள்ஸ்பூன் சீனியும் ., பொடித்த ஏலக்காயும் போடவும்.

புதன், 12 பிப்ரவரி, 2025

பால் அல்வா

பால் அல்வா



தேவையானவை:- பால் – 2 லிட்டர், சீனி – ஒரு கப், பால் பவுடர் – 200 கி, எலுமிச்சை சாறு – சில துளிகள், நெய் – 1 கப், முந்திரி – 12.

செய்முறை:- ஒரு லிட்டர் பாலைக் காய்ச்சிக் கொதிக்கவிட்டு எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். பால் பனீராகத் திரிந்ததும் ஒரு துணியில் வடிகட்டி எடுத்து உதிர்த்துக் கொள்ளவும். இன்னொரு லிட்டர் பாலைக் காய்ச்சி அது சுண்டும்போது சீனியைச் சேர்த்து உதிர்த்த பனீரையும் சேர்த்துக் கிளறவும். முந்திரியை ஒடித்து நெய்யில் பொரித்து வைக்கவும். பால் சுண்டி வரும்போது பால் பவுடரைச் சலித்துச் சேர்த்து நெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு சுருண்டதும் இறக்கி முந்திரியால் அலங்கரிக்கவும்.

வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

பால் கொழுக்கட்டை

பால் கொழுக்கட்டை



தேவையானவை :- இட்லி அரிசி – 2 கப், தேங்காய் – 1, சீனி – 300 கி, ஏலக்காய் – 4.

செய்முறை:- இட்லி அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து நைஸாக அரைக்கவும். தண்ணீர் அதிகம் இருந்தால் இஞ்சுவதற்காக அதை ஒரு சுத்தமான வெண்துணியில் கட்டி வைக்கவும். தேங்காயை அரைத்து கெட்டிப்பால் எடுக்கவும். அதன் பின் இருமுறை ஒரு கப் தண்ணீர் விட்டுப் பால் எடுத்து வைக்கவும். மூன்றாம் பாலில் சீனியைப் போட்டுக் கரைந்ததும் வடிகட்டி வைக்கவும். இரண்டாம் பாலைப் பாத்திரத்தில் ஊற்றிக் கொதிவரும்போது அரைத்த மாவை சீடைக்காய் அளவில் கொழுக்கட்டைகளாகத் தட்டிப் போடவும். பாதி வேகும்போது சீனி சேர்த்த தண்ணீரையும் ஊற்றிக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்துக் கொழுக்கட்டைகள் வெந்ததும் முதல் பாலை ஊற்றி ஏலப்பொடி போட்டு இறக்கி நிவேதிக்கவும்.

புதன், 5 பிப்ரவரி, 2025

தேன்குழல்

தேன்குழல்



தேவையானவை :- பச்சரிசி - 6 கப், வெள்ளை உளுந்தம் பருப்பு - 2 கப், உப்பு – 2 1/2 டீஸ்பூன், தண்ணீர் - 4 கப், எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு

செய்முறை:- பச்சரிசியைக் கழுவி நிழற்காய்ச்சலாகப் போட்டு மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். உளுந்தம் பருப்பை வெறும் வாணலியில் வெதுப்பி மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். இரண்டையும் கலந்து உப்பு சேர்த்துத் தேவையான நீர் ஊற்றிப் பிசையவும். கொஞ்சம் காய்ந்த எண்ணெயையும் ஊற்றிப் பிசைந்து நீள் உருண்டைகளாக உருட்டி ஒரு ஈரத் துணி கொண்டு மூடவும். எண்ணெயைக் காயவைத்து மாவு உருண்டைகளைத் தேன்குழல் அச்சில் போட்டுக் காயும் எண்ணெயில் பிழிந்து வெண்ணிறமாக எடுக்கவும். பக்குவம் சரியாக இருந்தால் வெண்ணிறமாகவே வரும்.

வெள்ளி, 31 ஜனவரி, 2025

அரிசிப் பாயாசம்

அரிசிப் பாயாசம்



தேவையானவை :- பச்சரிசி – அரை கப், தேங்காய் – ஒரு மூடி, சர்க்கரை – 2 கப். ஏலப்பொடி – ஒரு சிட்டிகை, முந்திரி கிஸ்மிஸ் – தலா 20, நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை.:- பச்சரிசியை ஊறவைத்துத் தேங்காயோடு சேர்த்து நைஸாக அரைக்கவும். இதில் தேவையான தண்ணீர் ( 4 கப் ) சேர்த்துக் கொதிக்கவிடவும். அரிசி வெந்ததும் சர்க்கரையைச் சேர்த்துக் கொதித்ததும் இறக்கி ஏலப்பொடி தூவவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸைப் பொன்னிறமாகப் பொரித்துப் போடவும். 

செவ்வாய், 28 ஜனவரி, 2025

ஆக்ரா ஸ்வீட்

ஆக்ரா ஸ்வீட்


தேவையானவை:- பூசணி – 2 கீற்று, சுண்ணாம்பு – ½ டீஸ்பூன், சீனி – 1 1/2 கப், ஏலக்காய் – 3, தாழம்பூ எசன்ஸ் – சில துளிகள், குங்குமப்பூ – 1சிட்டிகை.

 

செய்முறை:- பூசணியைத் தோல்சீவி ஒரு இஞ்ச் சதுரத் துண்டுகளாக்கவும். 3 கப் தண்ணீரில் சுண்ணாம்பைக் கரைத்து அதில் பூசணித்துண்டுகளை 24 மணி நேரம் ஊறவைக்கவும். அதன் பின் நன்கு அலசிக் கழுவி எடுத்து நீரில் 1 நிமிடம் வேகவைத்து வடித்து வைக்கவும். சீனியுடன் ஏலக்காய்த்தூள்,குங்குமப்பூ சேர்த்துக் கால் கப் நீரூற்றி அடுப்பில் வைக்கவும். சீனி கரைந்ததும் பூசணித்துண்டுகளைச் சேர்த்து நீர் வற்றியதும் இறக்கி தாழம்பூ எசன்ஸை ஸ்பிரே செய்து ஆறவிடவும்.

செவ்வாய், 21 ஜனவரி, 2025

இனிப்பு இடியாப்பம்

இனிப்பு இடியாப்பம்


தேவையானவை :- இடியாப்ப மாவு - 2 கப் ( அல்லது இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி இடித்து சலிக்கவும். இதை இடியாப்பம் செய்ய உபயோகிக்கவும்). கொதி நீர் - 2 கப், துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன், சர்க்கரை - 1/2 கப், நெய் - 1 டேபிள்ஸ்பூன், ஏலக்காய் - 3 ( பொடித்தது)

செய்முறை :- இடியாப்பத்தில் கொதி நீரை ஊற்றி நன்கு பிசையவும். இடியாப்ப அச்சில் போட்டு இட்லி குக்கரில் வேக வைத்து உதிர்க்கவும். ஒரு பௌலில் போட்டு சர்க்கரை., துருவிய தேங்காய்., நெய்., ஏலப்பொடி சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

சனி, 18 ஜனவரி, 2025

கல்கண்டுப் பொங்கல்

கல்கண்டுப் பொங்கல்


தேவையானவை:- பச்சரிசி - 1 கப், கல்கண்டு பொடித்தது - 1 1/2 கப் அல்லது ஜீனி, பால் - 2 கப், ஏலப்பொடி - 1 சிட்டிகை, நெய்/டால்டா - 2 டேபிள் ஸ்பூன், முந்திரி - 10

செய்முறை:- பச்சரியை ஒரு வாணலியில் லேசாக வறுக்கவும். ஒரு டீஸ்பூன் பாசிப்பருப்பை சேர்க்கவும் . நன்கு களைந்து பால் 2 கப் தண்ணீர் 2 கப் சேர்த்துக் குக்கரில் 2 விசில் வேகவிடவும். வெந்தவுடன் நன்கு குழைத்து மசிக்கவும். அதில் ஜீனி /கல்கண்டுப் பொடி சேர்த்து மசிக்கவும். ஏலப்பொடி போட்டு நெய்யில் முந்திரியை வறுத்து போடவும். சூடாக பரிமாறவும்

புதன், 15 ஜனவரி, 2025

தேங்காய்ப்பால் கஞ்சி

தேங்காய்ப்பால் கஞ்சி


தேவையானவை :- பச்சரிசி - 1 கப், தேங்காய்ப்பால் - திக் - 1 கப், தேங்காய்ப்பால் - தண்ணீர் கலந்தது - 2 கப், வெந்தயம் - 1 டீஸ்பூன், வெள்ளைப் பூண்டு - 10 பல், உப்பு - 1/2 டீஸ்பூன்.

செய்முறை:- பச்சரிசியைக் கழுவி வெந்தயம், பூண்டைச் சேர்த்து தண்ணீர் ஊற்றிப் பிழிந்த தேங்காய்ப் பால் 2 கப் ஊற்றி 3 விசில் சத்தம் வரும்வரை வைக்கவும். பிரஷர் போனதும் திறந்து நன்கு மசித்து உப்பும் முதல் தேங்காய்ப் பாலும் சேர்க்கவும்.

வெள்ளி, 10 ஜனவரி, 2025

பாலாடைப் பிரதமன்

பாலாடைப் பிரதமன்


தேவையானவை:- ரெடிமேட் அடை – ஒரு பாக்கெட், பால் – 1 லி, மில்க் மெய்ட் – 200 கி, சீனி – 1 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த் தூள் – 1 சிட்டிகை, குங்குமப்பூ – 1 சிட்டிகை, நெய் – 1 டேபிள் ஸ்பூன், முந்திரி – 15, திராக்ஷை- 15.

செய்முறை:- அடையை முதலில் கொதிக்கும் நீரில் போட்டுக் கழுவிப் பின்பு வேகவைக்கவும். பாலைக் காய்ச்சி அதில் அடையை சேர்த்து வற்றவிடவும். சுண்டி வரும்போது மில்க மெயிடையும் சீனியையும் சேர்க்கவும். இறக்கி ஏலப்பொடி, குங்குமப்பூ ( சூடான பாலில் கரைத்து ஊற்றவும். ) போட்டு நெய்யில் முந்திரி திராக்ஷையை வறுத்துப் போடவும்.

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

தேங்காய் பர்பி

தேங்காய் பர்பி


தேவையானவை:- தேங்காய் – 1, ஜீனி – 1 கப், நெய் -1 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன், முந்திரி – 10, ஏலப்பொடி – கால்டீஸ்பூன்.

 

செய்முறை:-. தேங்காயைத் தூளாகத் துருவி வைக்கவும். ஒரு ட்ரேயில் ஒரு டீஸ்பூன் நெய்யைத் தடவி வைக்கவும். அடி கனமான பானில்   தேங்காய்த்துருவலைப் போட்டு மிதமான தீயில் நன்கு வதக்கவும். பச்சை வாசம் போனவுடன் ஜீனியைச் சேர்த்துத் தொடர்ந்து கிளறவும். ஒரு சின்ன பானில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யில் முந்திரியை வதக்கி சேர்க்கவும். நன்கு கிளறி பக்கங்களில் ஒட்டாமல் இறுகி வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டித் துண்டுகள் போடவும். 

வெள்ளி, 3 ஜனவரி, 2025

அவல் உருண்டை

அவல் உருண்டை


தேவையானவை :- வெள்ளை அவல் – 2 கப், தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன், சீனி – 100 கி, ஏலத்தூள் – 1 சிட்டிகை, உப்பு – 1 சிட்டிகை.

செய்முறை:- அவலை மிக்ஸியில் பொடிக்கவும். இதில் உப்பை சேர்த்து கால் கப் தண்ணீர் தெளித்துப் பிசறி ஐந்து நிமிடம் வைக்கவும். அதிலேயே ஏலத்தூள், தேங்காய்த்துருவல், பொடித்த சீனி போட்டு நன்கு பிசைந்து உருண்டைகளாகப் பிடித்துக் கொடுக்கவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...