மட்டர் (பட்டாணி) பனீர் க்ரேவி
தேவையானவை :- பச்சைப் பட்டாணி – ஒரு கப் ( உரித்தது ), பனீர் – 1 பாக்கெட், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன், மல்லித்தூள் – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், சீனி – கால் டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – ஒரு கைப்பிடி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை :- எண்ணெயைக் காயவைத்துப் பனீரை ஒரு இன்ச் துண்டுகள் செய்து லேசாக வறுத்து எடுக்கவும். அதே எண்ணெயில் பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயத்தை அரைத்து ஊற்றி வதக்கவும். வெங்காயம் மென்மையாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதில் சீனி உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி சேர்த்து வதக்கிப் பச்சைப் பட்டாணியைப் போடவும் . ஒரு நிமிடம் வதக்கியதும் தக்காளியை அரைத்து ஊற்றி கிளறி இரண்டு கப் தண்ணீர் ஊற்றவும். மசாலா கொதிக்கத் துவங்கியதும் பனீர் துண்டுகளைச் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும். கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும்.




































