BEETROOT COCONUT FRY.
NEEDED:-
BEETROOT - 2 NOS.
GRATED COCONUT - 1 TBLSPN
OIL - 1 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
RED CHILLIE - 1 NO
CURRY LEAVES - 1 ARK.
SALT - 1/3 TSP
METHOD:-
PEEL WASH AND DICE THE BEETROOT. PRESSURE COOK WITH 3 CUPS OF WATER AND DRAIN THE STOCK FOR SOUP. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL, WHEN IT BECOMES BROWN ADD HALVED RED CHILLIE AND CURRY LEAVES. SAUTE FOR A MINUTE AND ADD THE BOILED BEETROOT. STIRR WELL.ADD SALT AND GRATED COCONUT. STIRR AGAIN AND SERVE HOT WITH SAMBAR RICE OR VATHAK KULAMBU RICE.
பீட்ரூட் தேங்காய்ப் பொரியல்.
தேவையானவை:-
பீட்ரூட் - 2
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
கருவேப்பிலை - 1 இணுக்கு.
உப்பு - 1/3 டீஸ்பூன்
செய்முறை:-
பீட்ரூட்டைத் தோல் சீவி சதுரத் துண்டுகளாக நறுக்கவும். பிரஷர் குக்கரில் 3 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து அந்தத் தண்ணீரை சூப் செய்ய எடுத்துக் கொள்ளவும்.. பீட்ரூட்டை வடிகட்டி வைக்கவும்.
ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் , வரமிளகாயை இரண்டாக கிள்ளிப் போடவும், அதில் கருவேப்பிலையைப் போட்டுப் பொறிந்ததும் வடிகட்டிய பீட்ரூட்டைப் போடவும். நன்கு கிளறவும். உப்பையும், தேங்காய்த் துருவலையும் சேர்த்துக் கிளறி சாம்பார் சாதம் அல்லது வத்தக் குழம்பு சாதத்தோடு பரிமாறவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!