எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தூதுவளை ரசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தூதுவளை ரசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 ஆகஸ்ட், 2023

தூதுவளை ரசம்

தூதுவளை ரசம்


 

தேவையானவை :-தூதுவளை – 1 கட்டு , வேகவைத்த துவரம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், புளி – 1 நெல்லிக்காய் அளவு, உப்பு – ½ டீஸ்பூன், வரமிளகாய் – 2, மிளகு – 1/2 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை, மல்லித்தூள் – ½ டீஸ்பூன், மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன், பூண்டுப்பல் – 2, கடுகு – 1 டீஸ்பூன், வெந்தயம் – ½ டீஸ்பூன், சீரகம் – ½ டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன்

 

செய்முறை:- தூதுவளைக் கீரை முள்ளுடன் இருக்கும் கீரையை மட்டும் பார்த்து ஆய்ந்து கழுவி வைக்கவும். உரலில் மிளகாய், மிளகு சீரகம் பொடித்து பூண்டு தூதுவளைக் கீரையை வைத்து ஒன்றிரண்டாக நைத்து வைக்கவும். புளியை ஊறவைத்து இரண்டு கப் சாறு எடுத்து உப்பு சேர்த்து வைக்கவும். பருப்பை கடைந்து புளித்தண்ணீரில் சேர்க்கவும். அதில் மஞ்சள் தூளையும் மல்லித் தூளையும் போடவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் சீரகம், வெந்தயம் பெருங்காயப் பொடி போடவும். அதில் நைத்த விழுதைப் போட்டு அரை நிமிடம் வதக்கி புளித்தண்ணீரை ஊற்றவும். நுரைத்துப் பொங்கி வரும்போது கொதிக்கவிடாமல் இறக்கி உபயோகிக்கவும். இது சள்ளைக் கடுப்பை நீக்கும்.

 

திங்கள், 1 மே, 2023

தூதுவளை ரசம்

.தூதுவளை ரசம்



தேவையானவை:- தூதுவளை இலைகள் – ஒரு கைப்பிடி, வெந்த துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், தக்காளி – 1, வரமிளகாய் – 2, மிளகு சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், பூண்டுப் பல் – 2, மல்லித்தூள், மஞ்சள்தூள் தலா கால் டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன் , புளி – ஒரு நெல்லி அளவு. தாளிக்க. எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம் தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் ஒரு துண்டு. கருவேப்பிலை, கொத்துமல்லி சிறிது.

செய்முறை:- தூதுவளை இலைகளை ( முள் இருக்கும் ) பார்த்து ஆய்ந்து வரமிளகாய், மிளகு, சீரகம், தக்காளி, பூண்டுப்பல்லோடு சேர்த்து நைத்து வைக்கவும். புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்துச் சாறு எடுத்து உப்பு, மஞ்சள்தூள், மல்லித்தூள் சேர்க்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து சீரகம், வெந்தயம், பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து நைத்து வைத்த தூதுவளையைப் போட்டுப் பிரட்டவும். இதில் புளித்தண்ணீரை ஊற்றவும். நுரைத்து வரும்போது கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும். 


இது சள்ளைக்கடுப்பு எனப்படும் உடல்வலியைப் போக்கும். அப்படியேவும் அருந்தலாம். குழைவான சோற்றில் ஊற்றி மசித்தும் சாப்பிடலாம்.

 

ஞாயிறு, 12 ஜூன், 2022

தூதுவளை ரசம்

தூதுவளை ரசம்


 

தேவையானவை :- தூதுவளைக் கீரை - 1 சிறு கட்டு, துவரம் பருப்பு வேகவைத்த தண்ணீர் - 1 கப், தக்காளி – 1, வரமிளகாய் – 2, புளி - 1 நெல்லிக்காய் அளவு, உப்பு - 1 டீஸ்பூன், மிளகு ஜீரகப் பொடி - 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன், மல்லிப் பொடி - 1/4 டீஸ்பூன், வெள்ளைப் பூண்டு - 2 பல் ( விரும்பினால்), எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், ஜீரகம் - 1/2 டீஸ்பூன், வெந்தயம் - 1/4 டீஸ்பூன், பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு

 

 

செய்முறை :-தூதுவளையை சுத்தம் செய்து கழுவி துண்டுகளாய் வெட்டவும். லேசாக கல்லில் போட்டு நைத்து வைக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து உப்பு சேர்க்கவும். பருப்புத்தண்ணீரையும் சேர்க்கவும். தக்காளியைக் கரைத்து ., பூண்டை நசுக்கிப் போடவும். அதில் மிளகு ஜீரகப் பொடி., மஞ்சள் பொடி., தனியா பொடி போடவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்தவுடன் ., ஜீரகம்., வெந்தயம்., பெருங்காயம் போடவும். இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய்., தூதுவளைக் கீரையைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி கரைத்த புளித்தண்ணீரை ஊற்றவும். நன்கு நுரை கூடி வரும் போது இறக்கி சூடாக சூப் போல அருந்தக் கொடுக்கவும் அல்லது குழைவான சாத்தோடு பரிமாறவும். இது உடல் வலி மற்றும் சளியை குணப்படுத்தும்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...