தூதுவளை ரசம்
தேவையானவை :- தூதுவளைக் கீரை - 1 சிறு கட்டு, துவரம் பருப்பு வேகவைத்த தண்ணீர் - 1 கப், தக்காளி – 1, வரமிளகாய் – 2, புளி - 1 நெல்லிக்காய் அளவு, உப்பு - 1 டீஸ்பூன், மிளகு ஜீரகப் பொடி - 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன், மல்லிப் பொடி - 1/4 டீஸ்பூன், வெள்ளைப் பூண்டு - 2 பல் ( விரும்பினால்), எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், ஜீரகம் - 1/2 டீஸ்பூன், வெந்தயம் - 1/4 டீஸ்பூன், பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு
செய்முறை :-தூதுவளையை சுத்தம் செய்து கழுவி துண்டுகளாய் வெட்டவும். லேசாக கல்லில் போட்டு நைத்து வைக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து உப்பு சேர்க்கவும். பருப்புத்தண்ணீரையும் சேர்க்கவும். தக்காளியைக் கரைத்து ., பூண்டை நசுக்கிப் போடவும். அதில் மிளகு ஜீரகப் பொடி., மஞ்சள் பொடி., தனியா பொடி போடவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்தவுடன் ., ஜீரகம்., வெந்தயம்., பெருங்காயம் போடவும். இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய்., தூதுவளைக் கீரையைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி கரைத்த புளித்தண்ணீரை ஊற்றவும். நன்கு நுரை கூடி வரும் போது இறக்கி சூடாக சூப் போல அருந்தக் கொடுக்கவும் அல்லது குழைவான சாத்தோடு பரிமாறவும். இது உடல் வலி மற்றும் சளியை குணப்படுத்தும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!