எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 19 ஜூன், 2022

புதினா கொத்துமல்லி கருவேப்பிலை சூப்

புதினா கொத்துமல்லி கருவேப்பிலை சூப்


 

தேவையானவை:- (ஒரு கட்டு கருவேப்பிலை, ஒரு கட்டு புதினா, ஒரு கட்டு கொத்துமல்லியில்) ஆய்ந்த தளிர் இலைகள் மட்டும். – தலா ஒரு பெரிய கைப்பிடி அளவு எடுத்து அலசி வைக்கவும், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, பச்சைமிளகாய் – 1 , வேகவைத்த துவரம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், பட்டை – 1, இலை – 1, கல்பாசிப்பூ -1, சோம்பு -1/2 டீஸ்பூன், சீரகம் – ½ டீஸ்பூன், மிளகு – ½ டீஸ்பூன், மஞ்சள் பொடி – 1 சிட்டிகை, உப்பு – ½ டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன், பால் – 1 டேபிள் ஸ்பூன், மிளகுத்தூள் – ½ டீஸ்பூன்

 

செய்முறை:- பெரிய வெங்காயம், தக்காளியை நீளமாக நறுக்கிக்கொள்ளவும்.  பச்சைமிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து சோம்பு சீரகம் மிளகு, பட்டை, இலை, கல்பாசிப்பூ தாளித்து வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் ஆய்ந்து கழுவிய தளிர் இலைகள் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். மஞ்சள்தூள் உப்பு வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைக்கவும்.ஆறியதும் திறந்து பச்சை மிளகாயை எடுத்துப் போட்டு விட்டு  நன்கு மசித்து அந்தச் சாறை வடிகட்டவும். இரு முறை ஒரு கப் நீரூற்றிப் பிசைந்து வடிகட்டி எடுக்கவும்.இதில் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும். இறக்கி பாலும் மிளகுத்தூளும் கலந்து குடிக்கக் கொடுக்கவும்.

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...