முருங்கைக்கீரை அடை
தேவையானவை:- பச்சரிசி – ½ கப், புழுங்கல் அரிசி- ½ கப், துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு கைப்பிடி., முருங்கைக் கீரை – 1 கப் உதிர்த்தது, பெரிய வெங்காயம் – 1 பொடியாக அரியவும், தேங்காய் துருவல் – 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை., வரமிளகாய் – 4, சோம்பு – ½ டீஸ்பூன் (அல்லது ) பெருங்காயம் – 1 துண்டு, உப்பு – ½ டீஸ்பூன், எண்ணெய் – 20 மிலி.
செய்முறை:-
பச்சரிசி புழுங்கல் அரிசியை உளுந்தம் பருப்பைக் கழுவி ஒன்றாக ஊறவைக்கவும். துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பைக் கழுவி ஒன்றாக ஊறவைக்கவும். இரண்டு மணி நேரம் ஊறியபின் மிக்ஸியில் முதலில் மிளகாய் சோம்பு உப்புப் போட்டு அரைத்து அதில் அரிசி உளுந்தைப் போட்டுக் கொரகொரப்பாக அரைக்கவும். அடுத்து பருப்பு வகைகளையும் பெருபெருவென்று அரைத்து எடுக்கவும். முருங்கைக்கீரை, உப்பு, மஞ்சள் பொடி, தேங்காய் துருவல், பொடியாக அரிந்த வெங்காயம் போட்டு நன்கு கலக்கி ஐந்து நிமிடம் வைக்கவும். அதன் பின் தோசைக்கல்லில் அடைகளாக ஊற்றி தக்காளிச் சட்னியுடன் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக