காராமணி மாவத்தக் குழம்பு
தேவையானவை :- தட்டைப்பயறு ( காராமணி ) - 1 கப், மாங்காய் வற்றல் – 10, சின்ன வெங்காயம் – 10, பூண்டு – 2, தக்காளி – 1, மிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன், மல்லிப்பொடி - 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள்பொடி - 1 சிட்டிகை., புளி - 1 நெல்லிக்காய் அளவு, உப்பு - 1 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு.
செய்முறை:- தட்டைப்பயறை வறுத்து பிரஷர் குக்கரில் 4 விசில் வரும்வரை வேகவிடவும். மாவற்றல்., தக்காளி., வெங்காயத்தை சின்ன தட்டில் குக்கரில் வைத்து வேகவிடவும். ஆவி வெளியேறியதும் இரண்டையும் நன்றாக கலந்து மிளகாய் பொடி., மல்லி பொடி., மஞ்சள் பொடி போடவும். புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து உப்புடன் குழம்பில் சேர்க்கவும். கொதிவந்தபின் சிம்மிம் 5 நிமிடம் வைத்து., எண்ணையில் கடுகு., ஜீரகம் தாளித்து கொட்டவும். பூண்டு தட்டிப் போட்டு இறக்கவும். இதை சாதம் அல்லது ஊத்தப்பம் அல்லது இட்லியுடன் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக