BEETROOT VADAI:-
NEEDED:-
BEET ROOT - 2 NOS ( PEELED., CRATED)
THUVAR DHAL - 1/2CUP
BIG ONION - 1 ( CHOPPED)
RED CHILLIES - 4 NOS.
SOMPH - 1 TSP
COCONUT - 2 INCH PIECE
CURRY LEAVES - 2 ARK
SALT - 1/2 TSP
OIL - FOR FRYING.
METHOD:-
WASH AND SOAK THUVAR DHAL FOR 2 HOURS. DRAIN THE WATER . GRIND REDCHILLIES., SOMPH.,CURRY LEAVES., COCONUT., THUVAR DHALL COARSLY. ADD SALT., BEETROOT., ONION . MIX WELL. MAKE VADAS ADN DEEP FRY IN OIL. SERVE HOT AS EVENING SNACK ., OR WITH SAMBAR RICE ., RASAM RICE., MORKUZAMBU RICE AND CURD RICE.
பீட்ரூட் வடை:-
தேவையானவை :-
பீட்ரூட் - 2 ( தோல் சீவி துருவியது).
துவரம் பருப்பு - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது.
வரமிளகாய் - 4
சோம்பு - 1 டீஸ்பூன்
தேங்காய் - 2 இன்ச் துண்டு
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு.
செய்முறை:-
துவரம்பருப்பை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து வரமிளகாய்., சோம்பு., தேங்காய்., கருவேப்பிலையுடன் கொரகொரப்பாக அரைக்கவும். பீட்ரூட் துருவல்., வெங்காயம் உப்பு சேர்த்து நன்கு பிசையவும். வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொறித்தெடுக்கவும். சூடாக மாலை டீயுடன் பரிமாறவும். அல்லது சாம்பார் சாதம்., ரசம் சாதம்., மோர்க்குழம்பு சாதம்., தயிர் சாதத்துடன் தொட்டுக் கொள்ளலாம்.
பீட்ரூட் ல வடையா... super idea.. ஆனா இன்னும் 2, 3 photos போட்ருக்கலாமே...
பதிலளிநீக்குஒருநாள் ட்ரை பண்ணிட்டு சொல்றேங்க ...
மிக அருமை
பதிலளிநீக்குநன்றி ஸ்வர்ணரேக்கா., ஜலீலா
பதிலளிநீக்கு