13.மாம்பழ சாம்பார்
தேவையானவை:- அரைப்பழமாகப் பழுத்த மாம்பழம் -1 துவரம் பருப்பு – அரை கப், வறுத்து நுணுக்கிய சாம்பார் பொடி – 1 டேபிள் ஸ்பூன், புளி – நெல்லி அளவு, உப்பு – ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 8, தக்காளி – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, தாளிக்க :- எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து, சீரகம் – தலா அரை டீஸ்பூன், பெருங்காயப் பொடி -1 சிட்டிகை.
செய்முறை:- துவரம்பருப்பை நன்கு வேகவிடவும். வெந்ததும் இதில் தோலுரித்து நறுக்கிய சின்ன வெங்காயம் , தோலோடு நான்காக வெட்டிய மாம்பழத்தைப் போட்டு வேகவிடவும். கொட்டையையும் போடலாம். இதில் உப்பு புளியைக் கரைத்து ஊற்றி வறுத்து நுணுக்கிய சாம்பார் பொடி போட்டு வெந்ததும் இறக்கி எண்ணெயில் கடுகு, உளுந்து, சீரகம், பெருங்காயப்பொடி தாளித்துச் சேர்க்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக