12.ஆரஞ்சு சப்பாத்தி
தேவையானவை:- ஆட்டா – ஒரு கப், ஆரஞ்சு சாறு – அரை கப், உப்பு, சீனி – தலா கால் டீஸ்பூன், சீரகப் பொடி – கால் டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை:- ஆட்டாவில் உப்பு, சீனி, சீரகப் பொடி சேர்த்து ஆரஞ்சு சாறை சிறிது சிறிதாக விட்டு கெட்டியாகப் பிசையவும். பத்து நிமிடம் ஊறியதும் சப்பாத்திகளாகத் திரட்டி சுற்றிலும் நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக