எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

3. சேனைக்கிழங்கு கூட்டு

3. சேனைக்கிழங்கு கூட்டு.

 

தேவையானவை:- சேனைக்கிழங்கு – கால் கிலோ, துவரம்பருப்பு – வேகவைத்தது ஒரு கப், பெரிய வெங்காயம் – 1, சாம்பார் பொடி – 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி – 1 சிட்டிகை, சீரகம், உளுந்து – தலா ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – 1, எண்ணெய் – 3 டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு.

 

செய்முறை:- சேனைக்கிழங்கைத் தோல் சீவி கால் இஞ்ச் அளவு சதுரத் துண்டுகளாக வெட்டவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வதக்கி வேக விடவும். முக்கால் பதம் வெந்ததும் நீரை வடித்து வைக்கவும். துவரம்பருப்பில் பொடியாக அரிந்த பெரிய வெங்காயம், வெந்த சேனைக்கிழங்கு, சாம்பார் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து அரை கப் நீரூற்றி வேக விடவும். வெந்ததும் உப்பு சேர்த்து எண்ணெயில் சீரகம் உளுந்து கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...