4. சேப்பங்கிழங்கு சாப்ஸ்.
தேவையானவை :- சேப்பக்கிழங்கு – அரை கிலோ, எலுமிச்சை சாறு – அரை டீஸ்பூன், கெட்டி தேங்காய்ப் பால் – முக்கால் கப், அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், மைதா – கால் கப், சோள மாவு – கால் கப் , மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், ரெட் ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு.
செய்முறை :- சேப்பங்கிழங்கை வேகவைத்து தோலுரித்து இரண்டாக நீளவாக்கில் நறுக்கி எலுமிச்சை சாற்றைப் பிழிந்து அரிசி மாவில் புரட்டி வைக்கவும். தேங்காய்ப் பாலில் மைதா, சோளமாவு, மிளகாய்த்தூள், உப்பு, ரெட் ஃபுட் கலர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் திக்காக கரைத்து வைக்கவும். எண்ணெயைக் காயவைத்து சேப்பங்கிழங்குகளை மைதா கலவையில் நனைத்து பொறித்தெடுக்கவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!