13. வெள்ளை முள்ளங்கிச் சட்னி.
தேவையானவை:- வெள்ளை முள்ளங்கி பெரிது – 1, தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன், உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 2 டீஸ்பூன், சீரகம்- அரை டீஸ்பூன், வரமிளகாய் – 4, பெரிய வெங்காயம் – 1, புளி – 2 சுளை, கருவேப்பிலை – 1 இணுக்கு, உப்பு – அரை டீஸ்பூன் , எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன். கடுகு – அரை டீஸ்பூன்.
செய்முறை:- வெள்ளை முள்ளங்கியைத் திருகி சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு வதக்கவும். அதிலேயே வெங்காயத்தையும் நறுக்கிப் போட்டு வதக்கி ஆறவைக்கவும். அதே கடாயில் இரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம், கடலைப் பருப்பு, உளுந்தம்பருப்பு, வரமிளகாய் போட்டு வறுக்கவும். இதில் தேங்காய், புளி, உப்பு, போட்டு வதக்கி ஆறவைத்து இரண்டையும் சேர்த்து அரைக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு கருவேப்பிலையைத் தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!