ப்ராகோலி சாப்பீஸ் :-
தேவையானவை :-
ப்ராக்கோலி – 1, இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன், மிளகாய்ப் பொடி – ½ டீஸ்பூன்,
மைதாமாவு , கடலை மாவு, சோளமாவு – தலா ஒரு டேபிள் ஸ்பூன்., உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய்
– பொறிக்கத் தேவையான அளவு.
செய்முறை:-
ப்ராக்கோலியைப் பூக்களாகப் பிரித்து உப்பு கலந்து வெந்நீரில் போட்டு சுத்தம்
செய்து கொள்ளவும். இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, மிளகாய்ப்பொடி போட்டு நன்கு பிசறி லேசாகத்
தண்ணீர் தெளித்து ஒரு பானில் போட்டு மூடி வைத்து சிம்மில் 5 நிமிடம் வேகவிடவும். தண்டுப்
பாகம் ஓரளவு வெந்திருந்தால் எடுத்துவிடலாம். இல்லாவிட்டால் இன்னும் சிறிது நீர் தெளித்து
தண்டுப்பாகம் அடிப்பக்கம் இருக்குமாறு வேகவிடவும்.
மைதாமாவு, கடலை மாவு, சோளமாவை உப்பு மிளகாய்ப் பொடி சேர்த்துக் கரைத்து வைக்கவும்.
இதில் வேகவைத்த ப்ராக்கோலிப் பூக்களை நனைத்தெடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். ப்ராகோலீஸ் சாப்பீஸை
சூடாக தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
ப்ராக்கோலியில்
உள்ள ஃபோலிக் அமிலம் பார்வைத் திறனை அதிகரிக்கும். காய்கறி வகை என்பதால்
வயிறை நிரப்பும் என்பதோடு எடையும் கூடாது. நார்ச்சத்து நிரம்பியது. எளிதில்
ஜீரணமாகும்.
100
கிராம் ப்ராகோலியில் தினப்படித் தேவையான அளவு விட்டமின் கே யும் விட்டமின்
சி யும் விட்டமின் பி யும் மாங்கனீசும் கிடைக்கிறது.இதில் கார்போஹைட்ரேட்,
புரதம், கொழுப்புச் சத்து குறைவான அளவில் உள்ளது.
இதில்
உள்ள சல்ஃபோ ப்ரொஃபைன் பொரித்தாலோ அவித்தாலோ வறுத்தாலோ மைக்ரோ வேவ்
அடுப்பில் சமைத்தாலோ குறைவதில்லை. இதில் லூட்டீன் மற்றும் சியாக்ஸதீன் ஆகிய
கார்டினாய்டுகள் உள்ளன. இவை குடலில் உருவாகும் பலவித புற்றுநோய்களையும்
தடுக்கின்றன..
கார்ட்டினாய்டு ஆண்டி ஆக்ஸிடெண்டாக செயல்படுவதால் நோய் எதிர்ப்புச் சக்தியையும் உருவாக்குது. ப்ராக்கோலியைக் குழந்தைகளுக்கு அவ்வப்போது கொடுத்து வருவதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம்.
டிஸ்கி:- கருவேப்பிலை கொத்துமல்லி புதினா தளிர் சூப்பைப் பாராட்டிய நெய்வேலி வாசகி எஸ். கே. ஸ்ரீவித்யா அவர்களுக்கு நன்றிகள். :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!