வியாழன், 11 ஆகஸ்ட், 2016

ஆப்பிள் ஃப்ரிட்டர்ஸ். APPLE FRITTERS.

ஆப்பிள் ஃப்ரிட்டர்ஸ்:-

தேவையானவை :-
பச்சை ஆப்பிள் – 2, மைதா – 2 கப், கார்ன் ஃப்ளோர் – 1 டேபிள் ஸ்பூன், பொடித்த சர்க்கரை – முக்கால் கப், 2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர், பட்டை – ஒரு இன்ச் துண்டு  ( பொடிக்கவும் ), உப்பு - ஒரு டீஸ்பூன் , பால் – முக்கால் கப், உருகவைத்த வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், வனிலா எசன்ஸ் – 2 டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-
மைதா, உப்பு, பேக்கிங் பவுடர், பொடித்த சர்க்கரை, பொடித்த பட்டையை ஒரு பௌலில் போட்டுக் கலக்கவும். இன்னொரு பௌலில் கார்ன் ஃப்ளோர், பால் உருகிய வெண்ணெய், வனிலா எசன்ஸ் போட்டு நன்கு அடித்துக் கலக்கவும். இந்தக் கலவையில் மைதாக் கலவையை சிறிது சிறிதாக சேர்த்து மென்மையாகக் கலக்கவும். இதில் தோல் சீவி ஸ்லைஸாகத் துண்டுகள் செய்த ஆப்பிளைத் தோய்த்து நன்கு காயும் எண்ணெயில் பொன்னிறமாக 4 நிமிடங்கள் பொரித்து பொடித்த சர்க்கரையைத் தூவிப் பரிமாறவும்.

ஆப்பிளில் விட்டமின் ஏ அதிக அளவில் இருக்கின்றது. விட்டமின் சி, ஈ, கே, ஃபோலேட், கோலைன் ஆகியனவும் இருக்கின்றன. கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், ஃப்ளூரைட் ஆகியன அதிக அளவில் இருக்கின்றன. ஒமேகா 3 ஃபேட்டி அமிலம் 11.2 மிகி அளவிலும், ஒமேகா 6 ஃபேட்டி அமிலம் 53.8 மிகி அளவிலும் இருக்கின்றன.. ஃபைட்டோஸ்டிரால்ஸ் 15 மிகி இருக்கின்றது.

பச்சை ஆப்பிளில் நிறைய நார்ச்சத்து இருப்பதால் குடல் சுத்தம் செய்வதற்கும் வளர்சிதை மாற்றத்துக்கும் உதவுது. சருமத்தைப் பாதுகாக்குது. தைராய்டு சுரப்பியை சரிவர வைப்பதால் வாதநோய் தவிர்க்கப்படுது. அல்ஸைமர் என்னும் நினைவாற்றல் தடுப்பு நோய்க்கு பச்சை ஆப்பிள் உண்பது சிறந்த மருந்து. ஆஸ்துமா, நீரிழிவு, முதுமை நோயைத் தடுக்கும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுது. முடி வளர்ச்சியை அதிகரிக்குது

தைராய்டு சுரப்பியைச் சீராக வைப்பதாலும் இதயத்தின் செயல்பாடுகளை அதிகரிப்பதாலும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுவதாலும் தினம் ஒரு பச்சை ஆப்பிளை உணவுல சேர்க்கலாம். AN APPLE IN A DAY KEEPS THE DOCTORS AWAY என்ற பழமொழியை உண்மையாக்கலாம். 


ஆப்பிளே வா ! ஆரோக்கியத்த் ா !

ிஸ்கி:- இந்தெசிபி 2016 ஆகஸ்ட் மோகுலத்ில் வெளியானு. இில் சேம்பு வை ரெசிபியைப் பாராட்டியஆர் கே ஹிாஜா & ஆர்.ஜி. காயத்ரி , ிையன்விளஆகியோருக்கு மம் நிறந்தன்றி. !  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு