அஞ்சீர் ஹல்வா
( அத்திப்பழம் )
தேவையானவை:-
காய்ந்த அத்திப்பழம் – கால் கப், நெய் – 3 டேபிள் ஸ்பூன், ஆல்மோண்ட்ஸ்/பாதாம் – ஊறவைத்து
தோலுரித்து பொடித்தது – அரை கப், சர்க்கரை – 4 டேபிள் ஸ்பூன், பால்பவுடர் – 5 டேபிள்
ஸ்பூன், ஏலப்பொடி – கால் டீஸ்பூன், அலங்கரிக்க குச்சியாக நறுக்கப்பட்ட பாதாம் – 1 டேபிள்
ஸ்பூன்.
செய்முறை:-
ஒரு பானில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கும்போது காய்ந்த அத்திப்பழங்களைச் சேர்த்து
3, 4 நிமிடங்கள் வேகவிடவும். மென்மையானவுடன் வடிகட்டவும். மிக்ஸியில் வேகவைத்த அத்திப்பழங்களைப்
போட்டு சிறிது நீர் ஊற்றி அரைத்து வைக்கவும். நெய்யை அடி கனமான பாத்திரத்தில் போட்டு
சூடுபடுத்தவும். பொடித்த பாதாமைப்போட்டு இரண்டு நிமிடம் கிளறவும். இதில் அரைத்த அத்திப்பழ
பேஸ்ட்., பால்பவுடர், சர்க்கரை போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றவும். 5 நிமிடம் விடாமல்
கிளறவும். இறுகியதும் ஏலப்பொடி தூவி இறக்கி பாதாம் துருவல் தூவிப் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக