திங்கள், 29 மே, 2017

18. பப்பாளி வத்தல் குழம்பு :- PAPAYA GRAVY

18. பப்பாளி வத்தல் குழம்பு :-

தேவையானவை:- பப்பாளி – 15 துண்டுகள், சின்னவெங்காயம், பூண்டு – தலா – 10.  தக்காளி – 1, புளி – எலுமிச்சை அளவு, உப்பு – 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், மல்லித்தூள் – 4 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,  தாளிக்க :- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம் – தலா அரை டீஸ்பூன். கட்டி பெருங்காயம் – 1 துண்டு.

செய்முறை:- புளியை ஊறவைத்து உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் போட்டு வைக்கவும். வெங்காயம் பூண்டைத் தோலுரித்து நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம், பெருங்காயம் தாளித்து வெங்காயம் தக்காளி பூண்டைப் போட்டு வதக்கவும். நன்கு சுருள வதங்கியதும் கரைத்த புளித்தண்ணீரை ஊற்றவும். கொதித்து சுண்டி வரும்போது பப்பாளித் துண்டுகளைப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு