ஞாயிறு, 22 ஜூலை, 2018

காரைக்குடி கோழி மசாலை. KARAIKUDI CHICKEN MASALAI.

காரைக்குடி சிக்கன் மசாலை.

தேவையானவை :- கோழிக்கறி - அரை கிலோ. பெரிய வெங்காயம் - 1, சின்ன வெங்காயம் - 10,  தக்காளி - 1 பூண்டு - 4 பல், வரமிளகாய் - 12, சோம்பு - 1 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகு - 10, கசகசா - அரை டீஸ்பூன், தேங்காய் - 1 சில், மல்லி - 1 டீஸ்பூன், எண்ணெய் - 50 மிலி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, மராட்டி மொக்கு தலா - 2, உப்பு - 1 டீஸ்பூன்.

செய்முறை:- கோழிக்கறியை கழுவிப் பிழிந்து வைக்கவும். பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், தக்காளியைப் பொடிப்பொடியாக நறுக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வரமிளகாய், மல்லி, சோம்பு , சீரகம், மிளகு, கசகசாவை வெதுப்பி எடுக்கவும். இத்துடன் தேங்காயும் பூண்டும் சேர்த்து மைய அரைக்கவும்.

கடாயில் எண்ணெயைக் காயவைத்து பட்டை கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, மராட்டி மொக்கு தாளித்து வெங்காயம் பூண்டை வதக்கவும். இதில் சிக்கனையும் போட்டு நன்கு வதக்கி மசாலையையும் தக்காளியையும் போட்டு நன்கு திறக்கவும். இரண்டு மூன்று நிமிடங்கள் நன்கு கிளறி சிறிது தண்ணீர் ஊற்றி மூடி  போட்டு வேகவிடவும். நன்கு வெந்து கழண்டதும் உப்பு சேர்த்து இன்னும்  இரு நிமிடங்கள் வைத்து இறக்கவும். இதை சப்பாத்தி தோசை புல்கா, ருமாலி ரொட்டி , குல்சா  போன்றவற்றுக்கும் சாதத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு