கேப்பை புட்டுக் கொழுக்கட்டை.
தேவையானவை:- கேப்பை மாவு - 1 கப், தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன், தூள் சர்க்கரை/தூள் வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன், நெய் - 1 டீஸ்பூன்.
செய்முறை:- கேப்பையை நன்கு சலித்து லேசாக உப்புத்தூவி தண்ணீர் தெளித்துப் பிசறவும். அது பிடித்தால் கொழுக்கட்டையாகப் பிடிக்கும்படியும் உதிர்த்தால் உதிரவும் வேண்டும். இதுவே பக்குவம். இதை இட்லிச் சட்டியில் துணி போட்டு ஆவியில் வேகவைத்து எடுத்து தூள் சர்க்கரை/வெல்லம் தேங்காய், நெய் கலந்து கொழுக்கட்டையாகப் பிடிக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக