தேவையானவை :- பாசிப்பயறு - அரை கப், சின்ன வெங்காயம் - 8, தக்காளி - 1, சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, உப்பு - அரை டீஸ்பூன், புளி - இரண்டு சுளை, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு உளுந்து சீரகம் - தலா அரை டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை. பூண்டு - ஒரு பல்.
செய்முறை:- பாசிப்பயறை வறுத்துக் குக்கரில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வேகவிடவும். வெந்த பயரில் வெங்காயம் தக்காளியை அரிந்து போட்டு உப்புப் புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி மஞ்சள்தூள், சாம்பார் தூள் போடவும். ஐந்து நிமிடங்கள் நன்கு கொதித்ததும் எண்ணெயில் கடுகு உளுந்து சீரகம் கருவேப்பிலை தாளித்துப் பூண்டைத் தட்டிப்போட்டு இறக்கவும். சூடாக சாதம் இட்லி தோசையுடன் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக