செவ்வாய், 17 நவம்பர், 2020

பாகற்காய் பிட்ளை

பாகற்காய் பிட்ளை


தேவையானவை:- பாகற்காய் - 200 கி. துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், தட்டைப்பயிறு - 1 டேபிள் ஸ்பூன், தேங்காய் - 1 சில்லு, வரமிளகாய் - 5, உளுந்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், வரமல்லி - 2 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகு - 10. சின்ன வெங்காயம் - 8 தக்காளி - 1, புளி - 1 நெல்லி அளவு, உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு உளுந்து , சீரகம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, கருவேப்பிலை - 1 இணுக்கு. 

செய்முறை:- ஒரு டீஸ்பூன் எண்ணெயில் ஸ்லைசாக நறுக்கிய பாகற்காயை வதக்கி சிறிது நீரூற்றி வேகவைத்து இறக்கவும். குக்கரில் துவரம்பருப்பையும் தட்டைப்பயிறையும் தனித்தனியாகக் கிண்ணங்களில் போட்டு நன்கு வேகவைத்து இறக்கவும்.வரமிளகாய், உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மல்லி, சீரகம், மிளகு ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்துத் தேங்காயோடு அரைத்து வைக்கவும். உப்புப் புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறப்போட்டுச் சாறெடுக்கவும். இதை பாகற்காயோடு போட்டு சுத்தம் செய்த வெங்காயம் தக்காளியோடு வேகப்போடவும். மஞ்சள்தூள் சேர்க்கவும். இதில் வறுத்துப் பொடித்த சாம்பார் பொடியைப் போட்டு நன்கு கொதிக்க விட்டுத் தட்டைப்பயிறும் வெந்த துவரம்பருப்பையும் சேர்த்து இறக்கவும். எண்ணெயில் கடுகு, உளுந்து சீரகம் பெருங்காயத்தூள், கருவேப்பிலை தாளித்து கொட்டி உபயோகிக்கவும். 

  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு