வெள்ளி, 27 நவம்பர், 2020

பலகாய் மண்டி.

பலகாய் மண்டி.


தேவையானவை:- நாட்டுக் காய்கள் - முருங்கைக்காய் - 1, கத்திரிக்காய் - 2, வாழைக்காய் - பாதி, ( பலா விதை இருந்தால் வேகவைத்து இரண்டாக நறுக்கி சேர்க்கலாம் ), உருளைக்கிழங்கு - சின்னம் ஒன்று, (மாவத்தல் - 8 , அவரைவத்தல் - 6, தட்டைப்பயிறு - அரை கப்  இது மூன்றையும் வேகவைத்து வைக்கவும்.) பச்சைமிளகாய் - 8, சின்ன வெங்காயம் - 10, வெள்ளைப்பூண்டு - 10, அரிசி களைந்த திக் தண்ணீர் - 2 கப், உப்பு - அரை டீஸ்பூன், புளி - 4 சுளை, எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுந்து - அரை டீஸ்பூன், பெருங்காயம் - 1 துண்டு, கருவேப்பிலை - 1 இணுக்கு. 

செய்முறை:- அரிசி மண்டியில் உப்புப் புளியை ஊறவைக்கவும். காய்கறிகளை இரண்டு இஞ்ச் துண்டுகளாக வெட்டவும். வெங்காயம் பூண்டை உரித்து இரண்டாக நறுக்கவும். பச்சைமிளகாயையும் ஒரு இஞ்ச் துண்டாக நறுக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து, பெருங்காயம் தாளித்து கருவேப்பிலை பச்சைமிளகாயைச் சேர்க்கவும். லேசாக வதங்கியதும் வெங்காயம் பூண்டு, காய்களைச் சேர்த்து இன்னும் சில நிமிடம் வதக்கவும்.இதில் உப்புப் புளியை மண்டியோடு கரைத்து ஊற்றவும். கொதி வந்ததும் மூடி போட்டுப் பத்து நிமிடம் நன்கு வேக வைக்கவும். கடைசியாக வேகவைத்த மாவத்தல் கத்திரிவத்தல், தட்டைப்பயறு போட்டு இன்னும் சில நிமிடம் வேகவைத்து இறக்கவும் . இன்னும் மண்டி திக்காக வேண்டுமென்றால் பச்சரிசி அரை டீஸ்பூன், கால் டீஸ்பூன் வெந்தயம், சிறு துண்டு பெருங்காயத்தை வறுத்துப் பொடித்துப் போடவும். இதுதயிர்சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். இட்லி தோசையுடனும் சாப்பிடலாம். 
  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு